இலங்கை சமுத்திர பல்கலைகழகம் பிராந்திய நிலையம் மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகமும் இணைந்து நாடாத்தும்
முன் கற்றலுக்கான அங்கீகார முறைமை(RPL) ஊடாக கடலக மாலுமிகளுக்கான தேசிய தொழிற்தகமைச் சான்றிதழ் வழங்குவதற்கான திறன் இடைவெளி நிரப்புதல்(Gap filling programme) நிகழ்ச்சித்திட்ட அங்குரார்பண நிகழ்வு இன்றைய தினம் (22.07.2024) யாழ்மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு .மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர்,உதவிப்பணிப்பாளர் இலங்கை சமுத்திர பல்கலைகழகம்,பிராந்திய நிலையம் யாழ்ப்பாணம்,மாவட்ட முகாமையாளர்-
தேசிய தொழில்பயிலுனர் கைத்தொழில் பயிற்சி அதிகார சபை , மாவட்ட இணைப்பாளர் (திறன்)மாவட்டச் செயலகம் ,பயிற்சி வளவாளர்கள்,பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் நான்கு பிரதேச செயலகங்களை உள்ளடக்கிய ( வேலனண,ஊர்காவற்துறை, நெடுந்தீவு,தெல்லிப்பளை) 42 பயனாளிகளுக்கான பயிற்சிகள் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தாதிய பயிற்சி கல்லூரியின் அலுவலர்களுக்கான சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வூட்டும் நிகழ்ச்சியானது உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ. தர்ஷினி அவர்களின் தலைமையில் தாதிய பயிற்சி கல்லூரி மாநாட்டு மண்டபத்தில் இன்று (19.07.2024) காலை சிறப்பாக நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வூட்டல் நிகழ்ச்சியில் தாதிய பயிற்சி மாணவர்கள் மற்றும் மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் அலகு அலுவலர்கள் உள்ளிட்ட 85 பங்குபற்றாளர்கள் பயனடைந்தனர்.
 
6 1 7 5 4 2 3 8 
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் எண்ணக்கருவிற்கு ஏற்ப ஜனாதிபதி நிதியத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (13.07.2024) காலை 8.30 மணிக்கு தந்தை செல்வா கலையரங்கில் ஆரம்பமாகியது.
 
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்றொழில் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து சிறப்பித்திருந்தார்.
 
இந்நிகழ்வில் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களது விசேட உரையானது காணொளி வாயிலாக காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
 
அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாண வலயத்தில் 924 மாணவர்களுக்கும் தீவக வலயத்தில் 225 மாணவர்களுக்கும் வலிகாமம் வலயத்தில் 378 மாணவர்களுக்கும் வடமராட்சி வலயத்தில் 485 மாணவர்களுக்கும் தென்மராட்சி வலயத்தில் 500 மாணவர்களுக்குமாக மொத்தம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 2512 மாணவர்களுக்கான புலமைப்பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டது.மேலும் தெரிவு குடும்பங்களில் உயர்தர மாணவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 6000 ரூபா வீதமும், தரம் ஒன்று முதல் 11 வரையான மாணவர்களுக்கு 3000 ரூபாவும் என 24 மாதங்களுக்கு வழங்கப்படவுள்ளது. மேற்படி நிகழ்வு நான்கு கட்டங்களாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன், வடக்குமாகாண அவைத்தலைவர் கௌரவ சி.வி.கே.சிவஞானம், ஜனாதிபதி செயலக சிரேஷ்ட செயலாளர் திரு.S.M.சமன் பந்துலசேன , வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர், ஜனாதிபதி செயலகத்தின் சிரேஸ்ட உதவிச் செயலாளர், வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் ,
வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் , மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், மாகாண கல்விப்பணிப்பாளர், வலயக்கல்வி பணிப்பாளர்கள் , அபிவிருத்தி லொத்தர் சபையின் உள்ளக கணக்காய்வாளர், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
 
30 29 27 26 25 23 22 21 20 19 18 16 15 14 12 11 10 9 8 6 5 3 2 1
 
 
 
ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் திட்டம் - 2024 நிகழ்வில் நடைபெற்ற கலை நிகழ்வுகளின் பதிவுகள்
 
