தேர்தல்கள் ஆணைக்குழுவின் அறிவுறுத்தலுக்கு அமைய, சனாதிபதித் தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெறாத காரணத்தினால், இரண்டாம் மற்றும் மூன்றாம் விருப்பு வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றது.
ஊடகப் பிரிவு, மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்.
எதிர்வரும் செப்ரெம்பர் மாதம் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள சனாதிபதித் தேர்தல் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் (09.09.2024) காலை 10.00 மணிக்கு நடைபெற்றது.
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபையின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முன்னேற்ற மீளாய்வு கூட்டம் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தர்சினி அவர்கள் தலைமையில் இன்றைய தினம் (10.9.2024) காலை 9.00மணிக்கு மாவட்ட மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இவ் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டத்தில் யாழ்ப்பாணம், வவுனியா , கிளிநொச்சி மாவட்ட போதை தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுக்கான சேவை வழங்குனர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இன்றைய தினம் (06.09.2024) மு. ப. 11.00 மணிக்கு நடைபெற்றது.
தெரிவு செய்யப்பட்ட சேவை வழங்குனர்களால் வழங்கப்படும் சேவைகள் தொடர்பாக விரைவுபடுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், கணக்காளர் (பெறுகை), சேவை வழங்குனர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







