மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சின் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையில் மாணவர்கள் மற்றும் உத்தியோகத்தர்களிற்கான கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் ( 27.02.2024 )காலை 10.30 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.
மேலும் சிறப்பு விருந்தினராக வட மாகாண கல்வியமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.நடராஜா திருலிங்கநாதன் அவர்களும் கௌரவ விருந்தினர்களாக லயன்.சி. பூபதிஅம்மாள் ( மாவட்ட அரிமாக்கழகம்), லயன்.எல்.சி.ஜெயசீலன்( தலைவர், நல்லூர் வடக்கு அரிமாக்கழகம் ), லயன்.அலெக்ஸ்சாண்டர் நிக்சன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
அத்தோடு மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் ப.பிரதீபன் மற்றும் பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், சமூக பாதுகாப்பு சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு சான்றிதழ்களும், உத்தியோகத்தர்களுக்கு மெச்சுரைகளும் வழங்கிவைக்கபட்டன.
அஸ்வெசும இரண்டாம் சுற்று விண்ணப்பம் கோரல்

அஸ்வெசும விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்வதற்கான அறிவுறுத்தல்
இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் 10ஆவது தேசிய சாரணிய ஜம்போரி 20.02.2024 ஆம் திகதி தொடக்கம் 26.02.2024 ஆம் திகதிவரை திருகோணமலையில் நடைபெறுகிறது.
இலங்கையின் தலைமை சாரணரான அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்றைய தினம்(21) ஆரம்ப நிகழ்வு நடைபெறவுள்ளது.
தேசிய சாரணிய ஜம்போரியில் யாழ்ப்பாண சாரணிய மாவட்டத்தை சேர்ந்த 253 சாரணர்கள் கலந்துகொள்ளவுள்ளனர். இவர்களுக்கான ஜம்போறி ஒத்திகை நிகழ்வு கோண்டாவில் இராமகிருஷ்ண மகாவித்தியாலயத்தில் கடந்த சனிக்கிழமை (17) நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு சாரணிய மாணவர்களுக்கு உணவுப் பொருட்களை கையளித்தார்.
இதேவேளை சாரண மாணவர்களை கெளரவித்து வழியனுப்பும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (19) பிற்பகல் 4.30 மணிக்கு வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்றிருந்தது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் கௌரவ திருமதி. பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வடக்குமாகண ஆளுநரின் செயலாளர் திரு.எம் நத்தகோபாலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் திரு .எம் .பற்றிக் டிறஞ்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட கிளைச்சங்க சாரணர்களின் அணிவகுப்பு இடம்பெற்றதோடு, யாழ் மாவட்ட சாரணர் கிளைச் சங்கக் கொடி யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் மாவட்ட ஆணையாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்,
சாரணர்களுக்கு தேவையான உணவுப்பொருட்களும் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு சாரணிய மாணவர்களை கௌரவ ஆளுநர் வாழ்த்தி வழியனுப்பிவைத்தார்.



வடக்கு மாகாண பிரதம செயலாளர் செயலகம் மற்றும் யாழ் மாவட்ட செயலகம் இணைந்து நடாத்தும் தொழில்சந்தையின் ஆரம்ப நிகழ்வு நேற்று (20) யாழ்ப்பாண மாவட்டத்தில் அமைந்துள்ள இந்திய கலாசார மத்திய நிலையத்தில் இடம்பெற்றது.
இத் தொழில் சந்தை 2024.02.20, 2024.02.21ஆம் திகதிகளில் தொழில் ஆலோசனை கல்வி வாய்ப்புகள், தொழில் பொருத்தப்பாடு மற்றும் தொழில் வழங்கும் செயன்முறை ஆகியவற்றை மையப்படுத்தி இடம்பெறுகிறது.
இதில்,வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், சர்வோதய நிறைவேற்று பணிப்பாளர்,வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதி, வடக்கு மாகாண திணைக்கள தலைவர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரின் இணைப்பாளர் மற்றும் தொழில் வழிகாட்டல் நிறுவனங்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் (16) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில், அதிமேதகு ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.
அத்தோடு கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட ஆலோசனைகளும் ஆராயப்பட்டதோடு பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத்திட்ட முன்மொழிவுகளும் ஆராயப்பட்டன.
இவ் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான் அவர்கள் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாணத்திற்கான குடிநீர் விநியோகம் தொடர்பாக பல்வேறு விடயங்களை குறிப்பிட்டார்.
மேலும், இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்துதல், பேருந்து சேவை, புகையிரத கடவைகளை முன்னுரிமை அடிப்படையில் அமைத்தல், மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகள், சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்தல் உள்ளிட்ட விடயங்களும் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் கடற்தொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, நீர்வழங்கல்துறை அமைச்சர் கௌரவ ஜீவன் தொண்டமான், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு கிழக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன்,பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ஆப்பிரகாம் சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ செல்வராஜா கஜேந்திரன், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் மற்றும் பிரதம செயலாளர், கௌரவ ஆளுநரின் செயலாளர், பிரதி பொலிஸ்மா அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மத்திய மற்றும் மாகாண அமைச்சின் திணைக்களத்தலைவர்கள், வடக்கு மாகாண அமைச்சின் செயலாளர்கள், முப்படையினர், விஷேட அதிரடிப்படை வலய அதிகாரி, யாழ் மாவட்ட கட்டளைத்தளபதியின் பிரதிநிதி, மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், அரச மற்றும் அரசாா்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.





