6இரசாயனம், உயிரியல், கதிர்வீச்சுஅழ மற்றும் அணுக்கசிவுகளால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை கையாள்வது மாவட்ட மட்ட கட்டமைப்பை உருவாக்கல் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (24.07.2025) காலை 08. 45 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கடந்த காலங்களில் ஏற்பட்ட வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தத்தின் போது ஒத்துழைப்பு நல்கிய முப்படையினருக்கும் மற்றும் உத்தியோகத்தர்களுக்கும் தமது நன்றியினைத் தெரிவித்து, வெள்ள அனர்த்தத்துடன் ஒப்பீடு செய்யும் போது, இரசாயனம் மற்றும் கதிர்வீச்சு, அணுகசிவு போன்ற இடர்களுக்கு எதிர்காலத்தில் பதிலிறுக்கும் வகையில் முன்னாயத்த நடவடிக்கை எடுக்கபடவேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், அண்மையில் தீவுப்பகுதியில் கரையொதுங்கிய பிளாஸ்ரிக் துகள்கள் மற்றும் இரசாயன பாதிப்பு தொடர்பான விழிப்பணர்வு பெரும்பாலான மக்களிடம் இல்லை எனவும் அதேபோல் அணுக்கசிவு மற்றும் கதிர்வீச்சினால் ஏற்படும் ஆபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வும் பெரும்பாலான மக்களுக்கு இல்லாத காரணத்தினால், முதற்கட்டமாக குறிப்பிடப்பட்ட திணைக்கள உத்தியோகத்தர்களுக்கான இச் செயலமர்வு மிக முக்கியம் எனவும் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வுச் செயலமர்வின் வளவாளர்களாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்பணிப்பாளர் திரு. சான் பத்திரன மற்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜா அவர்களும் பங்குபற்றினர். மேலும் இரசாயன, உயிரியல், அணுக்கசிவு, மற்றும் கதிர் வீச்சு பாதுகாப்பு தொடர்பான மாவட்ட மட்ட எதிர்கால அனர்த்த முகாமைத்துவ நடவடிக்கை தொடர்பாக பிரதிப்பணிப்பாளர் திரு ரி. என் சூரியராஜாவால் விபரிக்கபட்டது.
இச் செயலமர்வில் பிரதேச செயலாளர்கள், முப்படைகளின் அதிகாரிகள், திணைக்கள தலைவர்கள், வைத்தியர்கள் மாவட்ட மற்றும் பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.
 
