விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடாத்திய 48 வது தேசிய விளையாட்டுப் போட்டி ஜூன் மாதம் 27 ஆம் திகதி தொடக்கம் 30 ஆம் திகதி வரை யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைபெற்றது. இத்தேசிய உதைபந்தாட்ட விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வு துரையப்பா விளையாட்டு அரங்கில் 30.06.2024 அன்று நடைபெற்றது.
இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக தற்போதைய விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளரும் யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபருமான திரு.க.மகேசன் அவர்கள் கலந்து சிறப்பித்தார்.
இவ் 48 ஆவது தேசிய விளையாட்டு விழாவில் மாகாணங்களுக்கு இடையில் நடைபெற்ற உதைபந்தாட்ட தொடரின் இறுதிப் போட்டியில் வடக்கு மாகாண அணியை எதிர்த்து மத்திய மாகாண அணி மோதிக்கொண்டது. இப்போட்டியில் வடக்கு மாகாண அணி வெற்றியை பெற்றுக்கொண்டது.
மேலும் இந்நிகழ்வில் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் நாயகம், வடக்கு மாகாண பிரதம செயலாளர், யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர், வட மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள்; விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர், வட மாகாண விளையாட்டுத்துறை பணிப்பாளர், விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டு அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், விளையாட்டு பிரிவு உத்தியோகத்தர்கள், பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பெருமளவான பார்வையாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மாவட்ட மட்டத்தில் தொழில் முயற்சியாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெறும் நோக்கில் மாவட்ட ரீதியாக தொழிற்த்துறை மன்றங்களை உருவாக்குதல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (28.06.2024) காலை யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் மாவட்ட தொழிற்த்துறை மன்றங்களை உருவாக்கி தொழில் முயற்சியாளர்களின் தேவைகளை அடையாளம் கண்டு அவர்களை வழிப்படுத்தி தெளிவூட்டும் கலந்துரையாடலாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும்; தொழிற்த்துறை முன்னேற்றங்களை அடைவதற்கு காரணம் தொழில் முயற்சியாளர்கள் என்றும் தற்போது சர்வதேச ரீதியில் பொருட்கள் சேவைகளை ஏற்றுமதி செய்யும் அளவிற்கும், இதற்கு மேலாக வெளிநாட்டவர் எமது நாட்டு உற்பத்திகளை கொள்வனவு செய்யும் அளவிற்கும் பிரபல்யம் அடைந்துள்ளமைக்கு தொழில் முயற்சியாளர்களே காரணம் என தெரிவித்தார்.
அத்துடன் உதவி வழங்குவதற்காக பல தொழிற்த்துறை திணைக்களங்கள் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளதாகவும் அவர்ளுடன் இணைந்து தொழில் முயற்சியாண்மையை பதிவு செய்வதற்கான நியமங்கள் மற்றும் வரையறைகள் தொடர்பான தெளிவூட்டல்களை பெறமுடியுமென குறிப்பிட்டதுடன் பல சவால்களை எதிர்கொண்டு தொடர்ந்து முன்னோக்கி பயணிக்கும் முயற்சியாளர்களுக்கு பாராட்டுக்களையும் தெரிவித்தார்.
தொடர்ந்து இக் கலந்துரையாடலில் தொழில் முயற்சியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் தொழிற்த்துறை திணைக்கள மாகாண பணிப்பாளர், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர், தொழில்த்துறை திணைக்கள உதவி செயலாளர், தொழில்த்துறை திணைக்கள மாவட்ட உத்தியோகத்தர், பிரதேச செயலக தொழிற்த்துறை திணைக்கள உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண வர்த்தக சங்க தலைவர், சிறு தொழில் முயற்சியாளர்கள் மற்றும் துறைசார் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தின் ஏற்பட்டில் மறைந்த திருமதி ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளையின் உதவி திட்டத்தினூடாக நலிவுற்ற குடும்பங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இங்கு கலந்து கொண்டு உரையாற்றிய யாழ் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் 15 பிரதேச செயலாளர்கள் பிரிவுகளிலும் இருந்து தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளான நீங்கள் இந்த சிறிய உதவி தொகையை பெற்று சரியான தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டுமெனவும், இவ்வாறான உதவிகள் கிடைக்காமல் அதிக மக்கள் அவதிப்படும் நிலையில் உங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைத்துள்ளமைக்கு நன்றிகளை தெரிவிக்க வேண்டுமெனவும் இவ்வாறான உதவித் தொகையை யாழ் மாவட்டத்தில் நலிவுற்ற மக்களுக்கு வழங்க முன்வந்த திருமதி.ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளைக்கு நன்றிகளை தெரிவித்திருந்தார்.
