சமுர்த்தி வங்கி முகாமையாளர்களுடனான நுண்நிதி சம்பந்தமான மீளாய்வுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.04.2025) நண்பகல் 12.00 மணிக்கு அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், யாழ்ப்பாண மாவட்டத்தில் இயங்கும் 33 சமுர்த்தி வங்கிகளின் செயற்பாடுகள் மேலும் வினைத்திறனாக இருத்தல் வேண்டும் எனக்குறிப்பிட்டு பின்வரும் அறிவுறுத்தல்கள் வழங்கினார்.
1.செயற்படாத சிறுகுழுக்கள் மீது பணத்தினை வைப்பிலிட்டு மீள இயக்க நடவடிக்கை எடுத்தல் அல்லது மீளவே இயக்க முடியாது எனில் அதனை முடிவுறுத்துவதற்கு சம்பந்தப்பட்ட வங்கி முகாமையாளர்கள் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் செயற்பாட்டில் உள்ள குழுக்கள் அனைத்திற்கும் ஒரு நபரிற்கு நாளாந்தம் 20/= வீதம் கிரமமாக சேமிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.
2.மே மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் சகல வங்கிகளையும் தரப்படுத்தல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
3.மாதாந்தம் சகல முகாமையாளர்களுக்கும் மாவட்ட மட்டத்தில் அறிவை பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சித் திட்டத்தினையும் முன்னேற்ற மீளாய்வினையும் நடைமுறைப்படுத்த அறிவுறுத்தல் வழங்கினார்.
4.புதிய சிறு குழுக்களை உருவாக்கவும் சேமிப்பினை அதிகரிக்கவும் நடிவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினார்.
5.வேலணை, சாவகச்சேரி, வரணி, ஆவரங்கால், ஊர்காவற்றுறை மற்றும் மருதங்கேணி வங்கிகளின் செயற்பாடுகளை மேலும் விருத்தி செய்வதற்கு அப் பிரிவுகளுக்குரிய சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் எதிர்வரும் மே மாதம் 16 ஆம் திகதி கூட்டத்தினை நடாத்த ஒழுங்கு செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.
6.இன்றைய கூட்டத்தின் முன்னேற்றத்தினை எதிர்வரும் யூன் மாத இறுதியில் மீண்டும் கலந்துராயாடி ஆராய நடவடிக்கை எடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கினார்.
இக் கூட்டத்தில் மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி, மாவட்ட ச் செயலக விடய சமுர்த்தி முகாமையாளர்கள், மாவட்ட கண்காணிப்பு சமுர்த்தி முகாமையாளர், வங்கி முகாமையாளர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4 5 6
கிறிசலிஸ் (Chrysalis) அரச சார்பற்ற நிறுவனத்தினால் மருதங்கேணியில் இயங்கிவரும் பாதுகாப்பு இல்லத்திற்கான ஏறத்தாழ ரூபா 750,000.00 பெறுமதியான உலர் உணவானது கட்டம் கட்டமாக வழங்கப்படவுள்ளதற்கு அமைவாக, முதலாம் கட்டத்தினை நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளர் திரு. ம. பிரபாகரன் அவர்களினால் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களிடம் இன்றைய தினம் (23.04.2025) கையளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் உதவி மாவட்டச் செயலாளர் செல்வி உ.தா்சினி, மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி கி. தயாபரி மற்றும் கிறிசலிஸ் நிறுவனத்தின் சிரேஷ்ட திட்ட இணைப்பாளர் திரு. டி. பிரகாஷ் ஆகியோர் உடனிருந்தார்கள்.
 
 
 
1 2 3
எதிர்வரும் மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக கிராம அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (22.04.2025) மு. ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்றத் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய கிராம அலுவலர்களுக்கு தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும்
மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் வாக்களிப்பு நிலையத்திற்கு பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் அந்தந்த பிரிவுக்குரிய கிராம அலுவலர்கள் வழங்கும் பங்களிப்பும் ஒத்துழைப்பும் மிக காத்திரமானது எனத் தெரிவித்தார். மேலும் இக் கலந்துரையாடல் ஒரு பின்னூட்டலாகவே நடைபெறும் எனவும், நடைபெற்று முடிந்த இரண்டு தேர்தல் கடமைகளில் கற்றுக் கொண்ட பாடங்களுக்கமைய நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் கடமைகளில் வினைத்திறனான பங்களிப்பினை வழங்குமாறு கேட்டுக்கொண்டதுடன், கடந்த இரண்டு தேர்தல்கள் கடமைகளில் ஈடுபட்ட கிராம அலுவலர்கள் எதிர்நோக்கிய பிரச்சினைகள் மற்றும் கருத்துக்களையும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டதுடன் அதற்குரிய உரிய நடவடிக்கைகள் எடுப்பதாகவும் தெரிவித்தார்.
உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக வாக்களிப்பு நிலையங்களில் கிராம அலுவலகர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவி தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இச் செயலமர்வில் அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
 
 
 
1 2 3 4 5 6
ஆலயங்கள் மற்றும் அறநெறிப் பாடசாலைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (22.04.2025) மு. ப. 11.00 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், அறநெறிப் பாடசாலைகளை பாதிக்காத வகையில் வெள்ளி மற்றும் ஞாயிறு தினங்களில் தனியாா் கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகளை தவிர்க்க வேண்டும் எனவும், அறநெறிப் பாடசாலைகளை ஊக்குவிப்பதற்கு விஷேட கருத்தரங்குகள், ஆன்மீகச் சுற்றுலா ஆகியவற்றை ஏற்பாடு செய்யுமாறும் கேட்டுக் கொண்டார். மேலும், பிரதேச செயலக ரீதியாக அறநெறிப் பாடசாலைகளின் வளர்ச்சி தொடர்பான கலந்துரையாடலை ஏற்பாடு செய்து அறநெறிப் பாடசாலைகள்தொடர்பான தகவல்களை ஏப்ரல் 30 ஆம் திகதிக்கு முன்னர் அறிக்கையிடுமாறும் கேட்டுக் கொண்டதுடன், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கடமைகளில் எதிர்நோக்கும் இடர்பாடுகள் தொடர்பாக கேட்டறிந்து அவர்களுக்கான தீர்வுகளையும் அரசாங்க அதிபர் வழங்கினார்.
இக் கலந்துரையாடலில் உதவி மாவட்ட செயலாளர் செல்வி உ.தா்சினி மற்றும் மாவட்ட, பிரதேச செயலக கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.
 
 
1 2 3 4
 
எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக இரண்டாவது கட்டமாக தெரிவு செய்யப்பட்ட சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (21.04.2025) மு.ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன் கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் சுமூகமாகவும் வினைத்திறனாகவும் நடைபெற ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொண்டார். மேலும், கடந்த தேர்தலில் கடமைகளில் ஈடுபட்ட உத்தியோகத்தர்கள் எதிர்நோக்கிய அசெளகரியங்கள் மற்றும் பிரச்சனைகளைக் கேட்டறிந்து கொண்டதுடன், அதற்குரிய நடவடிக்கைகளையும் எடுப்பதாகவும் தெரிவத்தாட்சி அலுவலரால் தெரிவிக்கப்பட்டது.
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
 
 
1 2 3 4 5 6 7