|
"முறையான விழிப்புணர்வுடன் விழிப்பாக இருப்பதன் மூலம் அனர்த்த அபாயத்தை குறைத்துக் கொள்வோம்" எனும் தொனிப்பொருளில் யாழ். மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் தலைமையில் "தேசிய பாதுகாப்பு தினம்" இன்று (2019.12.26) காலை 9.15 க்கு மாவட்ட செயலக கேட்போர்கூடத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
தேசிய பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சுனாமியால் 2004.12.26 ஆம் திகதி உயிரிழந்த மக்களிற்காக பிரார்த்தனை செய்யப்பட்டது. இப் பிரார்த்தனையில் மதகுருமார்கள், அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி),பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டார்கள்.
තවත් කියවන්න...
யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் 2020 ஆம் ஆண்டிற்கான கடமைகளை ஆரம்பித்தல் நிகழ்வு தேசியக் கொடி ஏற்றலுடன் காலை 9.30 (புதன் கிழமை) மணிக்கு ஆரம்பமாகியது. இந் நிகழ்வில் "வளர்ந்து வரும் நாட்டுக்கு வளரும் ஒரு மரம்" என்னும் நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்ச தொலைநோக்கத்தின் கீழ் மாவட்ட செயலகத்தில் மரங்கள் நடுகின்ற நிகழ்வு நடைபெற்றதோடு மாவட்ட செயலக அனைத்து உத்தியோகத்தர்களும் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டார்கள்.
තවත් කියවන්න...

மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் நடாத்தப்படுகின்ற லக் ரெக்கிய ஹரசர தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் திணைக்களத்தின் பிரதான இலக்கான மனிதவளத்தினை வினைத்திறன் வாய்ந்ததாக முதலிடும் வகையில் செயலாற்றிய 25 மாவட்டங்களிற்குமான தொழில் நிலையங்களிற்கான தரப்படுத்தலில் யாழ்ப்பாண மாவட்ட தொழில் நிலையம் முதலாம் இடத்தினைப் பெற்று தங்கவிருதினை வென்றுள்ளது.
තවත් කියවන්න...
|