 
1 2 3 45 6 7 8 
6தொல்லியல் திணைக்களத்தின் 135 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தொல்லியல் தின நிகழ்வு யாழ் கோட்டை வளாகத்தில் இன்றைய தினம் (23.07.2025) நடைபெற்றது.
இந் நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றுகையில், எமது வரலாற்று
தொல்லியல் மரபுரிமை சின்னங்கள் மற்றும் மரபுரிமை மையங்களை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும் எனவும், தொல்லியல் மையங்கள் சுற்றுலாத் துறையுடன் இணைந்த வகையில் செயற்படுத்தும் போது மக்கள் இது தொடர்பில் அறிந்து கொள்வதற்கான வாய்ப்பாக அமையுமென்றும் குறிப்பிட்டார்.
யாழ் மரபுரிமைச் சின்னங்களை பார்வையிடுவதை மக்கள் இன்று குறைத்துக் கொண்டு செல்கின்றார்கள் எனவும், பல்வேறுபட்ட தொல்லியல் சின்னங்கள் வரலாற்று பெறுமதி மிக்கவை எனவும், மிகப் பெறுமதியான பொக்கிசமாக யாழ்ப்பாணக் கோட்டை காணப்படுகின்றது எனவும், ஆனால் எமது யாழ்ப்பாண மக்கள் அதனை பார்வையிடுவது குறைவாகவுள்ளதாகவும், காலிக் கோட்டை போல பல்வேறு சுற்றுலாசார் செயற்பாடுகளைக் கொண்ட கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையினை மாற்ற வேண்டும் எனவும் அதற்கான முயற்சிகளும் எம்மால் எடுக்கப்பட்டுவருவதாகவும், ஒரு வாழும் கோட்டையாக யாழ்ப்பாணக் கோட்டையை மாற்றி தமிழ் மரபுரிமைகளை உள்ளடக்கிய கலையம்சங்களை யாழ்ப்பாண கோட்டையில் உள்ளடக்குவதன் மூலம் தமது வாழ்வியலின் குறிப்பிட்ட ஒரு நேரத்தை யாழ்ப்பாண கோட்டையில்கழிப்பதற்கு பலர் முன்வருவார்கள் எனவும் தெரிவித்தார். மேலும், எங்களுடைய மாவட்டத்திலே பல தொல்லியல் சின்னங்கள் இருந்தாலும் மந்திரி மனை போல பல சின்னங்கள் நிலம் சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றது எனவும், தமிழர்களுடைய மரபுரிமை சின்னங்கள் வழக்கொழிந்து போகின்ற நிலையில் காணப்படுகின்றது எனவும் குறிப்பிட்டதுடன், பல்வேறுபட்ட ஆலயங்கள் இன்று நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும், அவ்வாறானநிலையில் புராதான சின்னங்கள் அவற்றை விட்டு அகன்று போகின்ற தன்மை காணப்படுவதாகவும் கவலை தெரிவித்தார்.
மரபுரிமையுடனான சுற்றுலா மேம்பாட்டுக்கு அமையை, எமது பழைய கச்சேரியினை உலக வங்கியின் அனுசரணையில் புனரமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,
நகர அபிவிருத்தி அதிகார சபையினுடைய பங்கு பல்வேறுபட்ட விடயங்களில் எமக்கு கிடைப்பதாகவும் அரசாங்க அதிபர் குறிப்பிட்டு எமது மரபுரிமைகளைப் பேணுவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் எனத் தெரிவித்தார்.
யாழ் மாவட்டத்தின் தொல்லியல் மரபுரிமைகளை தொல்லியல் திணைக்களத்துடன் இணைந்து பாதுகாத்து வரும் தொல்லியல் ஆர்வலர்களை கௌரவிக்கும் முகமாக கடந்த 2024 ஆம் ஆண்டு முதல் "வேரும் விழுதுகளும்" விருதினை மூவருக்கு வருடாந்தம் வழங்கும் திட்டத்தினை யாழ் மாவட்ட தொல்லியல் திணைக்களம் அறிமுகப்படுத்தி இருந்தது.
இதன் பிரகாரம் 2025 ஆம் ஆண்டிற்கான விருதுகளை யாழ் கலாசார உத்தியோகத்தரும் மரபுரிமை செயற்பாட்டாளருமான திரு. மார்க்கண்டு
அருட்சந்திரன், விடுதி உரிமையாளரும் தன்னார்வ மரபுரிமை செயற்பாட்டாளருமான திருமதி
அஜந்தா சுப்பிரமணியம், மரபுரிமை தன்னார்வலரும் மெட்டா நிறுவனத்தின் நிகழ்ச்சி திட்ட முகாமையாளருமான சிவயோகநாதன் பாலயோகஸ்தினி ஆகியோர் தொல்லியல் மரபுரிமைகளை பேணி பாதுகாத்தமைக்காக அரசாங்க அதிபரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் நகர அபிவிருத்தி அதிகார சபை உதவிப் பணிப்பாளர், வட மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளர், யாழ் பல்கலைக்கழக இந்து நாகரிகத் துறை பீடாதிபதி, யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை தலைவர், தொல்லியல் திணைக்கள உதவிப்பணிப்பாளர், மத்திய கலாசார நிதியத்தின் செயற்றிட்ட முகாமையாளர் ஆகியோரும் யாழ் பல்கலைக்கழக கலாசார சுற்றுலாத்துறை மற்றும் தொல்லியல் துறை மாணவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் பாரம்பரிய நிகழ்வுகளும் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
 
 
 
1 2 3 45 6 7 7 9 10
 1ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியப் (UNFPA) பிரதிநிதிகள் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன்
அவர்களை இன்றைய தினம் (22.07.2025 ) காலை 09.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்கள்.
இச் சந்திப்பில்
ஐக்கிய நாடுகள் மக்கள் தொகை நிதியத்தின் பெண்கள் மற்றும் இளைஞர் மேம்பாட்டு நிபுணர் திருமதி மக்கி சக்கியமா, திட்ட ஆய்வாளர் திரு. ருக்சன் லொவல், Alliance Development Trust இன் சமூக நீதிப் பிரிவின் தலைவர் திருமதி சாரா ஆறுமுகம் மற்றும் திட்ட உத்தியோகத்தர் ஜீன் இராஜேந்திரன் ஆகியோா் பங்குபற்றினார்கள்.
இக் கலந்துரையாடலில் விவசாயம் மற்றும் மீன்பிடி துறையில் ஈடுபடும் 25 பெண்கள் மற்றும் இளைஞர் யுவதிகளை தெரிவு செய்து அவர்களை வலுப்படுத்தி தேசிய ரீதியிலான வியாபாரத்துடன் இணைப்பதற்கான செயற்றிட்டத்தினை மேற்கொள்வது தொடர்பாக ஆராயப்பட்டு, சண்டிலிப்பாய் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் பிரிவுகளிலிருந்து பொருத்தமான பயனாளிகளளை தெரிவு செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு கே. சிவகரன் மற்றும் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி ஆகியோரும் பங்குபற்றியிருந்தார்கள்.
 
