தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின்முன்னேற்ற மீளாய்வு மற்றும் 2025 ஆம் ஆண்டுக்கான செயற்றிட்டம் தயாரித்தல் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (17.01.2025) மு.ப 9.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள் இன,மத, மொழி வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையை நிலைநாட்ட இவ் திட்டம் நடைமுறைப் படுத்தப்படுவதாவும் யாழ்ப்பாண மாவட்டம் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக உள்ளதால் மக்கள் உடல், உள ரீதியாகவும், வாழ்வாதார ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளதால் இத்திட்டங்களை வினைத்திறனாக முன்னெடுக்க வேண்டிய தேவை உள்ளதாகவும் குறிப்பிட்டதுடன், வாழ்வாதாரமற்ற குடும்பங்கள் குறிப்பாக பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான வாழ்வாதாரமும் அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்க்க முன்னாயத்த நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டிய தேவைப்பாடுகள் உள்ளதாகவும் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள், 2025 ஆண்டு நடைமுறைப்படுத்தவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் கீழ் நடைமுறைப்படும் திட்டத்தினூடாக கிராம மட்டங்களில் சகவாழ்வு சங்கங்களை உருவாக்குவதுடன் அங்கு காணப்படும் பிரச்சினைகளை ஆராய்ந்து அவற்றுக்கு தீர்வு வழங்குதற்கான செயற்றிட்டங்களை தயாரித்தல் என்பன தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
இக் கலந்துரையாடலில் அநுராதபுரத்திலிருந்து வருகை தந்த கிறிஸ்தவ மதகுருமாா்கள், தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கான செயலகத்தின் தலைவர் திரு. விஜித் ரொஹான் பொ்னான்டோ , பிரதி பணிப்பாளர் திருமதி சன்துனி ஆரியவன்ச, உதவிப்பணிப்பாளர் திரு.சுசந்த குமார உதவிப்பணிப்பாளர் திரு. சன்துன் லக்மால் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ. சுரேந்திரநாதன் மாவட்ட செயலக பிரதித்திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாடு செயலகத்தின் மாவட்ட இணைப்பாளர், தேசிய மொழி திணைக்கள மாகாண பொறுப்பதிகாரி, தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுச் செயலகத்தின் கீழ் பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோா் கலந்து கொண்டனர்.

பால் நிலைசார் வன்முறையினை பதிவு செய்யும் தரவுத் தளத்தினை கையாளவுள்ள உத்தியோகத்தர்களுக்கான செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) பி.ப 02.00 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், பால்நிலைசார் வன்முறைகளை அதாவது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் மேற்கொள்ளப்படுகின்ற முறைப்பாடுகளை இத் தரவுத் தளத்தில் பதிவதற்கும் அதற்குரிய நடவடிக்கைகளை விரைவாக எடுப்பதற்கும், தடுப்பதற்கும் உத்தியோகத்தர்கள் பூரணமாக வினைத்திறனாக செயற்பட வேண்டும் எனவும், தொடர்பாடல் திறனுடனும் உணர்வு பூர்வமாகவும் செயற்பட்டு தரவுத் தளம் வெற்றியளிக்க ஒத்துழைப்பு நல்குமாறும் கேட்டுக்கொண்டார்.
வடமாகணத்தின் 05 மாவட்டங்களிலும் சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலையத்தின் அனுசரணையில் இச் செயற்றிட்டம் விரைவில் உத்தியோகபூர்வமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன், வன்முறை பதிவு செய்யப்படும் இடத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு SMS மூலம் குறுந்தகவல் அனுப்பிவைப்பதற்கு ஏற்றவகையில் தரவுத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், பொது மக்களும் இத் தரவுத் தளம் தொடர்பான தகவல்களைப் பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடுகள் உள்ளது.
இச் செயலமர்வில் உதவி மாவட்டச் செயலாளர், சிறுவர்களுக்கான அபிவிருத்தி நிலைய திட்ட அலுவலர் மற்றும்
மாவட்ட பிரதேச பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கிடையிலான வருடாந்த விளையாட்டு விழா - பரிசளிப்பு நிகழ்வானது யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க.ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) பி.ப 02.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்ட அரசாங்க அதிபர் அவர்கள் தமதுரையில், பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் 35 வகையான போட்டிகள் நடைபெற்றமை சிறப்பான விடயம் எனவும், முதற்தடவையாக நீச்சல் போட்டிக்கான தெரிவும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது எனவும் குறிப்பிட்டதுடன், இப் போட்டிகளில் 200 வரையான வீர வீராங்கனைகள் பரிசில்கள் சான்றுதழ்கள் பெறுவது பாராட்டத்தக்கது எனத் தெரிவித்தார்.
