யாழ்ப்பாண மாவட்ட செயலக நலன்புரிச்சங்கம் மற்றும் தெல்லிப்பளை கூட்டுறவு வைத்தியசாலையின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான தொற்றா நோய்களுக்கான இலவச மருத்துவ முகாம் நிகழ்வானது மாவட்ட திட்டமிடல் பணிப்பாளரும் நலன்புரிச்சங்க தலைவருமாகிய திரு .இ.சுரேந்திரநாதன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (19) காலை 8.30 மணிக்குமாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

தற்போதைய காலத்தில் தொற்றா நோயினால் உடல், உள ஆரோக்கியம் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றமையினால் உத்தியோகத்தர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் இந்நிகழ்வு எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதன் போது உத்தியோகத்தர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டதுடன் வைத்தியர்களினால் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.

மேலும் தொற்றா நோய்களான இரத்த சீனி மட்டம், இரத்த கொலஸ்ரோல் மட்டம், உடற்திணிவு சுட்டி, வயிற்றுப்பருமன், இரத்த அழுத்தம் ஆகிய மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, மருத்துவ சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிகழ்வில் வைத்திய அதிகாரிகளான Dr.சிவதாசன் , Dr.இளங்கோ ஆகியோரும் தாதியர்கள் , நலன்புரிச்சங்க செயலாளர்,மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

 448507144 993884008803519 7015248993102217054 n 1   448528465 993883602136893 4688004762091513250 n  448573765 993884325470154 7951922847058016422 n  448642165 993883908803529 519204206050337081 n

448655731 993882902136963 3026133464017943389 n  448680269 993884098803510 1497660953902682453 n 448680612 993883412136912 8756075071033629543 n

யாழ்ப்பாண  மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர்  காலிங்க ஜெயசிங்க அவர்கள் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை  மரியாதை நிமித்தமாக  (15.05.2024 ) அரசாங்க அதிபர் அலுவலகத்தில்  சந்தித்து   கலந்துரையாடினாா்.

இக் கலந்துரையாடலில்  யாழ்ப்பாண மாவட்டத்தின் அண்மைக்கால நிலவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில்  (15.05.2024) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இதன்போது யாழ் மாவட்ட தெங்கு செய்கை மற்றும் பாக்கு செய்கை தொடர்பான தற்போதைய நிலை மற்றும் இவ் வருட திட்டமுன்மொழிவுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் எஸ்.எம்.சமன் பந்துலசேன, உலக உணவுத்திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் Gerald Rebelli, உலக உணவுத்திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத் மற்றும் மாவட்ட விவசாய பணிப்பாளர், பிரதி மாகாண விவசாய பணிப்பாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள உதவி ஆணையாளர், தென்னை அபிவிருத்தி சபை பிராந்திய முகாமையாளர், கமக்கார அமைப்பின் தலைவர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
 
coconut 01 coconut 02  coconut 03  coconut 04  coconut 05  coconut 06  coconut 07
உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் ( Deputy Country Director) Mr.Gerald Rebelli அவர்கள் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக யாழ் மாவட்டத்திற்கு விஜயம் செய்துள்ளார். இந்த விஜயத்தின் போது யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில் (13.05.2024) சந்தித்து கலந்துரையாடினார்.
இச் சந்திப்பில் "Food for Assets " செயற்றிட்டத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாகவும் இச்செயற்றிட்டம் குறித்து எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் நாளை (14.05.2024) "Food for Assets " செயற்றிட்டத்தை நெடுந்தீவு பிரதேச செயலாளர் பிரிவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கும் நிகழ்விலும் உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான பிரதிப் பணிப்பாளர் அவர்கள் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி குழுவில் உலக உணவு திட்ட அரசாங்க பங்குடமை அதிகாரி திரு.முஸ்தபா நிஹ்மத், உலக உணவுத்திட்ட பொறியியலாளர் திரு.W.A.சந்திரதிலக, மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ.சுரேந்திரநாதன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் வ.தர்சினி ஆகியோர் கலந்துகொண்டனர்.
யாழ்ப்பாண மாவட்ட செயலக இரண்டாம் காலாண்டு கணக்காய்வு முகாமைத்துவ குழுக் கூட்டம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் (15.05.2024) காலை மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
கடந்த கூட்ட அறிக்கை தொடர்பான பிரச்சினைகளுக்கான தீர்வு காண்பதற்காக பிரதம உள்ளக கணக்காய்வாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு மூன்றாம் காலாண்டு கூட்டத்திற்கு முன்னர் அவற்றுக்குரிய தீர்வுகள் எட்டப்படும் என தீர்மானிக்கப்பட்டது.
மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் நிறைவேற்றப்பட்ட, நிறைவேற்றப்படாத திட்டங்கள் தொடர்பாகவும், அவ்வாறான பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் தேசிய கணக்காய்வு முகாமைத்துவ திணைக்கள பணிப்பாளர் சுனில் ஜெயசேகர நிகழ்நிலை ஊடாக கலந்துகொண்டதுடன், பிரதம கணக்காளர் என்.எஸ்.ஆர்.சிவரூபன், பிரதம உள்ளக கணக்காய்வாளர் செ.ரமேஸ்குமார், உதவி கணக்காய்வு அத்தியட்சகர் சுகந்தராஜ் மற்றும் பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட மற்றும் பிரதேச செயலக கணக்காளர்கள், மாவட்ட செயலக உள்ளக கணக்காய்வு கிளை உத்தியோகத்தர்கள், துறைசார் கிளைத்தலைவர்கள், உள்ளிட்டோர் நேரடியாக கலந்துகொண்டிருந்தார்கள்.
 
audit 01  Audit 02 
Audit 03   Audit 04  Audit 05  Audit 06