யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வருகை தந்த ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவினர் (02.09.2024) யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர்.
இச் சந்திப்பில் யாழ்ப்பாண மாவட்டத்தின் தேர்தல் செயற்பாடுகள் தொடர்பாகவும் இதுவரையில் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (30.08.2024) பி.ப 02.00 மணிக்கு நடைபெற்றது.
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் காத்திரமானது. சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் வாக்களிப்பு நிலையத்திற்கான பொறுப்புக்கள், கடமைகள் மற்றும் அதிகாரத்துடன் எடுக்கக் கூடிய தீர்மானங்களைக் கொண்டவர்களாக விளங்குகின்றார்கள் எனவும், இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களின் பங்கானது மிக முக்கியத்துவமானது எனக்குறிப்பிட்டு, தேர்தல் சுதந்தரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

மாவட்ட சுற்றாடல் குழு கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (28.08.2024) மதியம் 12 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நகர்புறங்களில் காணப்படும் கழிவகற்றல் பிரச்சினைகள், திண்ம கழிவு முகாமைத்துவம், வைத்திய கழிவு முகாமைத்துவம் மற்றும் மரநடுகை திட்டத்தில் ஏற்படும் சவால்கள் குறித்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) , திட்டமிடல் பணிப்பாளர் ,உதவி மாவட்ட செயலாளர் , பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , வன பரிபாலன திணைக்கள உதவிப்பணிப்பாளர், மாநகர சபை ஆணையாளர், உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலக உதவி ஆணையாளர், புவிச்சரிதவியல் அளவை சுரங்கங்கள் பணியக அகழ்வுப் பொறியியலாளர், கரையோர பாதுகாப்பு திணைக்கள பொறியியலாளர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (29.08.2024) காலை 09.00 மணிக்கும் பி.ப 02.00 மணிக்கும் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள்
ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுதந்திரமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். வாக்களிப்பு நிலையங்களுக்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய பொறுப்பு மற்றும் அதிகாரத்துடன் எடுக்கக் கூடிய தீர்மானங்களைக் கொண்டவர்களாகவிருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலகர்கள் பிரதான பங்காளிகளாக விளங்குவதனால், இவர்களின் பங்கானது மிகக் காத்திரமானது எனத் தெரிவித்து, ஐனநாயக ரீதியில் வினைத்திறமையாக தேர்தலை நாடத்துவதற்கான ஒத்துழைப்பினை நல்குமாறு கேட்டுக்கொண்டார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் சிரேஷ்ட தலைமைதாங்கும் அலுவலகர்களாக நியமிக்கப்படவுள்ள உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும் இன்றைய தினம் (28.08.2024) காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள், பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.
மேலும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திற்காக 826 திட்டங்களுக்காக 322 மில்லின் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், வடக்குமாகாண அமைச்சின் பிரதம செயலாளர் திரு.இளங்கோவன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட கட்டளை தளபதியின் பிரதிநிதி, மத்திய மற்றும் மாகாண அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்தலைவர்கள், முப்படையினர், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்







