யாழ்ப்பாண மாவட்ட விவசாய அபிவிருத்தி குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.02.2024 காலை ஒன்பது மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் தென்னை மரங்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கள், கிருமிநாசினி பாவனை, நெல் உற்பத்தி மற்றும் நெல் அழிவுகள், சிறுதானிய ஊக்குவிப்புகள், பழமர உற்பத்திகள், காப்புறுதி நடவடிக்கைகள், நன்நீர் மீன் உற்பத்தி, பனம் விதைகளை நாட்டுதல் மற்றும் உணவுப் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்கள் ஆராயப்பட்டன.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), மாவட்ட விவசாயப் பணிப்பாளர், மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர்,பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைப்பாளர், விவசாய திணைக்களத் தலைவர்கள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், விவசாயிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.



சட்டவிரோதமாக கால்நடைகள் கடத்தப்படுவதனை கட்டுப்படுத்தல் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் 09.02.2024 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதில் சட்டவிரோதமாக கால்நடைகளை கடத்துவோர் மீது சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பாக தீவுப் பகுதிகளில் கால்நடைகளை களவெடுத்தல் மற்றும் சட்டவிரோதமாக கால்நடைகளை இறைச்சிக்காக வெட்டுதல் அதிகமாக காணப்படுகிறது. இதற்கு பொலிஸார் விரைவாக சட்டநடவடிக்கைகளையெடுத்தல் வேண்டுமெனவும் குறிப்பிடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), பிரதேச செயலாளர்கள், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் , பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
நெதர்லாந்து நாட்டின் பதில் தூதுவர் திரு.ஐவன்ரூட்ஜென்ஸ் மற்றும் நெதர்லாந்து நாட்டின் வெளிநாட்டு விவகாரங்களுக்கான அமைச்சின் கொள்கை அதிகாரி திரு.ப்ராங் டீ வைல்ட் ஆகியோர் தலைமையிலான குழு யாழ்ப்பாண மாவட்ட நிகழ்கால நிலவரங்களை அறியும்பொருட்டான சந்திப்புக்களின் ஓர் அங்கமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுடன் இன்றையதினம் (08.02.2024) காலை 8.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடலை மேற்கொண்டுள்ளார்கள்.
இக் கலந்துரையாடலில் கொழும்பில் உள்ள நெதர்லாந்து தூதரகத்தின் வெளியுறவு அமைச்சின் சிரேஷ்ட அரசியல் கொள்கை ஆலோசகர் திரு.நாமல் பெரேரா மற்றும் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் காளிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்றையதினம் (08.02.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினாா்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்து கொண்டிருந்தார்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக சிறுவர் பெண்கள் பிரிவும் தேவை நாடும் மகளிர் அமைப்பும் (WIN) இணைந்து மாவட்ட மற்றும் பிரதேச மட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு இணைய வன்முறை (Cyber)தொடர்பாக விழிப்புணர்வுப் பயிற்சி பட்டறையை நேற்று (07.02.2024) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் மேற்கொண்டது.
இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்கள் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது இணையவழி குற்றம் மற்றும் இணையவழி மோசடிகள் தற்காலத்தில் அதிகரித்தவண்ணம் காணப்படுகிறது எனவும் இணையவழி மூலம் பெண்களிற்கு ஏற்படும் பிரச்சினைகள், போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகவும் தெரிவித்தார்.
மேலும் இப் பயிற்சி பட்டறையில் Win நிறுவனத்தின் சேவைகள் தொடர்பாக நிறுவன முகாமையாளர் சித்ரா கஜானனன், இணைய வன்முறைகளின் அச்சுறுத்தல்கள் தொடர்பாக தகவல் தொழில்நுட்ப உத்தியோகத்தர் (Win) நிரோஜன், இணைய வன்முறைப் பாதிப்புகளுக்கான சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக சட்ட உத்தியோகத்தர் (Win) இந்துகா மற்றும் இணையத்தள வன்முறை தொடர்பிலான பிரச்சினைகளும் சமகாலத்தில் தீர்வு காணக்கூடிய வழிமுறைகளும் தொடர்பாக காங்கேசன்துறை Oic கோணாவள மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ரஞ்சித்காந் ஆகியோர் விரிவுரைகளை மேற்கொண்டார்கள்.
இதில் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், மாவட்ட உளவள இணைப்பாளர், மாவட்ட மற்றும் பிரதேச உளவள உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பயிற்சியாளர்களாக கலந்துகொண்டிருந்தார்கள்.





