யாழ்ப்பாண மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் செயற்பாடுகள் மற்றும் தேவைகள் தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (21.06.2022) காலை 11.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர் (காணி), அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர், பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் மற்றும் சர்வதேச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், உள்நாட்டு அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தார்கள்.
இக் கலந்துரையாடலில் தற்போது யாழ்.மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் பாதிப்படைந்த மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களால் வழங்கப்படும் உதவிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. அத்தோடு அரச சார்பற்ற நிறுவனங்களால் மேற்கொள்ளப்படவுள்ள சேவைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கு உள்ள தேவைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது
அபிவிருத்தி திட்டங்களின் மீளாய்வு கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் 20.06.2022 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போா் கூடத்தில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில் மாவட்ட அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர் , மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர், பிரதி விவசாய பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மற்றும் சம்பந்தப்பட்ட துறைசார் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் Gama sanga pilisandorak programme செயற்திட்டத்தின் கீழ் நடைமுறைப்படுத்திய திட்டங்கள், முடிக்கப்படாத திட்டங்கள், கிராம அபிவிருத்தித்திட்டங்கள்,சமுர்த்தி பயனாளிகளின் வாழ்வாதார நிலைமைகள் , வாழ்வாதார திட்டங்கள்,அதற்கான நிதித்தேவைகள், வீட்டுத்தோட்ட விதைகள் மற்றும் நாற்று விநியோகம் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டன
எரிபொருளுக்கான தற்போதைய தட்டுப்பாட்டு நிலைமை காரணமாக யாழ்ப்பாண மாவட்ட த்தில் பங்கீட்டு அடிப்படையில் எரிபொருள் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுக்க எரிபொருள் பங்கீட்டு அட்டை முறைமையை பிரதேச செயலகங்கள் மூலமாக வழங்க மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
அதற்கமைய பொதுமக்கள் தத்தமது தேவைக்குரிய எரிபொருள் பங்கீட்டு அட்டைகளை வதிவிடத்திற்குரிய பிரதேச செயலகங்கள் மூலமாகவும், அத்தியாவசிய உத்தியோகத்தர்கள்/ அரசாங்க உத்தியோகத்தர்கள் தமது எரிபொருள் பங்கீட்டு விநியோக அட்டையை கடமையாற்றும் திணைக்கள தலைவரின் சிபார்சுடன் குறித்த உத்தியோகத்தர் வசிக்கும் பிரதேச செயலகங்கள் ஊடாகவும் வழங்குவதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் அறிவித்துள்ளார்.
யாழ்ப்பாண மக்களுக்கான எரிபொருள் விநியோகம் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை நிர்ணயம் தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் (20.06.2022) காலை 10.30மணிக்கு மாவட்ட செயலக கேட்போா் கூடத்தில் இடம்பெற்றது.
இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்ட எரிபொருள் விநியோகத்துக்காக பங்கீட்டு அட்டை முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளது எனவும் மக்கள் தமக்கான பதிவுகளை பிரதேச செயலகங்களில் மேற்கொண்டு எரிபொருள் அட்டையை பெற முடியும் எனவும் அரச பணியாளர்கள் தமது திணைக்கள தலைவர் ஊடாக மாத்திரமே தமது பதிவுகளை மேற்கொள்ள முடியும் எனவும் அத்தியாவசிய சேவைக்காக ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவுகளிலும் உள்ள ஒரு ப.நோ.கூ.ச (MPCS) நிரப்பு நிலையம் செயற்படுத்தப்படும் எனவும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி ஆலய உயர் திருவிழா நடைபெறுவதற்கான சிறப்பான சேவையினை வழங்கும் பொருட்டான முன்னாயத்த கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 10.06.2022 காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக்கலந்தரையாடலில் பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேவை, அம்புலன்ஸ சேவை, கடற்போக்குவரத்து சேவை , படகுகள் அனுமதி , அரச மற்றும் தனியார் வீதிப்போக்குவரத்து சேவை, அவற்றுக்கான எரிபொருள் ஏற்பாடுகள், சுகாதாரம், மற்றும் குடிநீர் தேவை, மின்சாரத்தேவை, புனரமைக்கவேண்டிய வீதிகள், அமுதசுரபி அன்னதான ஒழுங்குகள், மற்றும் ஊடகங்களுக்கான அனுமதி உள்ளிட்ட விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.






