யாழ். மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத் தலைவரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதிதவிசாளருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் (பா.உ) யாழ். மாவட்ட செயலகத்திலுள்ள ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தை திரை நீக்கம் செய்து இன்று 01.09.2020 செவ்வாய்கிழமை காலை 10 மணிக்கு உத்தியோகபூர்வமாக திறந்துவைத்ததோடு யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவராக தனது கடமைகளை  பொறுப்பேற்றுக் கொண்டார்.

நிதி அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான ஓய்வூதியத்திட்டத்தில் இணைந்து 2019 ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 160 மாணவர்களுக்கு புலமைப் பரிசில் கொடுப்பனவுகள் இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

சனச அபிவிருத்தி வங்கியினால் அம் மாணவர்களுக்கு பரிசில் பொதிகளும் வழங்கப்பட்டுள்ளன. தற்போதைய கொவிட் 19 அனர்த்த சூழ்நிலை காரணமாக வழமையாக மாவட்ட செயலகத்தில் நடைபெற்று வந்த இந் நிகழ்வு இம் முறை பிரதேச செயலகங்களின் ஊடாக நடைபெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழ். மாவட்டத்தின் தேர்தல் தற்போதய நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் சந்திப்பு இன்றையதினம் (23.07.2020 ) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே யாழ் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் க. மகேசன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்.யாழ் தேர்தல் மாவட்டத்தில் இதுவரை 105 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 25 ஆம் திகதிக்கு பிறகு யாழ் மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மத்திய முறைப்பாட்டு நிலையத்துக்கு மேலதிகமாக பன்முகப்படுத்தப்பட்ட வகையில் மேலும் மூன்று முறைப்பாட்டு நிலையங்களை சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பிரதேச செயலகங்களில் அமைக்கப்படவுள்ளன. இந்த நிலையங்களிலே வெளிமாவட்டத்தில் இருந்து விசேடமாக வரவழைக்கப்படுபவர்களுடன், யாழ் மாவட்ட அலுவலர்களும் இணைந்து கண்காணிப்பு மற்றும் முறைப்பாடு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுவார்கள்.

image8

 வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த உற்சவம் நாளை காலை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 25 நாட்கள் இடம்பெறவுள்ள நிலையில் ஆலய உற்சவம்  தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். மேலும் கருத்து தெரிவித்த அரசஅதிபர்

நாளை  நல்லூர் கந்தன் ஆலய வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாக இருக்கின்றது . யாழ் மாவட்டம் கொரோனா  கட்டுப்பாடு  பேணப்பட்டு வரும் நிலையில் இந்த நிலைமையை தொடர வேண்டிய நிலையும் காணப்படுகின்றது .

இரு நாள் விஜயமாக வடக்கிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இன்றைய தினம் (14.07.2020) யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயத்தினை மேற்கொண்டு, தெரிவத்தாட்சி உத்தியோகத்தரும் மாவட்ட அரசாங்க அதிபருமான க.மகேசன், மேலதிக அரசாங்க அதிபர்,மேலதிக அரசாங்க அதிபர் (காணி) மற்றும் மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளர் உட்பட்ட தேர்தல் திணைக்கள அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.