தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் நடாத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம் இன்றைய தினம் (06.08.2024) காலை 9.00 மணிக்கு ராஜா கீறீம்கவுஸ் மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட தொகைமதிப்பு ஆணையாளரும் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபருமாகிய திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இதுவரை நடைபெற்ற தொகைமதிப்பு செயற்பாடுகளில் ஈடுப்பட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும் உதவி பிரதேச செயலாளர்களுக்கு தனது பாரட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்ததோடு அவர்களுக்குரிய மெச்சுரைகளையும் வழங்கிவைத்தார்.
இந் நிகழ்வில் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5
மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் ஒழுங்குபடுத்தப்பட்ட உணவுத் திருவிழாவும் விற்பனைக் கண்காட்சியும் இன்று (05.08.2024) பி.ப 03.00 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் பிரதம விருந்தினரான யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
85 ற்கும் மேற்பட்ட முயற்சியாளர்களை உள்ளடக்கிய வகையில் பாரம்பரிய உணவுகள், பனை சார் மற்றும் கைவினைப் பொருட்கள், தைத்த ஆடைகள், தோல் உற்பத்திப் பொருட்கள் மற்றும் வங்கிச் சேவைகளையும் கொண்ட 85 ற்கு மேற்பட்ட கண்காட்சி விற்பனைக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இன்றிலிருந்து மூன்று தினங்கள் நடைபெறவுள்ளது. (ஆவணி மாதம் 5 ஆம் திகதி பி.ப 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 வரையும், 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி)
மேலும் இசை நிகழ்வு, நாடகம் நிகழ்வு , வீரதீர விளையாட்டு மற்றும் பொம்மலாட்டம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகளும் நடைபெறவுள்ளன.
இன்றைய ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்ப்பாணம் மற்றும் நல்லூர் பிரதேச செயலாளர்கள் உள்ளடக்கிய பதவிநிலை உத்தியோகத்தர்கள், வர்த்தக வங்கியின் பிராந்திய முகாமையாளர், வர்த்தக சங்கத்தின் தலைவர் மற்றும் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள், பொது மக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
3 1 2 4 5 
பாடசாலை சிறுவர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு தொடர்பாக போக்குவரத்து சேவை வழங்கும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகளுக்கான விழிப்பணர்வுச் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (31.07.2024) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்வில் சிறுவர் துஸ்பிரயோகங்களை அடையாளம் காணுதல், சிறுவர்களுக்கான பாதுகாப்பான பயணம், தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் செயற்பாடுகள் தொடர்பாக சாரதிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், உதவி ஆணையாளர் மோட்டார் போக்குவரத்து திணைக்களம், சட்ட வைத்திய அதிகாரி ஆதார வைத்தியசாலை பருத்தித்துறை, மாவட்டச் செயலக பெண்கள் சிறுவர் பிரிவு உத்தியோகத்தர்கள் மற்றும் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் வாகன உரிமையாளர்கள் மற்றும் சாரதிகள் கலந்து கொண்டனர்.
 
1 2 3 4 5 6
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இவ் வருடம் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழான வேலைத் திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வு கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (01.08.2024) காலை 9.00 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலின் போது மாவட்டத்திற்கு இவ்வருடம் அமைச்சினால் அங்கீகரிக்கப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் தற்பொழுது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத்திட்டங்களின் முன்னேற்றங்கள் விரிவாக ஆராயப்பட்டதுடன் குறித்த திட்டங்களின் கடந்த கால செயற்பாடுகள் தொடர்பாக துறை சார்ந்த திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடப்பட்டு தடைப்பட்டுள்ள திட்டங்களை முன்னகர்த்திச் செல்வதற்கான வழிவகைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரமத உள்ளக கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர்கள், உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
1 2 3 4 5 6 7 8
மாவட்ட விலை நிர்ணயக் குழுக்கூட்டத்தின் 2 ஆவது அரையாண்டுக்கான கூட்டமானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (30.07.2024) பி. ப 03.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பொருட்கள் மற்றும் சேவைகள் தொடர்பான விலைகள் ஆராயப்பட்டு நிர்ணயிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதம கணக்காளர், பிரதம பொறியியலாளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
 
 1 2 3