யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் நடாத்தப்பட்ட இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கான நேர்முகத் தேர்விற்கு தோற்றி பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் 2024.07.01ஆந் திகதி தொடக்கம் இலங்கை நிர்வாக சேவையின் விசேட தரத்திற்கு பதவிஉயர்த்தப்பட்டுள்ளார்.

 

1

தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் திரு.சமன் ஸ்ரீ ரத்நாயக்க அவர்கள் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான
திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்று (08.10.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.
இக்கலந்துரையாடலில் தற்போதைய வேட்புமனு கையேற்றல் தொடர்பாக வும், எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்கள் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னேற்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேர்தல்கள் திணைக்கத்தின் பிரதி ஆணையாளார் திரு எஸ். அச்சுதன் அவர்களும் கலந்து கொண்டார்.
 
1
2024 ஆண்டிற்கான சிறுவர் தினமானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் நேற்றைய தினம் 02.10.2024 ஆம் திகதி புதன்கிழமை பி. ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக திருமதி சுஜீபா சிவதாஸ் (ஆணையாளர், நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களம்) அவர்களும், சிறப்பு விருந்தினராக திரு. ஆ. சஜ்ஜீவன் (பிரதிக் கல்விப் பணிப்பாளர், கல்வி அபிவிருத்தி, வலிகாமம் கல்வி அலுவலகம்) அவர்களும் பங்குபற்றி சிறப்பித்தனர்.
இந் நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மற்றும் சிறுவர்களுக்கான பாரிசில்கள் வழங்கப்பட்டன.
ஊடகப் பிரிவு மாவட்டச் செயலகம் யாழ்ப்பாணம்
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்குநோயை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (03.10.2024) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டசெயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கூட்டத்தில் மழைகாலம் வருவதனால் டெங்குக் நோய் வராமல் தடுப்பதற்குரிய வழிவகைகள் ஆராயப்பட்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சமன் பத்திரண, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன், மேலதிக அரசாங்கஅதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலாளர்கள், சுகாதாரவைத்திய அதிகாரிகள், சிரேஷ்ட பொது சுகாதார பரிசோதகர்கள், பிரதேச சபை செயலாளர்கள், சமூக மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5
சமுதாய மட்டப் புனர்வாழ்வு நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டுக்கான மாவட்ட ரீதியாக முதலாம் இடம் பெற்றவர்களுக்கான தேசியமட்ட சுபாபிமானிப் போட்டிக்கு - யாழ்ப்பாண போட்டியாளர்களைத் தெரிவு செய்வதற்கான தெரிவானது இன்றைய தினம் (01.10.2024) நிகழ்நிலை (Zoom) ஊடாக, காலை 10.30 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்டச் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் கண்காணிப்பில் நடைபெற்றது.
சுவாபிமானி 2023 மாவட்ட மட்டத்தில் வெற்றி பெற்ற சிறந்த பிரதேச சுப சக்திஅமைப்பு, சிறந்த சுப சக்தி அங்கத்தவர், சிறந்த CBR பிரதேச வழி நடாத்தல் குழு ,CBR நிகழ்ச்சி திட்டத்தின் மூலம் வீட்டு மட்டத்தில் வெற்றிகரமாக சமூகமயப்படுத்தப்பட்ட மாற்றுத் திறனாளி, சிறந்த காட்சிப்படுத்தும் மட்டத்திலான படைப்பினை மேற்கொண்ட மாற்றுத்திறனாளி, சிறந்த பிரதேச உத்தியோகத்தர் ஆகிய போட்டியாளர்களாக கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5