நவீன திறன் விருத்தி வகுப்பறைகள் அமைக்கப்பட்ட பாடசாலைகளிற்கு மடிக்கணணி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 21.02.2020 அன்று நடைபெற்றது.
இந்நிகழ்வில் யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திரு.சு.முரளீதரன், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், உத்தியோகத்தர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

       
       
       

3.GA-room-assume.jpgயாழ். மாவட்ட புதிய அரசாங்க அதிபராக உயர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் இன்று 17.02.2020 (திங்கட்கிழமை) காலை 9.45 மணிக்கு யாழ் மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

யாழ். மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் மதகுருமார்களின் ஆசிச் செய்தியுடன் வரவேற்பு நிகழ்வு ஆரம்பமானதோடு இந்நிகழ்வில் அரசாங்க அதிபரின் பாரியார் திருமதி. வனிதா மகேசன், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள்,உத்தியோகத்தர்கள்,நலன்விரும்பிகள் என பல தரப்பினரும் கலந்து கொண்டிருந்தார்கள். யாழ்.மாவட்ட செயலக புதிய அரசாங்க அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்ட கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் 1985- 1989 ஆண்டு யாழ். பல்கலைக்கழக கலைப் பட்டதாரியாக தனது பட்டப்படிப்பை மேற்கொண்டு பின்னர் சர்வதேச உறவுகளுக்கான பட்டப்படிப்பின் டிப்ளோமா மற்றும் ஜனாதிபதி புலமைப்பரிசில் தாய்லாந்து ஆசிய தொழில் நுட்ப பல்கலைக்கழகத்தில் வணிக நிர்வாகத் துறையில் முதுகலைமாணிப் பட்டத்தையும் (MBA) பெற்றார். 1991 ஆம் ஆண்டு இலங்கை நிர்வாக சேவைக்குள் திறந்த போட்டிப்பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டார்.

2யாழ். மாவட்ட சாரணர் சங்கத்தின் 2020 ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒன்றுகூடல் நிகழ்வு 11.02.2020 (செவ்வாய்க்கிழமை) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன், மாவட்ட சாரண ஆணையாளர், தவகோபால், மற்றும் சாரணர் சங்கத்தின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

7.Mr Mrs. Gaகறைபடியாத கரங்களுடன் மக்களுக்கு உயர்ந்த அரச சேவையாற்றிய ஏழைகளின் நாயகன், மக்கள் சேவகன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் அவர்களின் பிரிவுபசார நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (2020.02.14) மாலை நடைபெற்றது.

யாழ் மாவட்ட செயலக மற்றும் யாழ் மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்களினதும் இணையத்தளங்கள் மேம்படுத்தல் காரணமாக பெப்ரவரி மாதம் 19 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் தற்காலிகமாகத் தொழிற்படமாட்டாது என்பதனை அறியத்தருகிறேன்.

 

 நா. வேதநாயகன்,       

அரசாங்க அதிபர் .