அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் உள்ள உயர்பாதுகாப்பு வலய காணிகள் கையளிப்பு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் 10.03.2024 மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

காணிகளுக்கான உரிமங்களை கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க ஆகியோரால் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர்களிடம் உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் நாட்டின் தேசிய பாதுகாப்புக்காக படையினர்களிடம் இருக்கும் காணிகளில் ஒரு தொகுதி காணிகள் பொதுமக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கடற்தொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கௌரவ டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதியின் சிரேஷ்ட பாதுகாப்பு ஆலோசகர் கௌரவ சாகல ரத்நாயக்க, ஜனாதிபதி செயலணியின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கான மேலதிக செயலாளர் இளங்கோவன், யாழ் மாவட்ட கட்டளைத்தபதி மேஜர் ஜனரல் சந்தன விக்கரமசிங்க மற்றும் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர்கள், யாழ் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,இராணுவ ,பொலிஸ்,கடற்படை அதிகாரிகள் மற்றும் துறைசார் அதிகாரிகள், பொதுமக்கள், உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

re01  re02

  
re03  re04div>  
re05  re06div>  
re07  re08 

யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கான  பிரிவுபசார விழா மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்  அவர்களின் தலைமையில் 07.03.2024 பிற்பகல் 02 மணிக்கு  யாழ் மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாண மாவட்ட  அரசாங்க அதிபராக 18.01.2023ம் திகதி  முதல் தொடர்ச்சியாக மகத்தான சேவையை  மக்களுக்கு நல்மனதுடன் ஆற்றிய மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் சேவை நலன் பாராட்டு  மற்றும் பிரிவுபசார விழா  சிறப்பாக  நடைபெற்றது.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கு மலர் மாலைகளும் பொன்னாடைகளும்  அணிவிக்கப்பட்டதுடன்,   நினைவுச் சின்னங்களும் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அத்தோடு அரசாங்க அதிபரின் "வாழ்க்கை சுவடுகள் இறுவட்டு" வெளியீடு செய்யப்பட்டதோடு, யாழ் மாவட்ட செயலக மடல் முதற் பிரதியை மேலதிக அரசாங்க அதிபர் மாவட்ட  அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களுக்கு வழங்கி வைத்தார்.

மேலும், இந் நிகழ்வில்  திருமதி சுதாஹரி சிவபாலசுந்தரன் மற்றும் புதல்விகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி) உட்பட  மாவட்ட செயலக  பதவி நிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள் , உதவிப்  பிரதேச செயலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக  உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.

GA 01  GA 02

  

GA 03  GA 04

  

GA 05  GA 06

  

GA 08  GA 09

  

GA 10  GA 11

  

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுவர் மற்றும் பெண்கள் அபிவிருத்திப் பிரிவினால் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான முதலாவது காலாண்டு செயற்குழுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் (27.02.2024) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக் கலந்துரையாடலில் கருத்துத் தெரிவித்த அரசாங்க அதிபர் "பால் மற்றும் பால்நிலைசார் வன்முறைகளை குறைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் வன்முறைப் போக்குகளை குறைத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் குறிப்பிட்டதோடு, பிள்ளைகளை சிறுவயது முதல் சமூகம், கலாசாரம்,ஆன்மீகம், பண்பாடுகளுடன் இணைத்து வளர்க்கப்பட வேண்டுமெனவும் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அத்தோடு பால் மற்றும் பால்நிலை வன்முறைகளை குறைப்பதற்கான செயற்திட்ட முன்மொழிவுகள், பால்நிலைசார் வன்முறைகள் தொடர்பான முன்வைப்புக்கள் போன்ற விடயங்களும் ஆராயப்பட்டன.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர்கள்,பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,உளவளத்துணை உத்தியோகத்தர்கள்,பொலிஸ் உத்தியோகத்தர்கள், கலாசார உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களது பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

DCDC 01 DCDC 02 

 

DCDC 03 DCDC 04 

 

DCDC 05 DCDC 06

யாழ்ப்பாண மாவட்டச் செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப்  பிரிவினால் பாடசாலை மாணவர்களுக்கிடையேயான முயற்சியாண்மை ஊக்குவிப்பு செயற்திட்டத்தில் பங்குபற்றிய மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு மாவட்ட செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்திப் பிரிவின் உதவிப் பணிப்பாளர் தி.தனஞ்சயன் அவர்களின் தலைமையில் (29.02.2024) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில்  இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக மாவட்ட அரசாங்க அதிபர்  அம்பலவாணர் சிவபாலசுந்தரன் அவர்களும் சிறப்பு விருந்தினராக மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் அவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இச் செயற்திட்டம்  விளையாட்டுத்துறை மற்றும்  இளைஞர் விவகார அமைச்சின் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி திணைக்களத்தினால்  நாடளாவிய ரீதியில்  மாணவர்களிடையே முயற்சியாண்மையை ஊக்குவிக்கும்  முகமாக  இடம்பெறுகிறது.

யாழ்ப்பாண மாவட்டத்திலும் இச் செயற்திட்டத்தினை மையப்படுத்தி மாணவர்களிடையே சித்திரம் வரைதல், கட்டுரை எழுதுதல் போட்டிகள் நடாத்தப்பட்டதோடு, வெற்றியீட்டிய   மாணவர்கள்  சான்றிதழ்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்கள்.

மேலும் இந் நிகழ்வில்   இலங்கை வங்கியின்  வட மாகாண  உதவி பொது முகாமையாளர் சிவானந்தம், மாவட்ட மற்றும் பிரதேச செயலக சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

School 01 School 02

  

School 02.2 School 02.3

  

School 03 School 04

  

School 05 School 06

  

School 07 School 08

  

School 09 School 10

  

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் யாழ் மாவட்ட வர்த்தகர்களுக்கான VAT தொடர்பான விழிப்புணர்வும் ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதலும் தொடர்பான கலந்துரையாடல் யாழ் மாவட்ட  பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் இணைப்பதிகாரி  திரு. ந.விஜிதரன் அவர்களின் தலைமையில்   நேற்று   (26.02.2024) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. அம்பலவாணர் சிவபாலசுந்தரன், யாழ் பிராந்திய இறைவரித் திணைக்கள உதவி ஆணையாளர் செல்வி.மு.சிந்துஜா ஆகியோர் கலந்துகொண்டதோடு, ஆரோக்கியமான வியாபார சூழலை உருவாக்குதல் தொடர்பாக கருத்துக்களைத் தெரிவித்திருந்தார்கள்.

மேலும் இக் கலந்துரையாடலில் சதொச நிறுவன முகாமையாளர், காகில்ஸ் நிறுவன முகாமையாளர், ப.நோ.கூட்டறவு சங்க முகாமையாளர்கள், வர்த்தகர்கள், வியாபார உரிமையாளர்கள், வியாபார முகவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.

FaLang translation system by Faboba