யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காலிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (15.05.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்
உலக உணவுத் திட்டத்தின் "Food for Assets" செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (15.05.2024) நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 07 பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள (வேலணை, ஊர்காவற்றுறை, நெடுந்தீவு, காரைநகர், உடுவில், சண்டிலிப்பாய்,சங்கானை) பிரதேசங்களில் குளங்களை சிரமதானம் செய்யும் குறைந்த வருமானம் கொண்டவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்கல் திட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன,உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ( Deputy Country Director) Mr.Gerald Rebelli, உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன் மற்றும் பிரதேச செயலாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்
யாழ்ப்பாண மாவட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (10.05.2024) மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் பிரதேச மட்ட அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. மேலும், பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டங்கள், உலக உணவுத்திட்டம், காணி உரித்து சான்றிதழ்கள் வழங்குதல்,நலன்புரி நன்மைகள் (அஸ்வெஸ்சும), குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கிடையிலான சூரியகல அடுக்கு வீட்டுத்திட்டம் மற்றும் விவசாய நவீனமயமாக்கல் திட்டம் உள்ளிட்ட விடயங்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர்( காணி), பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்ட செயலாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி மற்றும் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்
யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை புதிதாக தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்ட 51ஆவது படைப்பிரிவின் யாழ்ப்பாண மாவட்ட இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் WBJK ஜனக விமலரத்ன RWP RSP அவர்கள் மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (10.05.2024) காலை 11.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாக கலந்துரையாடினாா்.
வட பிராந்திய கடற்படைத்தளபதி திரு.காஞ்சன பானகொட அவர்கள் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதியாக இடமாற்றம் பெற்றுச் செல்வதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றையதினம் (10.05.2024) யாழ் மாவட்ட செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடினார்.





