சுபீட்சத்தின் நோக்கு ஜனாதிபதியின் எண்ணக்கருவிற்கு அமைவாக ஒரு இலட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வேலைத் திட்டத்தில் முதற் கட்டமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 101 பயிலுனருக்கு இன்று (27.10.2020) மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நியமனக் கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டது.குறித்த நிகழ்வில் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் மற்றும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களும் கலந்து கொண்டு நியமனக் கடிதங்களை வழங்கி வைத்தனர்.

GA2-W.jpgதற்போதைய காலகட்டத்தில் சுகாதார வர்த்தமானி அறிவுறுத்தலை அனைவரும் பின்பற்றி ஒத்துழைக்க வேண்டும் என இன்றைய (26.10.2020) covid 19 ஒழிப்பு செயலணி கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.வடமாகாணத்தின் covid 19 தொடர்பான  மாகாணமட்ட கூட்டம் கௌரவ ஆளுநர் தலைமையில் நடைபெற்றது. அந்தக் கூட்டத்திலே பொதுவாக மாவட்டங்களுடைய நிலைமைகள் ஆராயப்பட்டு அதனடிப்படையில் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள நிலவரங்கள் பற்றி ஆராய்ந்து அறியப்பட்டதோடு அங்குள்ள தொற்று நிலைமைகளுக்கு ஏற்ப எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராயப்பட்டது.

புங்குடுதீவில் அமுல்ப்படுத்தப்பட்ட தற்காலிக முடக்கம் இன்று காலை ( 20. 10.2020) நீக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.கடந்த மூன்று வாரங்களாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதி தற்காலிக முடக்கத்திற்கு உள்ளாக்கப்பட்டிருந்த நிலையில் அப்பகுதியில் சுய தனிமைப்படுத்தப்பட்டவர்களிடம்  மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் எவருக்கும் தொற்று ஏற்படவில்லையென சுகாதாரப் பகுதியினரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

img17

 

web-GA-display.jpgயாழ்.மாவட்டத்தில் புங்குடுதீவு பிரதேசத்தை வதிவிடமாக கொண்ட மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றிய யுவதி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.