யாழ்.மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபர் M. பிரதீபன் அவர்களின் தலைமையில் கிராம உத்தியோகத்தர்களிற்கான அரச காணி, தனியார் காணி தொடர்பான நடைமுறைகள், நகர அபிவிருத்தி அதிகார சபை, வனவள திணைக்களம் , சுற்றுப்புறச்சூழல் தொடர்பான நடைமுறைகள் மற்றும் கனியவளத் திணைக்களம் பற்றியதான பயிற்சி நெறி இன்று (10.02.2020) காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப்பயிற்சி நெறியின் வளவாளராக யாழ்.மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் C. பத்மநாதன் அவர்கள் கலந்துகொண்டார்.

வேலைவாய்ப்புத் திணைக்களம் மற்றும் யாழ்.மாவட்ட செயலகம் இணைந்து நடாத்திய தொழிற் சந்தை நிகழ்வு 08.02.2020 ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.30 மணிக்கு மாவட்ட செயலகவளாகத்தில் நடைபெற்றது.இந்நிகழ்வில் திறன்கள் அபிவிருத்தி, தொழில்துறை மற்றும் தொழில் உறவுகள் அமைச்சின் செயலாளர் திரு.டி.எம்.எஸ்.அபேகுணவர்தன , வட மாகாண திட்டமிடல் பிரதி பிரதம செயலாளர் திரு சு.உமாகாந்தன், யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு. நா.வேதநாயகன்,மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மனித வலு மற்றும் வேலை வாய்ப்பு திணைக்கள பணிப்பாளர் Mr.லால் சமரசேகர,முன்னாள் பணிப்பாளர் திரு. E.L.K.திஸ்ஸநாயக்க , உதவிப் பணிப்பாளர் மற்றும் Ms.யசஸ்மி ஹிக்குருதுவ ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

GA--Addl.GA.jpgயாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமானது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுத் தலைவர் கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களின் தலைமையில் யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகியது. வரவேற்புரையை யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகம் அவர்கள் நிகழ்த்தினார்.இக் கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர், உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், செயலாளர்கள்,திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

இலங்கையின் 72 வது சுதந்திரதினம் இன்று (04-02-2020) "பாதுகாப்பான தேசம் சுபீட்சமான நாடு" என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்பட்டது. இந்தவகையில் யாழ் மாவட்ட செயலக வளாகத்தில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகன் அவர்களின் தலைமையில் காலை 8.00 மணிக்கு தேசியக்கொடி ஏற்றலுடன் சுதந்திர தின வைபவம் ஆரம்பமானது.

அரச உத்தியோகத்தர்களிற்கான ( 40 வயதிற்கு மேற்பட்டோர்) தேசியமட்ட வலைப்பந்தாட்டப் போட்டிகள் 5.11.2019, 6.11.2019 ஆகிய திகதிகளில் கொழும்பில் நடைபெற்றது.

இப் போட்டியில் யாழ். மாவட்ட வலைப்பந்தாட்ட அணி பங்குபற்றி அரை இறுதியில் கம்பஹா பொலிஸ் அணியுடன் விளையாடி 13:12 என்னும் புள்ளிகளை பெற்று வெற்றியீட்டியதோடு இறுதிப்போட்டிக்கு தெரிவாகி