மேலும், தேசிய ரீதியில் எமது வீர வீராங்கனைகள் சாதித்து வருவதாகவும், அந்த வகையில், உதைப்பதாட்டம் ஆண்கள் இம் முறையுடன் தொடர்ந்தும் மூன்றாவது ஆண்டாக தேசிய ரீதியில் சம்பியன் பட்டம் வென்றமை அதிசிறப்பான விடயம் எனவும், கூடைப்பந்தாட்டம் (ஆண்கள் மற்றும் பெண்கள்) இரு பிரிவுகளிலும் இரண்டாம் இடத்தினையும், மெய்வல்லுநர் போட்டிகளில் கோலுன்றிப் பாய்தல் ஆண்கள் போட்டியில் திரு. ஏ. புவிதரன் மற்றும் பெண்கள் பிரிவில் என். டக்சிதா ஆகியோர் தேசியப் போட்டிச் சாதனையுடன் தங்கப்பதக்கமும், குண்டெறிதல் மற்றும் தட்டெறிதல் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் திரு எஸ். மிதுன்ராஜ் இரட்டை வெள்ளிப் பதக்கங்களையும் தேசிய ரீதியாக வென்றுள்ளமையும், பளுதூக்கல் பெண்கள் பிரிவில் ஒரு தங்கம் ஒரு வெள்ளி உட்பட இரண்டு பதக்கங்கள், குத்துச்சண்டை ஆண்கள் பிரிவில் இரண்டு வெண்கலப் பதக்கங்கள் மற்றும் பெண்கள் பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்கமும் தேசிய ரீதியில் பெற்றமையினை குறிப்பிட்ட அரசாங்க அதிபர் அவர்கள், வசதி வாய்ப்புகள் குறைந்த நிலையிலும் கல்வி மற்றும் இதர செயற்பாடுகளுக்கு மத்தியிலும் ஆர்வத்தோடு பங்குபற்றும் சகல வீர வீராங்கனைகளின் எதிர்காலம் ஒளிமயமாக சிறக்க தமது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பிரதேச செயலகங்களுக்கிடையிலான போட்டியில் புள்ளிகளின் அடிப்படையில் முதலாம் இடத்தினை தெல்லிப்பளை பிரதேச செயலக அணியும், இரண்டாம் இடத்தினை பருத்தித்துறை பிரதேச செயலக அணியும், மூன்றாவது இடத்தினை சண்டிலிப்பாய் பிரதேச செயலக அணியும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர்கள், விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் விளையாட்டு வீர வீராங்கனைகள் கலந்து கொண்டார்கள்.

பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்துச் சேவை நடாத்தும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தி உரிமையாளர்களுடான கலந்துரையாடலானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (16.01.2025) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் காலை 10.30 மணிக்கு நடைபெற்றது.
1.கொழும்புத்துறையிலிருந்து யாழ்ப்பாண நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் சிற்றூர்தியின் நேர ஒழுங்குகள் சீர் செய்யப்பட்டது.
2.மருதங்கேணி கட்டைக்காட்டிலிருந்து உடுத்துறைக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவை மற்றும் உசன் கெற்பெலி பகுதிகளிலிருந்து சாவகச்சேரி நகருக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கான இலங்கைப் போக்குவரத்து சபையின் பேரூந்துச் சேவைகள் தொடர்பாக பாடசாலை மாணவர்களின் பாடசாலை நேரத்திற்கு அமைவாக நேர ஒழுங்குகள் சீர்செய்யப்பட்டுள்ளது.
3.அச்சுவேலி இராசபாதை ஊடாக யாழ்ப்பாண நகருக்கு வரும் இலங்கை போக்குவரத்துச் சபையின் பேரூந்தில் பாடசாலை மாணவர்களுக்கான இடையூறு ஏற்படாதவகையில் பேரூந்து சேவை நடைபெறுவதனை சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்களைக் கொண்டு உறுதிசெய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்டச் செயலாளர், இலங்கை போக்குவரத்துச் சபையின் முகாமையாளர் மற்றும் சாலை முகாமையாளர், தனியார் சிற்றூர்தியின் சங்கத் தலைவர் மற்றும் உரிமையாளர்கள், சிறுவர் மேம்பாட்டு மாவட்ட இணைப்பாளர் மற்றும் பிரதேச செயலக சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.