மகிழ்ச்சியான குடும்பத்திற்கான நேர்முக சிந்தனையினை உருவாக்குதல் மற்றும் தகவல் தொடர்பு மூலம் பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான மீறலைத் தடுத்தல் தொடர்பான பயிற்சிப் பட்டறை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. கே. சிவகரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (21.07.2025) காலை 09.00 மணிக்கு மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இதன் போது தலைமையுரையாற்றிய மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள், குடும்ப வன்முறைகளை குறைப்பதன் மூலம் மகிழ்ச்சியான குடும்பத்தைக் கொண்டு செல்ல முடியும் எனவும், பிரதேச மட்டத்தில் அடையாளம் கண்டு சரியான வழிகாட்டுதல்களை வழங்க இப் பயிற்சிப் பட்டறையினை சரியாக பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ் பயிற்சிப் பட்டறையின் வளவாளராக சுகாதார அபிவிருத்தி காரியாலயத்தின்வைத்திய கலாநிதி காமினி விக்கிரம பங்குபற்றினார்.
இவ் பயிற்சிப் பட்டறையின் தொடக்க நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, வைத்தியகலாநிதி மோகனகுமார் பங்குபற்றினார்கள்.
இப் பயிற்சி பட்டறையில் மாவட்ட பிரதேச சிறுவர் பெண்கள் அபிவிருத்தி உத்தியோத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள், சிறுவர் பெண்கள் பிரிவின் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றாளர்களாக பங்குபற்றினார்கள்.

மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலயத்தில் வழிபாடுகள் இடம்பெற்றது. அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்து கலை கலாசார பேரணி மானிப்பாய் இந்துக் கல்லூரி வரை ஊர்வலமாக நடைபெற்றது. பின்னர் மானிப்பாய் இந்துக் கல்லூரி மண்டபத்தில் நினைவு நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சபாநாயகர் கெளரவ ஜகத் விக்ரமரத்ன அவர்கள் கலந்து சிறப்பித்தார். மேலும், வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான வைத்திய கலாநிதி கெளரவ சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜா, கெளரவ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் திரு. ய. அனிருத்தனன், மானிப்பாய் பிரதேச சபை தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பிரதேச செயலர்கள் உள்ளிட்ட அதிகாரிகள், மானிப்பாய் இந்துக் கல்லூரி சமூகத்தினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்தரின் துறவற வாழ்க்கையும், தமிழ் மொழி, இலக்கியம், இசை, கல்வி உள்ளிட்ட துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பும் நினைவு கூரப்பட்டன.
இந்நிகழ்வானது புத்தசாசன மற்றும் சமய விவகாரங்களுக்கான அமைச்சு, இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ் மாவட்ட செயலகம், யாழ்ப்பாணம் பிரதேச செயலகம், அகில இலங்கை இந்துமா மன்றம் மற்றும் யாழ்ப்பாண தமிழ்ச்சங்கம் ஆகிய அமைப்புகளின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.

மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் தொடர்பான விழிப்புணர்வு
மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான ஆரோக்கியமான வேலைச் சூழல் மற்றும் உணர்வு ரீதியான விவேகம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வானது யாழ்ப்பாண
மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) நண்பகல் 12.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இவ் விழிப்புணர்வு நிகழ்வில் கொழும்பு தேசிய வைத்தியசாலை வைத்தியர் திருமதி வி. சந்திரமோகன் அவர்கள் கருத்துரைகளை நிகழ்த்தினார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மேலதிக அரசாங்க அதிபர் (காணி), உதவி மாவட்டச் செயலாளர் உள்ளிட்ட பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்குபற்றினார்கள்.

அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லா கடன் திட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோா்களுக்கான
அரசு சாரா உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்கள் கற்பதற்கான வட்டியில்லாக் கடன் திட்டம் தொடர்பாக மாணவர்கள் மற்றும் பெற்றோா்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) பி.ப 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய அரசாங்க அரசாங்க அவர்கள், கல்வி அமைச்சின் கீழ் இயங்கம் மாணவர் கடன் பிரிவானது இலங்கையில் கா.பொ.த உயர்தரத்தில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு அரசாங்கத்தால் அரசு சாரா அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் பட்டப் படிப்பை தொடர வட்டி இல்லா கடன் திட்டத்தை செயற்படுத்துகின்றது எனவும், அதற்கான இவ் விழிப்புணர்வில் தெரிவிக்கப்படும் தெளிவூட்டல்களை நன்கு கிரகித்து கேட்டுக் கொள்ளுமாறும் தெரிவித்தார். மேலும் எமது மாணவர்கள் இத் திட்டத்தில் பயன்பெறும் வகையில் அமைய வேண்டும் என்பதற்காககொழும்பிலிருந்து வருகை தந்த கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர், பல்கலைக் கழக போராசிரியர் கள் ஆகியோருக்கு தமது நன்றியினைத் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் தமக்குரிய கற்கை நெறியினை தெரிவு செய்து, எதிர்காலத்தில் ஒளிமயமாக வாழ வாழ்த்துவதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
இவ் விழிப்புணர்வு நிகழ்விற்கு கல்வி மற்றும் உயர் கல்வி அமைச்சின் மேலதிகச் செயலாளர் எச். டி. சந்திம ஜானகி, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் சி. மகேஷ் எதிர்சிங்ஹ, கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் நிர்மலி பலிவற்ற உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள் கலந்து கொண்டனர்.
இத் திட்டத்திற்கான விண்ணப்பங்களை www.studentloan.mohe.gov.lk என்ற இணையத்தளம் மூலம் சமர்ப்பிக்க முடியும் என்பதுடன் ஏனைய விபரங்களையும் அறிந்து கொள்ள முடியும் எனவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
இத் விழிப்புணர்வு தெளிவூட்டலில் உதவி மாவட்டச் செயலாளர், மாவட்ட பிரதேச திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை மாணவர் தூதுவர் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட பாடசாலை அதிபர்களுக்கான பயிற்சி செயலமர்வுமாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (18.07.2025) காலை 09.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், இச் செயலமர்வின் நோக்கமானது பாடசாலைகளில் மாணவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை விளங்கி அவர்களை எவ்வாறு ஆற்றுப்படுத்துவது என்றும், அவர்களை உள நெருக்கடிகளிலிருந்து எவ்வாறு பாதுகாத்தல் என்றும் குறிப்பிட்டு, மாணவர்களை உள நெருக்கடியிலிருந்து பாதுகாப்பதும் அனைவரினதும் பொறுப்பாகும் எனவும் தெரிவித்தார். மேலும், அதிபர், ஆசிரியர்கள் மாணவர்களை எவ்வாறு கையாள்வதுஎன்பதிலும் சூழலை ஆரோக்கியமாக பேணுவதிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அரசாங்க அதிபர் கேட்டுக்கொண்டு, இன்றைய செயலமர்விற்கு மிகவும் பொருத்தமான வளவாளர்கள் கருத்துரைகளை வழங்கவுள்ளதாகவும், அந்த வகையில் உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ் அவர்களினால் வழங்கப்படும் வழிகாட்டுதல்களை பாடசாலைகளில் பின்பற்றுமாறும் கேட்டுக் கொண்டார்.
இவ் செயலமர்வில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் உளமருத்துவ நிபுணர் வைத்திய கலாநிதி எஸ். சிவதாஸ், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பிராந்திய ஆணையாளர் திரு. ரி. கனகராஜ் மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் திரு. இ. ரவிராஜ் வளவாளர்களாக கலந்து கொண்டு கருத்துரைகள் வழங்கினார்.
இச் செயலமர்வில் பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், மாவட்ட மற்றும் பிரதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.