 
1 1 1 2 1 3 1 4 1 5 
 
 
யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிக் கழகம் மற்றும் வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் இணைந்து நடாத்திய ஆடிப்பிறப்பு விழா உதவி மாவட்டச் செயலாளரும், மாவட்டச் செயலக நலன்புரிக்கழகத் தலைவருமான செல்வி உ.தர்ஷினி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.07.2024) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
 
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபரும், நலன்புரிக் கழக போசகருமான திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
 
மங்கல விளக்கேற்றல், இறை வணக்கம் மற்றும் மாவட்ட செயலக நலன்புரிக்கழக உப செயலாளர் திரு.வை.பகீரதன் அவர்களின் வரவேற்புரையுடன் ஆரம்பமாகிய இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட யாழ்ப்பாண மாவட்ட செயலக பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் உரையாற்றுகையில், ஆடிப் பிறப்பின் சிறப்பினை நாவாலியூர் சோமசுந்தரப் புலவர் அவர்கள் தமது பாடலின் ஊடாக யாழ்ப்பாணத்தின் பண்பாட்டின் பெருமையினை எடுத்துக்காட்டியுள்ளர் எனவும், எமது அடுத்த சந்ததியினருக்கு தமிழர் கலாசார பண்பாட்டு விழுமியங்கள் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்றும் அதற்கு அச்சாணியாக ஆடிப்பிறப்பு விழாவும் அமைகின்றது எனவும் குறிப்பிட்டு, பல கருத்துக்களை முன்வைத்தார்.
 
மேலும், கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் செந்தழிழ் சொல்லருவி திரு.ச.லலீசன் அவர்கள் சிறப்புரையாற்றுகையில், எமது முன்னோர்கள் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை அதாவது தைப் பொங்கல், வருடப் பிறப்பு, ஆடிப் பிறப்பு மற்றும் தீபாவளி என கொண்டாட்டங்களை சிறப்பாக கொண்டாடுவதன் ஊடாக மக்களிடையே புத்துணர்ச்சி ஏற்படுத்த வழிவகுத்தார்கள் எனவும், இதன் பெருமைகளை எமது சமூகம் உணராத சமூகமாக இருந்தவருவதாகவும் குறிப்பிட்டு, ஆடிப்பிறப்பின் மகத்துவம் தொடர்பாக சிறப்பு சொற்பொழிவாற்றினார்.
தொடர்ந்து மாவட்ட செயலக உத்தியோகத்தர் திருமதி.க.லதா அவர்களினால் ஆடிப்பிறப்பு பாடல் இசைக்கப்பட்டது. நலன்புரிக் கழக செயலாளர் திரு. ந. ரதிகுமார் அவர்களின் நன்றியுரையுடன் விழா இனிதே நிறைவு பெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதம கணக்காளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். அதனைத் தொடர்ந்து ஆடிக்கூழ் அனைவருக்கும் பரிமாறப்பட்டது.
 
 
2 10 5 14 15 1 13 4 12 7 3 11 16 17 18 19 8 9
யாழ்ப்பாண மாவட்ட விசேட ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது கௌரவ பிரதம மந்திரி தினேஸ் குணவர்த்தன அவர்களின் தலைமையிலும் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மற்றும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் ஆகியோரின் பிரசன்னத்துடனும் இன்று (12.07.2024) காலை யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் வரவேற்புரையைத் தொடர்ந்து மாவட்டத்தினுடைய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் ஏனைய விடயங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் முன்னேற்ற நிலைமைகள் குறித்து கௌரவ பிரதம மந்திரி அவர்களினால் பரிசீலிக்கப்பட்டது.
இவ் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர், பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,
பிரதம செயலாளர், மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள்,மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந் நிகழ்வின் போது தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு அடை காக்கும் கருவி (Incubator) வழங்கப்பட்டதுடன், தெரிவு செய்யப்பட்ட கடற்றொழிலாளர் குடும்பங்களுக்கு அரிசி பொதிகள் என்பன பிரதம மந்திரி அவர்களினால் வழங்கி வைக்கப்பட்டது.
 
 
 
25 30 28 29 24 23 22 21 20 18 16 15 14 13 11 10 9 8  7 6 5 4 3 2
 1