தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள் இ சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சினால் “சட்டரீதியான ஆவணங்களைப் பெற்றுக்கொடுக்கும் நடமாடும் சேவை” 25.08.2019 (ஞாயிற்றுக்கிழமை) மு.ப 8.30 – பி.ப 3.30 வரை தெல்லிப்பளை பிரதேச செயலாளர் தலைமையில் யாழ். மல்லாகம் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள், கௌரவ தவிசாளர், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டார்கள்.

GA c 1யாழ். மாவட்ட செயலக நலன்புரிக்கழகத்தினால் 10 ஆவது அரச அதிபர் வெற்றிக் கிண்ண விளையாட்டு விழா வியாழக்கிழமை (1-08-2019) அன்று  மதியம் 2 மணியளவில் யாழ். இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் கலந்துகொண்டார்

2971

 

தேசிய கொள்கைகள், பொருளாதார அலுவல்கள்,  மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு,  வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சினால் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் புனர்வாழ்வளிக்கப்பட்ட பயிலுநர்களிற்கு  கடற்தொழிலுக்கான மீன்பிடி படகு, இயந்திரம்,  மீன்பிடி வலை மற்றும் உபகரணங்கள் ,  விவசாய தொழில் நடவடிக்கைகளுக்காக நீர் இறைக்கும் இயந்திரம் வழங்கல் நிகழ்வு இன்று காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

10819 1தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சினால் நாடளாவியரீதியில் 16800 வேலையற்ற  பட்டதாரிகளை அரச நிறுவனங்களில் பட்டதாரிப் பயிலுநர்களாக பயிற்சியளிப்பதற்கான செயற்திட்டத்தின் கீழ் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 01.08.2019 (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு வீரசிங்க மண்டபத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தர் நியமனங்கள் வழங்கப்பட்டன.

St.anthony--church.jpgKachchativu being a small distant island of 1.15 sq. kilometers located 20 km away from the Delft island with no humans habitation. However, the fishing community has used this island over the years in order to mend their fishing gear, after sterenuous venture out at sea. Incidentally, the small St. Anthony’s Church in Kachchativu had become their place of reverence during such visits.

According to the records of archaeologists,  Kachchativu island had emerged from water over 115,000 to 130,000 years ago. The Portuguese had first administered this island nation and Sri Lanka has been exercising sovereignty and jurisdiction over Kachchativu and its adjacent waters since 1974 kachchativu Agreement.