மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் ஆவணி மாதம் 05 ஆம் திகதி தொடக்கம் 07 ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் முற்றவெளிப் பகுதியில் நடைபெறவுள்ள உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சி, விற்பனை தொடர்பான முன்னாயத்தக் கலந்துரையாடலின் ஒரு பகுதியாக தொழில்முயற்சியாளர்களுடனான கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (29.07.2024) காலை 10.00 மணிக்கு மாவட்டச் செயல கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தொழில்முயற்சியாளர்களுக்கான சுகாதாரம், போக்குவரத்து மற்றும் இதரவசதிகளை ஏற்படுத்துவது தொடர்பாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர், யாழ் மாநகர சபை பொதுச் சுகாதார பரிசோதகர், தொழில் முயற்சியாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

பன்முகப்படுத்தப்பட்ட வரவு செலவுத்திட்டம் மற்றும் பிரதேச அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வுக் கூட்டம் யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.07.2024 ) மு. ப 11.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், பிரதேச செயலாளர்கள், பிரதி, உதவித் திட்டமிடல் பணிப்பாளர்கள், கணக்காளர்கள், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்.

நெடுந்தீவு - நெடுவூர் திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024 ) பி. ப 02.30 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் நெடுந்தீவு பிரதேச செயலாளர், உதவி மாவட்டச் செயலாளர், சுகாதார வைத்திய அதிகாரி, கடற்படை அதிகாரி, பொலிஸ் அதிகாரி, தொடர்புடைய திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் நெடுந்தீவு ஊரும் உறவும் அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

வினைத்திறனான அரச சேவையினை வழங்குவதற்கான கருத்தூட்டல் செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2024 ) காலை 09.00 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
இச் செயலமர்விற்கு நிகழ்நிலை தொழில்நுட்பத்தினூடாக ( Zoom) அமைச்சின் மேலதிகச் செயலாளர் திரு. தம்மிக்க முத்துக்கல அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் Ms. டிலாந்தி சிறிவர்த்தன, TISL அலுவர் Ms. சகுந்தலைஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.
இச் செயலமர்வில் மாவட்டச் செயலக பிரதம கணக்காளர், உதவி மாவட்டச் செயலாளர், திட்டமிடல் பணிப்பாளர் உட்பட பதவி நிலை உத்தியோகத்தர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தின் பிரதேச செயலாளர்கள், உதவி பிரதேச செயலாளர்கள், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் நிர்வாக கிராம அலுவலர்கள் கலந்துகொண்டார்கள்.

மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் நடாத்துவது தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (23.07.2024) காலை 10.00 மணிக்கு அரசாங்க அதிபர் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன்போது கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் அவர்கள் உணவுத் திருவிழா மற்றும் கண்காட்சியும் விற்பனையும் எதிர்வரும் ஆவணி மாதம் 5, 6, மற்றும் 7 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தின் பண்ணை சுற்றாடலில் நடைபெறவுள்ளது எனவும், ஆவணி மாதம் 5 ஆம் திகதி பி.ப 3.00 மணி தொடக்கம் இரவு 9.00 வரையும், 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் காலை 10.00 மணி தொடக்கம் இரவு 9.00 மணி வரை நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளதாகவும், இதில் யாழ் மாவட்டத்திலுள்ள 85 தொழில் முயற்சியாளர்கள் கலந்துகொள்ளவுள்ளனர் எனவும் குறிப்பிட்டார். மேலும், உள்ளூர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான கண்காட்சியும் விற்பனையும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேற்படி உணவுத் திருவிழாவில்
பொதுமக்கள் கலந்துகொண்டு உள்ளுர் தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் இசை நிகழ்வுகள், நாடக நிகழ்வுகள் மற்றும் பெம்மலாட்டம் போன்ற பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெற ஒழுங்கு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் கலந்துரையாடலில் மாநகர சபை ஆணையாளர், யாழ்ப்பாண பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர், மாவட்ட விவசாய பணிப்பாளர், தொல்பொருள் திணைக்கள உத்தியோகத்தர்கள்,பொலிஸ் அதிகாரிகள், மின்சாரசபை உத்தியோகத்தர்கள், முயற்சியாளர்களின் பிரதிநிதிகள், பெண்கள் அமைப்பின் பிரதிநிதிகள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.