மேலும் இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த பொது நம்பிக்கை நிதிய நீதிபதி ஜிஹான் பிலபிற்றிய அவர்கள் யாழ் மாவட்டத்தில் இந்த உதவி திட்டத்தை வழங்க அனுமதித்த யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களுக்கு நன்றிகளை தெரிவித்ததோடு யாழ் மாவட்டத்தைச் சேர்ந்த ரெஜினா சம்பந்தநாதன் அறக்கட்டளையின் உதவி திட்டங்களை அரசாங்க அதிபரின் கோரிக்கைகளுக்கு அமைவாக செயற்படுத்துவதோடு இனிவரும் காலங்களில் யாழ்ப்பாண மாவட்ட மக்களுக்கும், பாடசாலை மாணவர்களுக்கும் வழங்க தீர்மானித்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.
யாழ் மாவட்டத்தில் 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து நிரந்தர வேலை இல்லாத பொருளாதார நெருக்கடியில் இருக்கும் மிகவும் நலிவுற்ற 31 குடும்பங்களுக்கு இந்த உதவித்தொகை வழங்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ.தர்சினி, சட்ட ஆலோசகரும் ஓய்வுபெற்ற நீதிபதி திரு.அம்ஜாட், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் உள்ளிட்டபலர் கலந்துகொண்டனர்.

யாழ்ப்பாண மாவட்ட சிறுவர் அபிவிருத்தி குழுவின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்டத்திற்குட்பட்ட பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை பிறப்பு பதிவுசெய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனைய நபர்களிற்கு பதிவாளர் நாயகம் திணைக்களத்தினால் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை நிகழ்வானது மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.06.2024) காலை 10.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் யாழ்ப்பாண மாவட்டத்தில் பிறப்பு பதிவு செய்யாத சிறுவர்கள் மற்றும் ஏனையோரை அடையாளம் கண்டு பிறப்பு சான்றிதழ் பெற முடியாதுள்ளவர்களது பிரச்சினைகளுக்கு மாவட்ட பதிவாளர் நாயகத்துடன் நேரடியாக கலந்துரையாடி தீர்வு காணும் முகமாக இவ் பிறப்பு பதிவு செய்யும் விசேட நடமாடும் சேவை ஒழுங்குபடுத்தப்பட்டிருப்பதாகவும் இத்தகைய செயற்பாடுகளை மேற்கொண்டு வருகின்ற மாவட்ட பிரதிபதிவாளர்,பிரதேச செயலகங்களை சேர்ந்த பதிவாளர்கள், உதவிபதிவாளர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்திருந்தார்
இந் நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி.உ.தர்சினி ,பிரதி பதிவாளர் நாயகம் திரு.கே.நடராஜா, மேலதிக மாவட்ட பதிவாளர்கள்,மாவட்ட செயலக பதிவாளர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் மற்றும் சிறுவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
இவ் நடமாடும் சேவை மூலமாக 83 பயனாளிகள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சு மற்றும் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாண மாவட்ட ஊராட்சி முற்றக் கலந்துரையாடல் நிகழ்வானது கிறிசலிஸ் நிறுவனத்தின் அனுசரணையுடன் இன்றைய தினம் (20) காலை 9.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டத்தில் அடையாளபடுத்தபட்ட பெண்கள் மற்றும் சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் , அதற்கு உள்ளடங்கலான தீர்வுகள் மற்றும் எதிர்கால செயற்பாடுகளுடன் முன்னோக்கி செல்லுதல் சம்பந்தமாகவும் கலந்துரையாடப்பட்டது.
இதில் வடக்கு மாகண மகளிர் விவகார அமைச்சின் செயலாளர் திரு. பொ. வாகீஷன் , யாழ் மாவட்ட உதவி செயலாளர் செல்வி .உ. தர்சினி , பிரதேச செயலர்கள் , பல் துறை சார் அரச உயர் அலுவலர்கள் ,கிறிசலிஸ் நிறுவன சிரேஷ்ட திட்ட இணைப்பாளர், பால்நிலை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை ஆலோசகர் , பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பெண் உறுப்பினர்கள், ஒன்றியத்தின் உறுப்பினர்கள் , யாழ் மாவட்ட குடிசார் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.






