|
யாழ்.மாவட்ட செயலகத்தில் "மாவட்ட ஒருங்கிணைப்பு முன்னாயத்த கூட்டம்" 23.12.2019 (திங்கட்கிழமை) காலை பத்து மணிக்கு யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
மாவட்ட செயலகத்தினால் நடைமுறைப்படுத்தப்படுகின்ற வேலைத்திட்டங்கள், மீள்குடியேற்றம் தொடர்பாக கலைந்துரையாடப்பட்டது. மேலும் கல்வி , நீர் விநியோகம், போக்குவரத்து, வீடமைப்பு, சுகாதாரம், விவசாயம், மின் விநியோகம், நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் உள்ளூராட்சி சபைகள், வர்த்தகம், தொழிற்துறை வேலைத்திட்டங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.
மேலும் படிக்க ...
31.10.2019 ம் திகதிய உதயன் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020 ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்பந்தமான அறிவித்தலில் தெரிவிக்கப்பட்ட பதிவிற்கான இறுதித் திகதி 24.12.2019 ம் திகதி வரை காலநீட்டிப்புச் செய்யப்பட்டுள்ளது.
சமுர்த்தி சிறுவர் கழக மாவட்ட மட்ட போட்டிகளில் வெற்றியீட்டியவர்களிற்கான கௌரவிப்பு 17.12.2019 ( செவ்வாய்க் கிழமை ) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ( காணி), பிரதம கணக்காளர், மாவட்ட செயலக சமுர்த்தி பணிப்பாளர், கிருபாகரன் ( கிருபா லேணர்ஸ்) , பிரதேச செயலாளர்கள், சமுர்த்தி முகாமையாளர்கள், அரச உத்தியோகத்தர்கள் மற்றும் மாணவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.
மேலும் படிக்க ...
யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ இணைப்பு அலகினால் 14.11.2019 - 19.11.2019 ஆகிய காலப் பகுதியில் அனர்த்த முகாமைத்துவ அலுவலகர்கள் மற்றும் முப்படைகள் சகிதம் இருபத்துநான்கு மணி நேரமும் இயங்கக்கூடிய அவசரகால செயற்பாட்டு மையம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க ...
|