2024 ஆண்டிற்கான சிறுவர் தினத்தையொட்டி இதுவரை பிறப்புச் சான்றிதழை பதிவு செய்யாத சிறுவர்களுக்கான நடமாடும் சேவையானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் 01.10.2024 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணி தொடக்கம் பி.ப 04.00 மணி வரை மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும், இப்பிறப்பு சான்றிதழ் ஆவணம் ஒருவருக்கு அடிப்படையானது எனவும், பிள்ளைகளின் வாழ்வில் மிகவும் முக்கியத்துவமானது எனவும் தெரிவித்தார். மேலும், சில பிறப்புச் சான்றிதழ்களை பதிவு செய்வதில் உள்ள இடர்பாடுகள் மத்தியிலும், இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்டப் பிரதி பதிவாளர், பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவிபதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.
இன்றைய நடமாடும் சேவையில் காலங்கடந்த பிறப்பு பதிவு 41 சிறுவர்களுக்கும், உத்தேச வயதுப்பத்திரம் 05 பேருக்கும், பிறப்புச் சான்றிதழ் திருத்தம் 11 பேருக்கும், இறப்பு பதிவு 03 பேருக்குமாக 60 பயனாளிகள் பயனடைந்தார்கள்.
இந் நிகழ்வில், பிரதிப் பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்ட அஹதிய்யா பாடசாலை மாணவர்களுக்கான வழிகாட்டல் கருத்தரங்கு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம்(29.09.2024) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் பயிற்சிக் கருத்தரங்கில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் எங்களுடைய மாவட்டத்தினை பொறுத்தவரை பல மதங்களைச் சேர்ந்த பல்லினமக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்ற மாவட்டமாக காணப்படுகின்றது.இஸ்லாமியர்கள் அஹதிய்யா பாடசாலைகள் மூலமாகவும் இந்துக்கள் அறநெறி பாடசாலைகள் ஊடாகவும் அதேபோன்று பெளத்தர்களும் கிறிஸ்தவவர்களும் தங்களுடைய மார்க்க நெறிமுறைகளுக்கூடாக மாணவர்களை ஆற்றுப்படுத்துகின்ற அல்லது நல்வழிப்படுத்துகின்ற இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர் எனவும் இத்தகைய அஹதிய்யா பாடசாலைகள் யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கி வருவது
மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்தார்.மேலும் இன்றைய சூழலில் பல்வேறு பிரச்சினைகளுக்கு மத்தியில் இளையோர் சமுதாயமும் இளைஞர்களும் முன்னேறவேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதெனவும் அச்சுறுத்துகின்ற பல விடயங்கள் உங்கள் பிள்ளைகளை சூழ்ந்திருக்கின்ற போதிலும் பிள்ளைகளை நல்லொழுக்கம் சார்ந்து வளர்த்தெடுப்பதற்கும் ஆரோக்கியமான சமுதாயத்தினை உருவாக்கிக் கொள்வதற்கும் இத்தகைய அஹதிய்யா போன்ற செயற்பாடுகள் உறுதுணையாக இருப்பதாகவும் இத்தகைய செயற்பாடுகளினை மேற்கொள்பவர்களுக்கு தனது நன்றியினையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து அஹதிய்யா பாடசாலையின் முக்கியத்துவங்கள், போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய தெளிவூட்டல்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தன.
இக் கருத்தமர்வில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பிரிவு பொறுப்பாளர் திரு. A.S.M.ஜாவித் , இக்ரஃ அஹதிய்யா பாடசாலையின் தலைவர். B.A.S.சுப்யான் மெளலவி,
சமுதாய சீர்திருத்த அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.V.தர்மினி
(நீதவான் நீதிமன்ற வளாகம்- யாழ்ப்பாணம்),
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. S.M.நிஸ்தாக், முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. M.இல்ஹாம்,
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. M.ஹபீல், இக்ரஃ அஹதிய்யா பாடசாலையில் கல்வி கற்கும் கதீஜா மகா வித்யாலயம் மற்றும் ஒஸ்மானிய்யா கல்லூரியை சேர்ந்த 50 மாணவர்கள், ஆசிரியர்கள் , பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் பெற்றோர்கள் பலர் கலந்துகொண்டார்கள்.
1 2 3 4  6 7 8 5
 

சனாதிபதித் தேர்தல் தொடர்பாக யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள பூர்வாங்க நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபரும், தெரிவத்தாட்சி அலுவலருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் தெரிவிப்பு.

நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் தொடர்பாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் இன்றைய தினம் (26.09.2024) காலை 09.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களை அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்கள்.
இச் சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர், யாழ்ப்பாணத்தில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கியமைக்காக தெரிவத்தாட்சி அலுவலருக்கும், உத்தியோகத்தர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்ததுடன், தேர்தல் சிறப்பாகவும் சுமூகமாகவும் நடைபெற்றதாகதெரிவித்தார்கள்.
ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பாளர்கள் யாழ்ப்பாணத்தின் தேர்தல் கண்காணிப்பு நடவடிக்கைகளிலும், எம்முடன் பல முன்னாயத்த கலந்துரையாடல்களில் ஈடுபட்டமைக்காக தெரிவத்தாட்சி அலுவலர் என்கின்ற ரீதியில் அரசாங்க அதிபர் தமது நன்றியினைத் தெரிவித்தார்.
இச் சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவின் கண்காணிப்பாளர்கள் திரு. நிக்கோலஸ் குகூலிஸ் மற்றும் ஜோஹான்னா வான் சம்பீக் மற்றும் மாதுமை பரந்தாமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
1 2 3
யாழ்ப்பாண மாவட்டத்தில் சனாதிபதித் தேர்தலானது நீதியாகவும், சுமூகமாகவும், நடைபெற ஒத்துழைப்பு நல்கிய வாக்களிப்பு, வாக்கெண்ணல், மேற்பார்வை ,குழுக்கடமைகளில் ஈடுபட்ட அனைத்துத் தரஉத்தியோகத்தர்கள், மாவட்ட தேர்தல் திணைக்கள உதவி ஆணையாளர், உத்தியோகத்தர்கள், பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள், விசேட அதிரடிப் படையினர், தீவக கடற்போக்குவரத்தில் ஈடுபட்ட கடற்படையினர், நெடுந்தீவிலிருந்து வாக்குப் பெட்டிகளை உலங்குவானூர்தி மூலம் கொண்டுவருவதற்கு உதவிய விமானப்படையினர், பிரதேச இணைப்பு அலுவலக கடமைகளில் ஈடுபட்ட பிரதேச செயலாளர்கள், உத்தியோகத்தர்கள் போக்குவரத்து சேவையினை வழங்கிய இலங்கை போக்குவரத்துச் சபை, தனியார் போக்குவரத்துச்சங்கம்,சாரதிகள், சிற்றூழியர்கள், உடனுக்குடன்தேர்தல் முடிவுகளை வெளியிட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சகல தரப்பினர்களுக்கும் அரசாங்க அதிபர் என்கின்ற ரீதியிலும், தெரிவத்தாட்சி அலுவலர் என்கின்ற ரீதியிலும் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தமது உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்தார்கள்.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்