දිසාපති / දිස්ත්රික් ලේකම්

Mr.M.Piiratheepan
வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகு மற்றும் கலாசார அலுவல்கள் திணைக்களம் ஆகியவற்றின் அனுசரணையுடன், வலிகாமம் வடக்கு பிரதேச செயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து ஏற்பாடு செய்த “பண்பாட்டுப் பெருவிழா – 2026”இன்றைய தினம் (04.09.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் தெல்லிப்பழை இராஜேஸ்வரி மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. வலிகாமம் வடக்கு பிரதேச கலாசார பேரவைத் தலைவரும் பிரதேச செயலாளருமான திருவாட்டி சிவகெங்கா சுதீஸ்னர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், பிரதம விருந்தினராக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான உயர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்து சிறப்பித்தார். சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் அலகின் பிரதிப்பணிப்பாளர் திருவாட்டி தர்சினி நிதர்சன் அவர்களும், கௌரவ விருந்தினராக “கலைக்குரிசில்” திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்களும் கலந்து சிறப்பித்தனர். இந் நிகழ்வில் கௌரவ விருந்தினராக கவிஞரும் மூத்த நாடகவியலாளருமான திருவாட்டி பாகீரதி கணேசதுரை (மாவை பாரதி) அவர்கள் பங்கேற்றார். இவ்வாண்டின் பண்பாட்டுப் பெருவிழா “மாவைப் பண்டிதர்” அமரர் க. சச்சிதானந்தன் அரங்கு (மாவிட்டபுரம்) எனும் அரங்கில் நடைபெற்றது. இந் நிகழ்வில் அரசாங்க அதிபர் அவர்கள், தனது உரையில், ஒவ்வொரு கிராமமும் தனித்துவமான கலை மரபுகளையும் பண்பாட்டு அடையாளங்களையும் கொண்டுள்ளதுடன், அவற்றைப் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உண்டு எனத் தெரிவித்தார். மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியின் தாக்கத்தால் பாரம்பரிய கலை வடிவங்கள் படிப்படியாக சுருக்கப்பட்டு இலத்திரனியல் வடிவங்களுக்கு மாற்றமடைந்து வருகின்ற நிலையில், அவற்றின் அசல் தன்மையையும் பாரம்பரிய அடையாளத்தையும் பாதுகாப்பதற்கான முயற்சிகள் அவசியமானவை என்றும் வலியுறுத்தினார்.see more....පුවත් සහ සිදුවීම්
News
රාජ්ය සේවා මධ්යස්ථාන
யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
|
அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது. இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி யாழ். மாவட்ட சிறுவர் பெண்கள் அபிவிருத்திக் குழுக்கூட்டம் மாவட்ட செயலக அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் அவர்களின் தலைமையில் செவ்வாய்க் கிழமை (28.01.2020) காலை 10 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கூட்டத்தில் கடந்த கூட்டத்திற்கு பின்னரான முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன. கூட்டத்தில் பிரதேச செயலர்கள் சிறுவர் தொடர்பான அலுவலர்கள், அரச சார்பற்ற அமைப்புக்கள் எனப் பலரும் கலந்து கொண்டார்கள்.
ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்வதற்கான கால நீடிப்பு
31.10.2019ம் திகதிய பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட 2020ம் ஆண்டிற்கான ஒப்பந்தகாரர்கள் மற்றும் வழங்குநர்களைப் பதிவு செய்தல் சம்மந்தமான அறிவித்தலிற்குரிய பதிவுக்கான இறுதித் திகதி 29.02.2020ம் திகதி வரை காலநீடிப்புச் செய்யப்பட்டுள்ளது. |












