டெங்கு தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (14.10.2024) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இதன் ஒரு அங்கமாக இன்றைய தினம் யாழ்ப்பாண மாவட்டத்தில் டெங்கு நோய் தொடர்பான அறிமுகம், டெங்கு நோயின் தற்போதைய நிலைமை, டெங்கு நோய் வராமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்,டெங்கு நோய் ஏற்பட்டால் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் போன்ற விடயங்கள் தொடர்பாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் அவர்களால் விழிப்புணர்வு கருத்துரை வழங்கப்பட்டது.
இவ் நிகழ்வில் மாவட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், சுகாதார வைத்திய அதிகாாிகள் மற்றும் பொது சுகாதார உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்ட மட்ட தமிழ்மொழி மூலமான தேசிய கலை இலக்கியப் போட்டியானது இன்றைய தினம் (13.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட போட்டியாளர்களாக பல மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

மாவட்ட மட்ட ஆங்கில மற்றும் சிங்கள மொழி மூலமான தேசிய கலை இலக்கியப் போட்டியானது இன்றைய தினம் (12.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இப் போட்டியின் ஆரம்ப நிகழ்வில் மாவட்ட கலாசார உத்தியோகத்தர், பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள் உட்பட போட்டியாளர்களாக பல மாணவர்களும் பங்குபற்றினார்கள்.

விஜயதசமி பூஜை இன்றைய தினம் (12.10.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
பூஜையினைத் தொடர்ந்து அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் அலுவலகர்களின் பிள்ளைகளுக்கு ஏடு தொடக்கி வைக்கப்பட்டது.

இயலாமை உடைய நபர்களுக்கான தொழில் ஆதரவை ஊக்கப்படுத்துவதற்கான நிகழ்ச்சித்திட்டத்தின் (ESPD) மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (09.10.2024) காலை 09.00மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள், மாவட்டத்தில் சென்ற வருடம் வழங்கப்பட்ட இலக்குகளை வெற்றிகரமாக அடைந்துள்ளமையையும் இவ்வருடத்தில் இலக்கினை அடைவதற்கு மாவட்டத்தில் சமூக சேவைகள் மற்றும் மனிதவள அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பங்களிப்பின் அவசியத்தினையும் வலியுறுத்தினார். மேலும் JICA நிறுவனத்துடன் இணைந்து, 2022- 2025 வரையான காலப்பகுதியில் மாற்றுத்திறனாளிகளை தொழிலில் ஈடுபடுத்தும் நபர்களின் எண்ணிக்கை 50 என்ற இலக்கினை அடைவதற்கு பங்களிப்பு தெரிவித்ததுடன், இத் திட்டத்திற்குரிய மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் இணைந்து மாவட்ட ரீதியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை உரிய பிரதேச செயலகத்தில் முன்னேற்ற மீளாய்வு கூட்டங்களை ஏற்பாடு செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்து இத் திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்கிவரும்ஜப்பான்JICA நிறுவனத்திற்கும் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இக்கலந்துரையாடலில் ஜப்பான்JICA திட்ட இணைப்பாளர் திரு. Shimizy Takachi, சமூக சேவைகள் திணைக்களத்தின் சமூக சேவைகள் உத்தியோகத்தர்கள், மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர்கள் மாவட்ட மனித வள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.






