விக்கிரமராட்சி அன்ட் கம்பனியினால் யாழ்மாவட்ட செயலக உத்தியோகத்தர்களுக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் மூக்கு கண்ணாடி வழங்கும் நிகழ்வு யாழ்மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 11.03.2020 அன்று காலை 8.30 மணி முதல் மாலை 3மணி வரை நடைபெற்றது.
நேற்றைய தினம் கல்வி அமைச்சினால் பாடசாலைகள் மூடப்படுவதாக விடுக்கப்பட்ட அறிவித்தலை தொடர்ந்துயாழ் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடர்பில் மாவட்ட ஊடகவியலாளர்கள் உடனான கலந்துரையாடல் இன்று காலை (13.3.2020) யாழ்மாவட்ட செயலக அரசாங்க அதிபர் செயலகத்தில் இடம்பெற்றது. இங்கு கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் உயர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள், கொரோனா வைரஸ் தாக்கம் உலகளாவிய ரீதியாக அதிகரித்த நிலையில் இலங்கையும் அது தொடர்பாக பல முன்னேற்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஒவ்வொரு மாவட்ட செயலகங்கள் ஊடாகவும் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும், பிரதேச சபை உறுப்பினர்களுக்கும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது.
PEACE ( எங்குமுள்ள சிறுவர்களையும் சூழலையும் பாதுகாப்போம்) அமைப்பினால் " சிறுவர் நேரலை ( online) பாலியல் துஷ்பிரயோகத்திற்கு எதிரான விழிப்புணர்வு" செயலமர்வு 25.02.2020 அன்று காலை 9 மணிமுதல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
சிறுவர்கள் இணையதளங்களில் எதிர்நோக்கும் பாலியல் ரீதியான சுரண்டல் மற்றும் பாதிப்புக்கள் தொடர்பாக 22, 23, 24, 25ஆம் திகதிவரை செயலமர்வு யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது. இச் செயலமர்வில் PEACE நிறுவன செயற்திட்ட உத்தியோகத்தர்கள் சட்டத்தரணி திரு. ரெயான் நடேசராஜா, செல்வி. ஆன் பிகிறாடோ, செல்வி. ரமா மற்றும் மாவட்ட சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு இணைப்பாளர் திரு. க.மனோகரன் ஆகியோர் வளவாளராக கலந்துகொண்டதோடு சிறுவர்களின் பெற்றோர்கள் பங்குபற்றியிருந்தார்கள்.
2015 ஆம் ஆண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்ட இணையமயப்படுத்தப்பட்ட நிதிச் செயலாற்றுகையின் மதிப்பீட்டின் கீழ் இலங்கையில் உள்ள 844 நிறுவனங்களின் நிதிச் செயலாற்றுகை மதிப்பீடு செய்யப்பட்டது. இதன் பிரகாரம் 2018 ஆம் ஆண்டு பாராளுமன்ற கணக்கீடு தொடர்பான நிதிச் செயலாற்றுகையின் தொடர்ச்சியான முன்னேற்றத்திற்காக நாடாளுமன்ற பொதுக்கணக்குகள் குழுவால் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளில் 110 நிறுவனங்களுக்கு அதி உயர் நிதிச் செயலாற்றுகையை வெளிப்படுத்தியமைக்காக விருதுகளும்இ சான்றிதழ்களும் பாராளுமன்றத்தில் வைத்து 28.02.2020 வழங்கப்பட்டது. இவ் விருது வழங்கும் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக அரசாங்க அதிபர் உயர் திரு. க.மகேசன் அவர்கள் கலந்து கொண்டு 97 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்ற யாழ்.மாவட்ட செயலகத்திற்கான தங்கவிருதினைப் பெற்றுக்கொண்டார் .
கல்வியெனும் அபிவிருத்தி இலக்கு நோக்கி தொலைதூரம் பயணித்து யாழ். பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மலையகத்தினைச் சேர்ந்த மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சின் கௌரவ அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் அவர்களின் பங்குபற்றுதலுடனும், யாழ்.மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களது தலைமையிலும் யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் 21.02.2020 அன்று மதியம் 12.00 மணியளவில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் அமைச்சின் மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.கே. விமலநாதன், மேலதிக செயலாளர்(அபிவிருத்தி) திரு.பா.செந்தில்நந்தனன், பணிப்பாளர்(அபிவிருத்தி) திரு.வே.பிறேமச்சந்திரன், யாழ்மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன், மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர்(காணி) திரு.முரளீதரன், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள்,யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.





