பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாட்டுக்குழுக் கலந்துரையாடலானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.04.2025) பி.ப 03.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் பால்நிலைசார் வன்முறைக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக ஆராயப்பட்டது குறிப்பாக பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கூட்டத்தில் பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்டச் செயலாளர், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட, பிரதேச பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.

யாழ்ப்பாண மாவட்ட காணிப் பயன்பாட்டுக் குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (17.04.2025) மாலை 3.00 மணிக்கு நடைபெற்றது.
மேலதிக அரசாங்க அதிபர் (காணி), மாவட்ட காணிப்பயன்பாட்டு உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள், நீர்ப்பாசன பொறியியலாளர், பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் காணிப் பயன்பாட்டு உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்கள் கௌரவிப்பு நிகழ்வு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் ( 17.04.2025 )காலை 09.15 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக சமூக பாதுகாப்பு ச் சபையின் தவிசாளர் திரு. M.K.B திசநாயக்க அவர்கள் கலந்துகொண்டு மாணவர்களுக்கான புலமைப்பரிசில்களை வழங்கியிருந்தார்.
இந்நிகழ்வில் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர் அவர்கள், சமூகப் பாதுகாப்புச் சபையின் ஊடக ஓய்வூதியத் திட்டத்தில் பயனாளிகளை உள்வாங்குவதற்கு உத்தியோகத்தர்கள் கடும் பிரயத்தனம் செய்தே பயனாளிகளை சேர்ப்பதாகவும், ஆனால் இத்திட்டங்கள் பொதுமக்களுக்கு பயன் உள்ளது எனவும் அந்தவகையில் ஓய்வூதியத் திட்டத்தில் சேர்ந்தவர்களின் பிள்ளைகள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி அடைந்தவர்களுக்கும், க. பொ. த சாதாரணம் மற்றும் உயர்தரத்தில் அதி சிறந்த சித்தி அடைந்தவர்களுக்கும் ஊக்குவிப்பு பணப்பரிசில் வழங்குவது சிறப்பானது எனவும் குறிப்பிட்டார். மேலும். யாழ்ப்பாண மாவட்டத்தில் 6,508 பேர் ஓய்வூதியம் பெற்றுவருவதாகவும், எமது மாவட்டம் அகில இலங்கை ரீதியாக தொடர்ச்சியாக 11 ஆண்டுகள் ஓய்வூதியத் திட்ட நடைமுறைப்படுத்தலில் தேசிய ரீதியில் முதலாம் இடம் பெற்றுவருதாகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டு, மாணவர்களின் எதிர்காலம் மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், இன்றைய தினம் பிரதம விருந்தினராக வருகை தந்த மூத்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியாகவும், முன்னாள் தபால்மா அதிபராகவும், முன்னாள் பொது நிர்வாக அமைச்சின் மேலதிக செயலாளராகவும், முன்னாள் புத்தசாசன அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றி தற்போது சமூக பாதுகாப்புச் சபையின் தவிசாளருமான திரு M.K.B திசாநாயக்க அவர்கள் இந் நிகழ்வில் கலந்து கொண்டமைக்கு தமது நன்றியினையும் தெரிவித்துக் கொண்டார்.
இந் நிகழ்வில் மாணவர்களுக்கு
ரூபா. 10,000.00 முதல் ரூபா. 100,000.00 வரை புலமைபரிசில்கள் 60 மாணவர்களிற்கை வழங்கிவைக்கபட்டமை குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் சமூக பாதுகாப்பு அதிகார சபையின் வடக்கு கிழக்கு சிரேஷ்ட இணைப்பாளர் பா.பிரதீபன் மற்றும் பாதுகாப்பு சபையின் மாவட்ட இணைப்பதிகாரிகள், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
எதிர்வரும் வைகாசி மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தல்கள் தொடர்பாக சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கான முன்னாயத்த செயலமர்வானது யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் தலைமையில் யாழ் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இன்றைய தினம் (17.04.2025) மு. ப 10.00 மணிக்கு நடைபெற்றது.
