இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 77 வது சுதந்திர தின யாழ்ப்பாண மாவட்ட நிகழ்வு இன்றைய (04.02.2024) காலை 07.30 மணிக்கு அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. இந் நிகழ்வானது அணிவகுப்பு மரியாதை ஆரம்பமாகி - தேசியக் கொடி ஏற்றல், தேசிய கீதம் இசைத்தல், சர்வ மத தலைவர்களின் ஆசியுரை மற்றும் அரசாங்க அதிபர் அவர்களின் உரை உள்ளடங்கலாக சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி, யாழ்ப்பாணம் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை மற்றும் யாழ்ப்பாணம் சென் பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலை மாணவர்களின் பான்ட் (Band) வாத்தியக் குழுவின் அணிவகுப்பும், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரி மற்றும் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை ஆகிய பாடசாலைகளின் தேசிய மாணவர் படையணியின் (Cadet) அணிவகுப்பும், சாரணர்கள் மற்றும் உத்தியோகத்தர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் 51 பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதி, பிரதிப் பொலிஸ்மா அதிபர், கடற்படை மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள், முப்படையின் அதிகாரிகள், மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.
 
4 5 67 8 9 10 12 13 14 15 1718
யாழ்ப்பாண மாவட்டத்தின் கலாசார ரீதியான சுற்றுலாவை மேன்மைப்படுத்தும் வகையில், யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள சுற்றுலா மையங்கள் தொடர்பில் டிஜிற்றல் அடிப்படையிலான சுற்றுலா வழிகாட்டி நூலானது நேற்றைய தினம் (31.01.2025) நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் வைத்து, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கெளரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் முன்னிலையில் அதிமேதகு சனாதிபதி அநுர குமார திசாநாயக்க அவர்களிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களால் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டு வெளியிட்டு வைக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் அனைத்துப் பிரதேச செயலகங்க பிரிவுகளையும் உள்ளடக்கிய வகையில் நூற்றுக்கு மேற்பட்ட கலாசார ரீதியான சுற்றுலா மையங்களை உள்ளடக்கிய வகையில் விஞ்ஞான ரீதியான ஆய்வினூடாகவும், களத்தரிசிப்பினூடாகவும் யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தினால் தயாரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களாக யாழ்ப்பாண மாவட்டத்தின் சுற்றுலா மையங்களையும் சுற்றுலாப் பயனிகளையும் இணைப்பதற்கான பிரதான சரியான பெறுமதிப்படுத்தப்பட்ட தகவல் நூல் இன்மையினால் சுற்றுலா அபிவிருத்தியில் அவை எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதனை உணர்ந்து, இவ் பிரதான இடை வெளியயை நிவர்த்தி செய்யும் நோக்கில் மாவட்டச் செயலகத்தால் பல்வேறு நூல்கள் மற்றும் கையேடுகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு அங்கமாக மேற்படி நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3
இலங்கை மற்றும் மாலைதீவிற்கான IOM நிறுவனத்தின் பிரதானி திருமதி கிறிஸ்ரின் பாகோ அவர்கள் அண்மைய மாதங்களில் புதிதாக பதவியேற்றதனைத் தொடர்ந்து, முதற் தடவையாக யாழ்ப்பாணம் வருகைதந்தமையிட்டு மரியாதை நிமித்தமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம்
(30.01.2025) பி. ப. 01.45 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து, மாவட்டத்தின் தேவைப்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டார்.
இச் சந்திப்பில் IOM நிறுவன பிரதிநிதிகள் உடனிருந்தார்கள்.
 
1 2 3
யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டமானது அதிமேதகு சனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (31.01.2025) காலை 10.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இவ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்திற்கு வருகை தந்த அதிமேதகு சனாதிபதி உள்ளிட்டவர்களை ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவரும் கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சருமான கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் வரவேற்று வரவேற்புரையாற்றினார்.
வரவேற்புரையினைத் தொடர்ந்து யாழ் மாவட்ட மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பான முன்வைப்பு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் ஒருங்கிணைப்புக் குழுவின் செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் முன்வைக்கப்பட்டது.
அதிமேதகு சனாதிபதி அவர்களினால் மக்களின் தேவைப்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டு, மிக முக்கியமான தீர்வுகளும் அறிவிப்புக்களும் வழங்கப்பட்டது.
இக் கூட்டத்தில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் கௌரவ பிமல் ரத்நாயக்க, வடக்கு மாகாண ஆளுநர் கெளரவ நாகலிங்கம் வேதநாயகம், பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சிவஞானம் சிறீதரன், கௌரவ கஜேந்திரகுமார் காங்கேசர் பொன்னம்பலம், கௌரவ கருணாநாதன் இளங்குமரன், கௌரவ வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீ பவானந்தராஜா, கௌரவ ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கௌரவ வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் கௌரவ சி.வி.கே. சிவஞானம், வடக்கு மாகாண அமைச்சின் பிரதம செயலாளர் திரு. இ. இளங்கோவன் மாகாண அமைச்சின் செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், பிரதி பொலிஸ்மா அதிபர், யாழ் மாவட்ட பாதுகாப்பு படைகள், கடற்படை மற்றும் விமானப்படை கட்டளை தளபதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், கமநல சேவை அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
 
1 2 7 3
 4 6 5
 
அரசசார்பற்ற நிறுவனங்களுக்கு இடையிலான மாவட்ட ஒருங்கிணைப்பு கலந்துரையாடலானது மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திரு. க. ஸ்ரீமோகனன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (23.01.2025) காலை 9.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியஅரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள், 2024 ஆம் ஆண்டில் அரச சார்பற்ற நிறுவனங்களினால் ரூபா 983 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டதாகவும், இதுவரை 2025ஆம் ஆண்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் அரச சார்பற்ற நிறுவனங்களால் நடைமுறை ப்படுத்த ரூபா 568 மில்லியன் பெறுமதியான திட்டங்கள் அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது எனவும், குறைநிரப்பு வேலைகளைநிரப்புவதற்காகவே அரச சார்பற்ற நிறுவனங்கள் செயற்பட்டு வருவதாகவும், ஆனால் பிரதேச செயலகங்களுக்கிடையில்ஒதுக்கீடுகளில் வேறுபாடுகள் காணப்படுவதனால் இத் திட்டங்களை இரண்டு வாரங்களில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களையும் அழைத்து மீள ஆராய்ந்து இறுதித் தீர்மானம் எடுக்கலாம் எனவும் தெரிவித்தார். மேலும் அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைய குறிப்பாக "க்ளீன் ஸ்ரீலங்கா" திட்டத்திற்கு அமையவும் அரச சார்பற்ற நிறுவனங்களின் திட்டங்களையும் உள்வாங்கி "செழுமையான நாடு அழகான வாழ்க்கை" என்ற கொள்கைக்கமைய அனைவரும் வினைத்திறனாக செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், சர்வதேச அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள், உள்ளூர் அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
 
 
1 2 3
 
4