15வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நல்லூா் பிரதேச செயலகம் கொண்டாடிய 2025 ஆம் ஆண்டிற்கான பண்பாட்டுப் பெருவிழா இன்றைய தினம் (25.07.2025) வெள்ளிக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் கொக்குவில் செல்வமஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
நல்லூா் பிரதேச செயலாளர் திருமதி.உதயகுமாா் யசோதா அவர்களது தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வின் பிரதம விருந்தினராக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களும், சிறப்பு விருந்தினர்களாக சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தின் தலைவர் உயர்திரு. கலாநிதி ஆறு திருமுருகன் அவர்களும், இராஜேஸ்வரி அறக்கட்டளை நிறுவனர் உயர்திரு.செல்லத்துரை திருமாறன் அவர்களும் கௌரவ விருந்தினராக யாழ் மாவட்ட சிரேஷ்ட கலாசார உத்தியோகத்தர் திருமதி.சுகுணலினி விஜயரத்தினம் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.
அமரர் குழந்தை சண்முகலிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அரங்கில் இடம்பெற்ற இவ்வாண்டிற்கான பண்பாட்டு விழாவானது பல்வேறுபட்ட கலை இலக்கிய விழுமியங்களையும் உள்ளடக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நாச்சிமாா் கோயிலிருந்து பண்பாட்டுப் பேரணியுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் தமிழ் தாய் வாழ்த்து, வரவேற்பு நடனம்,மங்கல இசை, இசைச்சங்கமம், நாடகம் (மாருதப்புரவீகவல்லி) நடனம் (தமிழ் வணக்கம் - நல்லைக் கலாமந்தீர் நடனாலயம் ) இசை நாடகம் (சத்தியவான் சாவித்திரி) என்பன சிறப்பாக நடைபெற்றது.
மூத்த கலைஞர்களுக்கான "கலை ஞானச்சுடர் விருது" மற்றும் இளங்கலைஞர்களுக்கான இளங்கலைஞர் விருதுகள் என்பன அரசாங்க அதிபர் அவர்களால் வழங்கப்பட்டது.
 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15
8சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடனான சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றக் கூட்டம் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (25.07.2025) மு.ப 11.00 மணிக்கு கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து கொண்டு சமுர்த்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பான முன்னேற்றங்கள் ஆராய்ந்தார்.
மேலும், சமுர்த்தி முகாமையாளர்களால் நிர்வாக ரீதியான செயற்பாட்டிற்கான கணினி மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பான கோரிக்கைகள் அரசாங்க அதிபரிடம் முன்வைக்கப்பட்ட போது, அரசாங்க அதிபர் அவர்கள் சமுர்த்தி பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முகாமையாளர்களின் கோரிக்கைகளை எடுத்துக் கூறி கலந்துரையாடினார். மேற்படி கோரிக்கைகளை இவ்வாண்டுக்குள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்வதாக பணிப்பாளர் நாயகம் தெரிவித்ததாக அரசாங்க அதிபரால் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இக் கூட்டத்தில் மாவட்டச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6 7 8 
றேக் ஓட்டோ கண்காட்சி (RAKS AUTO SHOW ) - 2025
றேக் ஓட்டோ கண்காட்சியை யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் (25.07.2025) காலை 10.00 மணிக்கு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.
இக் கண்காட்சியில் சிறப்பு விருந்தினர்களாக சினமன் குளோபல் பி.வி.ரி லிமிடெட் முகாமைத்துவ பணிப்பாளர் திருமதி. சோனல் வீரக்கொடி, டிமோ லங்கா சந்தைப்படுத்தல் பிரதி பொது முகாமையாளர் திரு.சாலக்கா போகோடா அவர்களும் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6 78 9
மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் நிலையங்களை பதிவு செய்யவும் மதிப்பீட்டுக்குமான பிரதிப் பணிப்பாளர் திரு. சம்பிக்க குணதிலக்க அவர்கள் யாழ்ப்பாண அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களை இன்றைய தினம் (25.07.2025) ஆம் திகதி அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.
இதன் போது யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்றாம்நிலை கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத நிறுவனங்கள் பற்றி கலந்துரையாடியதுடன், பதிவு செய்யப்படாத நிறுவனங்களை மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவுசெய்யவும் அது தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடலை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் நடாத்தவும் அரசாங்க அதிபர் அவர்களால் தெரிவிக்கப்பட்டது.
மேலும் மூன்றாம் நிலைக் கல்வி ஆணைக்குழுவின் கீழ் பதிவு செய்யப்படாது தொழிற்கல்வியை நடத்திவரும் நிறுவனங்கள் தொடர்பான தகவல்களை பிரதேச செயலக ரீதியாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மூலமாக பிரதேச செயலாளரின் நெறிப்படுத்தலுடன் பதிவு செய்யவும் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பணிப்பாளுடன், உதவிப் பணிப்பாளர் திரு. எஸ். எஸ். கல்பேச், தேசிய பயிலுநர் கைத்தொழிற் பயிற்சி அதிகார சபை பிரதிப்பணிப்பாளர் திரு. கே. நிரஞ்சன் மற்றும் மாவட்ட திறன் அபிவிருத்தி இணைப்பாளர்
திரு. த.நீலாம்பரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3