இதன் போது தலைமையுரையாற்றிய தெரிவத்தாட்சி அலுவலர் அவர்கள், நடைபெற்று முடிந்த சனாதிபதித் தேர்தல் மற்றும் பாராளுமன்ற த் தேர்தல்கள் நீதியாகவும் சுமுகமாகவும் நடைபெற்றதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது நன்றியினைத் தெரிவித்துக் கொண்டதுடன், எதிர்வரும்
மே மாதம் 06 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைத் தேர்தலில் பொறுப்பாக நியமிக்கப்படும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்கள் ஒவ்வொருவரும் வாக்களிப்பு நிலையங்களுக்குரிய முழுமையான பொறுப்பு மற்றும் அதிகாரம் கொண்டவர்களாக இருப்பதால் இத் தேர்தலில் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் பங்களிப்பானது மிகக் காத்திரமானது எனத் தெரிவித்தார். மேலும் கடந்த தேர்தலில்களில் கற்றுக்கொண்ட பாடத்தினை அடிப்படையாகக்கொண்டு சில அசெளகரியங்கள் சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களுக்கு ஏற்பட்டிருந்தால் அவற்றை இம்முறை தவிர்த்து மென்மேலும் வினைத்திறனாக செயற்படுமாறும் தெரிவித்ததுடன், இம் முறை வட்டார ரீதியாக வாக்கெண்ணல் நடைபெறவுள்ளதால் தங்களுக்குரிய பொறுப்புக்களை உணர்ந்தும் அதற்கான ஒத்துழைப்பினையும், ஒவ்வொரு வாக்களிப்பு நிலையங்களிலும் பாா்வைக்குறைபாடுடையவர்களுக்கான வசதிகளை அறிவுறுத்தல்களுக்கு அமைய மேற்கொள்ள நடவடிக்கைகள் எடுக்குமாறும் தெரிவத்தாட்சி அலுவலர் கேட்டுக்கொண்டார்.
சிரேஷ்ட தலைமை தாங்கும் அலுவலர்களின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பாக உதவித் தேர்தல் ஆணையாளர் திரு. இ. சசீலன் அவர்களால் விளக்கமளிக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்ட சமுர்த்தி அலுவலக ஊழியர் நலன்புரிச் சங்க வளர்ச்சி நிதிக்கான அதிஷ்டலாபச் சீட்டிழுப்பு நிகழ்வு நேற்றைய தினம் (16.04.2025) மாவட்ட சமுர்த்திப் பணிப்பாளர் திரு. F. C. சத்தியசோதி தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இச் சீட்டிழுப்பு நிகழ்வில் அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் கலந்துகொண்டு சீட்டிழுப்பினை ஆரம்பித்து வைத்தார்.
பின்வருவோர் அதிஷ்டசாலிகளாக தெரிவு செய்யப்பட்டார்கள்.
முதலாம் பரிசு : சலவை இயந்திரம் (திரு.பி.சரவணா - இல. 4157 )
இரண்டாம் பரிசு : தொலைக்காட்சி (செல்வி. டனுசியா - இல. 7955 )
மூன்றாம் பரிசு : துவிச்சக்கரவண்டி (திரு.கவிநயன் - இல.1434 )
10 ஆறுதல் பரிசுகள் பெற்றவர்கள் விபரங்கள் :
1.திரு. ரி.சுதர்சன் - இல. 8281
2.திரு. கபிலன் - இல. 3171
3.திரு.ரா.பிரகலா - இல. 835
4.திரு.பா.யசோதா - இல.3500
5.திரு.கோ.செந்திரிகா - இல.657
6.திரு.நா.ஜெகதீஸ்வரன் - இல. 3254
7.திருமதி.ச.கௌரிமா - இல. 6270
8.திருமதி பிலக்சன் மோரிசியா - இல. 3542
9.திருமதி.ர.மலர்விழி -இல.6087
10.என்.இலக்கியா - இல.5328
பரிசு வழங்கப்படும் திகதி பின்னர் அதிஷ்டசாலிகளுக்கு அறிவிக்கப்படும் என சமுர்த்திப் பணிப்பாளரால் தெரிவிக்கப்பட்டது.