 
 
1 2 3
யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விளையாட்டுத்துறை அபிவிருத்தி தொடர்பாக கல்லூரி அதிபர் மற்றும் துறைசார் அதிகாரிகளுடான கலந்துரையாலனது அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.07.2025 ) பி. ப 12.30 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், கல்வி, உயர் கல்வி மற்றும் தொழில் கல்வி அமைச்சினால் யாழ்ப்பாண மாவட்டத்தின் விளையாட்டு பாடசாலையாகவுள்ள யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் விளையாட்டு அபிவிருத்திக்கான உட்கட்டமைப்பிற்காக 30 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, திட்டங்களைத் தெரிவு செய்யும் போது நீடித்து நிலைத்திருக்கக் கூடிய வகையில் அமைய வேண்டும் எனவும், தொடர்ச்சியாக உரிய பராமரிப்புத் தேவை எனவும் தெரிவித்து திட்டங்களை ஆராய்ந்தார்.
இதன் போது கல்லூரி அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன் அவர்களால், கல்லூரியில் தற்போது பாவனையில்லாத நீச்சல் தடாகத்தின் புனரமைப்பின் தேவைப்பாடு, மைதானத்தின் வடிகாலமைப்பு மற்றும் இதர தேவைப்பாடுகள் தொடர்பாக எடுத்துக் கூறப்பட்டது.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன், பிரதம கணக்காளர் திரு.எஸ் கிருபாகரன், திட்டமிடல் பணிப்பாளர் திரு.இ சுரேந்திரநாதன், பிரதம பொறியியலாளர் திரு க. திருக்குமார், உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர், கோட்டக் கல்விப் பணிப்பாளர் உள்ளிட்ட விளையாட்டுத்துறை உத்தியோகத்தர்கள் மற்றும் கல்லூரி சமூகத்தின் சார்பில் அதிபர் திருமதி சி. எஸ். ஆர். செல்வகுணாளன், விளையாட்டுப் பொறுப்பாசிரியர் திரு. எம். கோகிலதாஸ் மற்றும் பழைய மாணவர் சங்கத்தின் செயலாளர் திரு. யே. நிரோஷானந், ஆகியோர் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
2பழைய கச்சேரியினை அரசாங்க அதிபருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் நேரடியாக பார்வையிட்டு ஆராய்வு
மரபுச் சுற்றுலா மேம்பாடு மற்றும் தொடர்ச்சியாக பேணுதல் என்ற அடிப்படையில் பழைய கச்சேரியினை புனரமைப்பு செய்தல் தொடர்பாக அரசாங்க அதிபருடன் உலக வங்கி பொருளாதார நிபுணர் குழுவினர் இன்றைய தினம் (21.07.2025 ) பி. ப 03.00 மணிக்கு பழைய கச்சேரியினை பார்வையிட்டு ஆராய்ந்தனர்.
இதற்கு முன்னராக மாவட்டச் செயலகத்தில் 26.05.2025 ஆம் திகதி உலக வங்கி குழுவினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில் சுற்றுலாத் துறை அபிவிருத்தி செய்யும் நோக்கில் பழைய கச்சேரி மற்றும் யாழ்ப்பாண கோட்டை புனரமைப்பின் அவசியம் தொடர்பாக - உலக வங்கி குழுவினரிடம் அரசாங்க அதிபரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களின் நிலையான பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையில் உட்கடுமாணம் மற்றும் சுற்றுலாத்துறையினை விருத்தி செய்தல் தொடர்பிலான அதி மேன்மைதங்கிய ஜனாதிபதி அவர்களின் வழிகாட்டலுக்கு அமைவாக, கடந்த இரு மாதங்களாக வடக்கின அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் செயற்றிட்டங்களையும் அதன் சாத்தியநிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
1 2 3 4 5 6