தற்போது உள்ள நிலையில் டெங்கு நோயினைக்  கட்டுப்படுத்தும் முகமாக  இந்தக் கூட்டத்தில் பிரதேச மட்டக்குழுவினுடைய செயற்பாடுகள் அதேபோன்று கிராமிய சுகாதார குழுக்கள் திறம்பட செயற்படுவதைப் பற்றி அவை முறைப்படி நடத்தப்பட வேண்டும் எனவும் அதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும் ஆராயப்பட்டது.

குறிப்பாக  கிராம மட்ட செயற்பாட்டு குழுவில் நுளம்பு ஒழிப்பு தொடர்பான செயற்பாடுகளை கிரமமாக மேற்கொள்ள வேண்டும், அதே நேரத்தில் அவ் வேலைத்திட்டத்தினை மேற்கொள்ளும்போதுஎதிர்நோக்குகின்ற இடர்பாடுகளை களைவதற்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டுமெனவும் கோரி நிற்கின்றோம்  குறிப்பாக வெற்று காணிகள் பற்றி விரிவாக ஆராயப்பட்டது. வெற்றுகாணிகளில் அந்த காணிச் சொந்தக்காரர்கள் அந்தக் காணியை முறைப்படி அதாவது குறிப்பாக  பற்றைகளை வெட்டி அகற்றி அதற்குமேலாக அங்கு காணப்படுகின்ற கொள்கலன்கள் சிரட்டை பிளாஸ்டிக் கொள்கலன் போன்றவற்றை அகற்றுவது பிரதானமானதாக காணப்படுகின்றது.  அதேபோன்று வீடுகளிலும் நீர் வழிந்தோடும் பகுதிகளை அடிக்கடி துப்பரவு செய்ய வேண்டிய கடப்பாடும் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் தற்பொழுது கொவிட் 19க்கு இணையாக இந்த டெங்கு பரவலும் நாட்டில் அதிகரித்து காணப்படுகின்றது. ஆகவே இந்த டெங்கு நோயை கட்டுப்படுத்துவதற்கு யாழ் மாவட்டத்தில் நாங்கள் தொடர்ச்சியாக நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது.

அரச சார்பற்ற நிறுவனமான சிறுவர் அபிவிருத்தி நிலையத்தினால் யாழ்மாவட்டத்திலுள்ள பத்து முதியோர், சிறுவர் இல்லங்களுக்கு வழங்குவதற்கான தலா ரூபா 100,000/= வீதம் ஒரு மில்லியன் பெறுமதியான சுகாதாரப் பொருட்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் ஊடாக வழங்கி இன்று (12.05.2020) வைக்கப்பட்டது.

IMG 20200512 WA0002

பிரதேச புள்ளிவிபர கைநூல் 2020 மற்றும் பிரதேச மூலவளத் திரட்டு 2020 ஆகியவற்றைத் தயாரித்ததில் யாழ்ப்பாண பிரதேச செயலகம், பதினைந்து பிரதேச செயலகங்களில் முதல் நிலையில் உள்ளது.

30-04-2020 வியாழக்கிழமை அன்று  யாழ்மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற பிரதேச செயலாளர்களுக்கான கலந்துரையாடலில் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன், உதவித் திட்டமிடல் உத்தியோகத்தர்கள் மற்றும் அவரது அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும் பாராட்டையும் தெரிவித்தத்துடன் யாழ்ப்பாண பிரதேச செயலாளர் திரு.சா.சுதர்சன் அவர்களுக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள் சான்றிதழ் வழங்கி கௌரவித்தார்.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் ஏற்பாட்டின் பிரகாரம் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்தினரால் யாழ்மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் பாவனைக்காக ஒரு தொகுதி முகக்கவசம் மற்றும் தொற்றுநீக்கி திரவம் போன்றவை இன்று (10.05.2020 ) யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்டது.

ஹுமெடிக்கா நிறுவனத்தினால் களமுனை உத்தியோகத்தர்களுக்கான 3,900 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. க. மகேசன் அவர்களிடம் கையளிக்கப்பட்ட. இவற்றில் தலா  400 வீதம் யாழ்ப்பாணம், நல்லூர், உடுவில்  மற்றும் சண்டிலிப்பாய் பிரதேச செயலர்களிடம் யாழ் மாவட்ட  அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் மற்றும் ஹுமெடிக்கா நிறுவன உத்தியோகத்தர்களினால் கையளிக்கப்பட்ட. மேலும் 1300 முகக்கவசங்கள் யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவிற்கும், 1000 முன்னிலை சுகாதார உத்தியோகத்தர்களுக்கான முகக்கவசங்களும் வழங்கப்பட்ட.