8jobfair2இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

8smlearning6SMART LEARNING நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலைகளுக்கு தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வடமாகாண கல்வி அமைச்சிற்கு உதவுதல் எனும் நோக்கத்தின் கீழ் இரண்டாவது செயற்திட்டமான " கிராமப்புற பாடசாலைகளுக்கு இணையவசதி வழங்கும் நிகழ்வு" மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (08.10.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

4jobguidance3இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனித வலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களமானது "நாட்டுக்கு சுமையில்லாத உழைக்கும் தலைமுறை" எனும் தொனிப்பொருளில் ஐப்பசி 04 ஆம் திகதி முதல் ஐப்பசி 10 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியை தேசிய தொழில் வழிகாட்டல் வாரமாக பிரகடனப்படுத்தியுள்ளது.

4vadaeast2வடமராட்சி கிழக்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மணல்பிட்டிகள் தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று( 04.10.2021) காலை 10 மணிக்கு யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.

4slasintro5இலங்கை நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பயிற்சிகளுக்காக இணைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை அதிகாரிகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (04.10.2021) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலாளர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது.