சனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்குசீட்டுக்களை விநியோகிக்கும் உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்களுடனான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (22.08.2024) மாலை 2.00 மணிக்கு நடைபெற்றது.
இதன்போது சனாதிபதி தேர்தலில் தபால் மூல வாக்களிப்பு கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கான
கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக பிரதேச செயலாளர்களுக்கான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (22.08.2024) நன்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக பிரதேச செயலாளர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
 
1 2 3 4 5
யாழ்ப்பாண மாவட்ட மட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் 2வது காலாண்டுக்குரிய குழுக்கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (22.08.2024) மு. ப 9.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கருத்து தெரிவித்த மாவட்ட
பதில் அரசாங்க அதிபர் அவர்கள் பிரதேச செயலகங்களுக்கு கிடைக்கப்பெறும் சிறுவர் முறைப்பாடுகள் தொடர்பாக பிரதேச செயலாளர்கள் இறுக்கமான நடைமுறைகளைப் பின்பற்றுமாறு கூறியதுடன், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர், பெண்கள் ,முதியோா் தொடர்பான உத்தியோகத்தர்கள் மேற்படி வகுதியினர் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கலந்துரையாடி ஒக்டோபர் 15ம் திகதிக்கு முன்னதாக மாவட்ட செயலகத்திற்கு அறிக்கையிடுமாறும் தெரிவித்திருந்தார்.
மேலும் பாடசாலை இடை விலகல் மற்றும் மீளிணைப்பு செயற்பாடுகள், சிறுவர் துஸ்பிரயோகம், பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக் கொடுத்தல் , பிரதேச மட்ட சிறுவர் பெண்கள் முறைப்பாடுகள், பிரதேச மட்டத்தில் தீரக்கப்பட முடியாத பிரச்சினைகள் , பாடசாலை பஸ் சேவை போன்ற விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள் , உதவி பிரதேச செயலாளர்கள்,வலயக்கல்விப் பணிப்பாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ,பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் ,மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக சிறுவர் , பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4
பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் ,ஏனைய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (22.08.2024) மு. ப 11.00 மணிக்கு மாவட்டச் செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட பிரதம கணக்காளர், பிரதேச செயலாளர்கள், உள்ளகக் கணக்காய்வாளர் , பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பிரதேச செயலக உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள் , மற்றும் மாவட்ட செயலக துறைசாா் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 4 3
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதி தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் (21.08.2024) காலை 10.00 மணிக்கும் பி.ப 02.30 மணிக்கும் இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள் ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் தேர்தல் கடமைகளுக்காக நியமிக்கப்படும் உத்தியோகத்தர்கள் தேர்தல் சுமுகமாகவும், நீதியாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டதுடன், அந்த வகையில் கிராம அலுவலர்களின் பங்களிப்பும் காத்திரமானது எனத் தெரிவித்தார்.
சனாதிபதித் தேர்தல் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ.கி.அமல்ராஜ் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் மாவட்டத்தின் அனைத்து நிர்வாக கிராமஅலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4