கிராம உத்தியோகத்தர்களுக்காக நாடளாவிய ரீதியாக நடாத்தப்பட்ட போட்டிப் பரீட்சை மற்றும் நேர்முகப்பரீட்சையின் அடிப்படையில் நியமனத்திற்காக தெரிவுசெய்யப்பட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை மாண்புமிகு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் 08.05.2024 அன்று காலை வழங்கி வைத்தார்.
பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டில் அலரிமாளிகையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்டத்தில் கிராம உத்தியோகத்தர் நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட 65 பேருக்கான நியமனக்கடிதங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
 
மேலும் இந்நிகழ்வில் கௌரவ பிரதமர் தினேஷ் குணவர்தன, கடற்தொழில் அமைச்சரும் யாழ் மற்றும் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத்தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ அசோக பிரியந்த, வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி பி.எஸ்.எம். சாள்ஸ் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் குறித்த நியமனங்கள் வழங்கிவைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

யாழ்ப்பாண மாவட்ட விவசாய குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 30.04.2024 காலை 9.30 மணிக்கு நடைபெற்றது.

மாவட்ட விவசாயம் சார்ந்த பிரச்சினைகளை இனங்கணல் மற்றும் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடி அவற்றிற்கு தீர்வுகண்டு மாவட்ட விவசாயத்தை மேம்படுத்தும் நோக்கில் இக் கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளது.

பிரதேச மட்ட விவசாய கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் மேலதிக தீர்மானங்கள் குறித்தும் பிரதேச செயலாளர்களால் கலந்துரையாடப்பட்டது.

கடந்த வருடம் நடைமுறைப்படுத்தப்பட்ட விவசாய நவீன மயப்படுத்தல் திட்டம் குறித்தும் விவசாய நவீன மயப்படுத்தலினால் எதிர்கொண்ட நன்மை மற்றும் சவால்கள் குறித்தும்,
தற்போது அதிகரித்து வரும் தென்னை மரத்தை பாதிக்கும் வெண் ஈ தாக்கம் குறித்தும் அதனை கட்டுப்படுத்தும் செயற்றிட்டங்கள் குறித்தும், விவசாய துறையின் புள்ளிவிபரங்களை துல்லியமாக மேற்கொள்ளல் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது யாழ் பல்கலைக்கழக கிளிநொச்சி வளாக சிரேஷ்ட விரிவுரையாளர் திரு.அரசகேசரி,மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி ஆணையாளர், கால்நடை வளர்ப்பு அபிவிருத்தி ஆணையாளர், அனர்த்த முகாமைத்து பிரிவின் பிரதிப் பணிப்பாளர், மீன்பிடி உதவிப் பணிப்பாளர், நீர்ப்பாசன பொறியியலாளர், மாவட்ட புள்ளிவிபரவியலாளர், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், வங்கி மற்றும் காப்புறுதி சேவை வழங்குநர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்றொழில்  அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ  டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையிலும் வடக்கு மாகாண கௌரவ ஆளுநரும் ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவருமான திருமதி.பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவர்களின் இணைத்தலைமையிலும்  (18.04.2024) அன்று  காலை 9.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில்  இடம்பெற்றது.
கடந்த மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின்  முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதோடு, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் அனுமதியை பெறவேண்டிய திட்ட முன்மொழிவுகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன. 
மேலும், பாடசாலை ஆரம்ப மற்றும் முடியும்  நேரங்களில் கனரக வாகனங்கள் வீதியில் செல்வதை கட்டுப்படுத்தல், எதிர்வரும் 21 ஆம் திகதி தெரிவு செய்யப்பட்ட குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான அரிசி விநியோக திட்டம் மற்றும் வரட்சிக்கான குடிநீர் விநியோக திட்டம் குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டன. 
அத்தோடு கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், வீதி அபிவிருத்திகள்,  யாழ் நகரத்தில் பொது மலசலகூடம் அமைத்தல், போக்குவரத்து சேவைகள், சட்டவிரோத செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 
இக் கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  சிவஞானம் ஸ்ரீதரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ  த.சித்தார்த்தன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல்.இளங்கோவன் மற்றும் கௌரவ ஆளுநரின் செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர்,   மேலதிக அரசாங்க அதிபர்  (காணி), மத்திய மற்றும்  மாகாண அமைச்சின்  திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், விஷேட  அதிரடிப்படை வலய  அதிகாரி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் பிரதிநிதி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.

உணவு பாதுகாப்பு தொடர்பான செயலமர்வு யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 30.04.2024 காலை, மதியம் என இரு அமர்வுகளாக நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இலங்கையில் முதன் முதலில் எமது மாவட்டத்திலேயே உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டார்.

உணவு பாதுகாப்பு தொடர்பாக புள்ளி விவரங்களை சேகரித்து வைத்திருப்பதன் மூலம் எமது மாவட்டத்தில் உணவு பாதுகாப்பில் பின்தங்கிய கிராமம் மற்றும் போசனையற்ற உணவு பழக்கவழக்கமுள்ள பிரதேசத்தை இனங்கண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

உணவு பாதுகாப்பு தொடர்பான திட்டங்களை மேற்கொள்ள உத்தியோகத்தர்களாகிய உங்களின் ஒத்துழைப்பு அவசியம் தேவை என்றும் பதில் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்தார்.

இதன்போது ஜனாதிபதியின் உணவு பாதுகாப்பு ஆலோசகர் திரு.Dr.Buddagoda, உலக உணவு திட்ட அதிகாரிகள் திரு. நியூமத் மற்றும் திரு. அபேஷ், மாவட்ட செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், புள்ளிவிபர திணைக்கள உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் அமுல்படுத்தப்படவுள்ள நகர அபிவிருத்தி திட்ட மீளாய்வு கூட்டம் கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தலைமையில்  16.04.2024 காலை ஒன்பது மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான தொழில்துறை நடவடிக்கைகள், கடற்கரை பூங்கா அமைத்தல், ஊர்காவற்றுறை பிரதேசத்தில் இயற்கை சார்ந்த சுற்றுலா மற்றும்  சுற்றுலா வசதி மையம், அமைத்தல், வேலணை பிரதேசத்தில் முதியவர்களின் ஓய்வுக் கிராமம் அமைத்தல் ஆகியன தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சித்தார்த்தன்,  வடக்கு மாகாண பிரதம செயலாளர் எல். இளங்கோவன், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் ம. பிரதீபன்,கௌரவ  முன்னாள் மாநகர மேயர் வி.மணிவண்ணன் மற்றும் மேலதிக  அரசாங்க அதிபர் (காணி),  யாழ் மாவட்ட பிரதேச செயலாளர்கள், பிரதேச சபையின் செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர், நகர அபிவிருத்தி சபையின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

town dev 01  town dev 02

  

town dev 03  town dev 04

  

town dev 05  town dev 06

  

town dev 07