மாவட்டச் செயலகத்தில் சிரேஷ்ட சாரதியாக அர்ப்பணிப்பான சேவையாற்றி 23 வருட அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லும் திரு. நாகப்பர் குகதாசன் அவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வானது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள் தமது வாழ்த்துரையில், சாரதி கடமை என்பது மிகவும் கடினமான பணி. அப் பணியினை மிகவும் நேசித்து சிறப்பாகவும், துல்லியமாகவும் கடமையாற்றியவர் என்பதுடன் பண்புமிக்கவராக விளங்கியவர். தான் கடமையாற்றிய உயர் அதிகாரிகளுக்கு நம்பகத்தன்மை வாய்தவராக விளங்கியதுடன், சாரதிகளுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர் எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பலர் வாழ்த்துரைகளை வழங்கினார்கள்.
அரசாங்க அதிபர் அவர்களால் பொன்னாடை போர்த்தி வாழ்த்துப் பாமாலை வழங்கி திரு. திருமதி குகதாசன் தம்பதிகள் கெளரவிக்கப்பட்டார்கள். திரு. நா. குகதாசன் அவர்கள் ஏற்புரை வழங்கினார்.
இந் நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேச விமான நிலையத்தில் இரண்டாவது புதிய விமான சேவை இண்டிகா (Indiga) விமான சேவை நேற்றைய தினம் (01.09 2024 ) தனது சேவையினை ஆரம்பித்தது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இச்சேவை மூலம் கலந்து கொண்டு முதலில் வரும் சுற்றுலா பயணிகளுக்கு நினைவுப் பொதிகள் வழங்கி வரவேற்றாா்.
இந்நிகழ்வில் யாழ் .இந்திய துணைத்தூதுவர், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர் மாவட்ட விமானப் படை அதிகாரிகள், தொழிற்துறைத் திணைக்கள அதிகாரிகள், வடமகாண கலாசாரத் திணைக்கள அதிகாரிகள், யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஹோட்டல் முகாமையாளர்கள், வர்த்தக சங்க பிரதிநிதிகள் ஆகியோா் பங்கு பற்றியிருந்தனர்

சுங்க திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவினர் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களுடன் இன்றைய தினம் (02.09.2024) நன்பகல் 1.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இதன்போது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் Ms. சிறிநிதி கருணாரட்ன, சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் திரு. சுதந்த சில்வா, தெல்லிப்பளை பிரதேச செயலாளர் மற்றும் சுங்கத் திணைக்கள உயர்மட்ட அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலைய அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (02.09.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், தெல்லிப்பளை பிரதேச செயலாளர், விமானப் படை அதிகாரிகள், Airport & Aviation servies pvt( Ltd) நிறுவன உதவி முகாமையாளர், பலாலி விமான நிலைய செயற்பாட்டு முகாமையாளர், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பின் உதவிப் பணிப்பாளர் , தொழிற்துறைத் திணைக்களம் , வீதி அபிவிருத்தி திணைக்களம் சந்தைப்படுத்தல் பிரிவு ஆகியவற்றின் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

சனாதிபதித் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (02.09.2024) காலை 9.00 மணிக்கும் 10.30 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 04 ஆம் திகதி பொலிஸ், மாவட்டச் செயலகம் மற்றும் மாவட்ட தேர்தல்கள் அலுவலகத்தில் கடமையாற்றுபவர்களுக்கும், 05 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கும் 06 ஆம் திகதி பிற அரச நிறுவனங்களில் கடமை யாற்றுபவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் மற்றும் பொலிசாருக்கும் அஞ்சல் மூல வாக்களிப்பு நடைபெறவுள்ளதாகவும், இவ் அஞ்சல் வாக்களிப்பானது ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்கள் போலவே செயற்பட்டு, இட ஒழுங்கமைப்பு, முகவர்களுக்குரிய ஏற்பாடுகள் போன்றவற்றை முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதா போன்ற விடயங்களை கண்காணிப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ள உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலகர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபட்டு தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதன்போது சனாதிபதி தேர்தலில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலகர்களுக்கான
கடமைகள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயமலர்வில் அஞ்சல் வாக்குகள் அடையாளமிடும் தினத்தன்று கண்காணிப்பு நடவடிக்கைக்கு செல்லும் அலுவலர்களாக நியமிக்கப்பட்ட உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.






