யாழ்ப்பாண மாவட்டத்தில் உலக  உணவுத் திட்டத்தின்  அனுசரணையில் தெரிவு செய்யப்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளிலுள்ள குளங்கள் மற்றும் கால்வாய்களை புனரமைப்பு செய்வதற்கான  ஆரம்பகட்ட கலந்துரையாடல் மாவட்ட பதில்  அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 18.03.2024 யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில்  திட்டப் பொறியியலாளர்(WFP) திரு.சந்திரதிலக வீரசிங்க, திரு.எம்.நியூமத் (WFP), ஜனாதிபதி செயலக உலக உணவுத் திட்ட பிரிவுப் பணிப்பாளர் திரு.ஆர்.நிசாந்தன், மாவட்ட செயலக பதில் திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுரேந்திரநாதன், மாவட்ட செயலக பொறியியலாளர் திரு.க.திருக்குமார், கமநல  அபிவிருத்தி திணைக்கள உதவி பணிப்பாளர் பி.தெய்வநாயகி, நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர்(WFP) திரு.V.கஜானன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
 

யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும் சமூக சேவைகள் திணைக்களமும் இணைந்து நடாத்தும் மாற்றுத் திறனாளிகளுக்கான  மாவட்ட தடகள விளையாட்டுப் போட்டி நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில்   (13.03.2024) யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக வடக்கு மாகாண பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திரு.க.நந்தகுமார், சிறப்பு விருந்தினராக சிவபூமி அறக்கட்டளை பாடசாலை தலைவர் கலாநிதி திரு.ஆறுதிருமுருகன், கௌரவ விருந்தினர்களாக வேல்ட் விஷன் நிறுவன பிரதிநிதி, சிவபூமி பாடசாலை  அதிபர் திருமதி.கலைவாணி குகதாசன், கோப்பாய் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலைய பொருளாளர் திரு.அ.ரங்கடம்பநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

மாற்றுத் திறனாளிகளின்  திறன்களை மேம்படுத்தும் வகையில் மாவட்ட மட்டத்தில் இத் தடகள விளையாட்டுப்போட்டி இடம்பெற்றது.

இவ் மாற்றுத் திறனாளிகளுக்கான மாவட்ட மட்ட தடகள விளையாட்டுப் போட்டியில் நல்லூர் பிரதேச செயலகம் முதலாவது இடத்தினையும், பருத்தித்துறை பிரதேச செயலகம் இரண்டாம் இடத்தினையும், சண்டிலிப்பாய் பிரதேச செயலகம் மூன்றாம் இடத்தினையும் பெற்றுக்கொண்டார்கள். மாற்றுத் திறனாளிகளுக்கான
மாவட்ட தடகள விளையாட்டு போட்டியில் வெற்றியீட்டிய விளையாட்டு  வீரர்களுக்கு சான்றிதழ்களும், வெற்றிக் கேடயங்களும் வழங்கிவைக்கப்பட்டது.

மேலும் இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர்,  மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாற்றுத்திறனாளிகள், பெற்றோர்கள் உள்ளிட்டோரும்  கலந்துகொண்டிருந்தார்கள்.

யாழ்ப்பாண மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழலை உருவாக்குதல் செயற்திட்டத்தின் கீழ் மகளிர் தினத்தினை முன்னிட்டு  " பெண்களின் ஆரோக்கியம் " தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று  (12.03.2024) பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கருத்தமர்வில் விரிவுரையாளராக யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் திரு.Dr.சி.ரகுராமன் அவர்கள்  கலந்துகொண்டிருந்தார்.

இக் கருத்தமர்வில் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக நிர்வாக உத்தியோகத்தர்  மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

Health 01  Health 02

  
Health 03  Health 04
  
Health 05  Health 06
  
Health 07

அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடல் பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (13.03.2024)  மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.சஞ்சீவ விமலகுணரட்ன, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு.க.ஸ்ரீமோகனன், உதவி மாவட்ட செயலாளர் திருமதி.எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதில், 2024 ஆம் ஆண்டில் அரச சார்பற்ற  நிறுவனங்களினால் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் காட்சிப்படுத்தப்பட்டது. அத்தோடு யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னுரிமை அடிப்படையில் அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ள வேண்டிய திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டன.

தேசிய ஒற்றுமை  மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தினால்  "யாழ்ப்பாண மாவட்ட சகவாழ்வுச் சங்கத்தினை ஸ்தாபித்தல்" தொடர்பான கலந்துரையாடல்  யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்று  (12.03.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் பல்வேறு இனத்தவர்களும் தமது சமய மற்றும் கலாசார அடையாளங்களை பாதுகாக்கின்ற அதேவேளை ஏனைய இனத்தவர்கள் மற்றும்  இனக்குழுக்களின் இனத்துவ, சமய மற்றும் கலாசார  அடையாளங்களை மதிக்கின்ற, மகிழ்ச்சியுடனும், சகவாழ்வுடனும் வாழ்கின்ற மக்கள் எனும்  அடையாளத்தை பிரதிபலிக்கும் நோக்கில் மாவட்ட சகவாழ்வுச் சங்கம் நேற்றையதினம் உருவாக்கப்பட்டது.

இக் கலந்துரையாடலில் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகத்தின் உதவிப்பணிப்பாளர்களான திரு.சுசந்த குமார மற்றும்  திரு.சதுர் லக்மால் மற்றும் மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவி திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச மட்ட சகவாழ்வு சங்க தலைவர்கள் மற்றும் செயலாளர்கள்  ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

rel01  rel02

  

rel03  rel04

  

rel05  rel06

  

rel07  rel08

  

rel09  rel10