யாழ்ப்பாண மாவட்டத்தில் நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மறுஅறிவித்தல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் அறிவித்தபடி தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்குச் சட்டம் மார்ச் 27ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) காலை 6:00 மணிக்கு நீக்கப்பட்டு அதே தினம் மதியம் 2:00 மணிக்கு மீண்டும் நடைமுறைப்படுத்தப்படும்.

இந்த நான்கு மாவட்டங்களிலும் - மார்ச் 30ஆம் திகதி காலை 6:00 மணிக்கு நீக்கப்படும் ஊரடங்குச் சட்டம் மீண்டும் அதே தினம் பிற்பகல் 2:00 மணிக்கு நடைமுறைக்கு வரும்.

Emergency meeting was held on 25th of March with chamber of commerce, Cargills food city, Sathosa and other relevant heads of the Departments at Jaffna District Secretariat.

விடுமுறை காலத்தில் பாடசாலை மாணவர்களுக்கான வானலை ஊடான கற்பித்தல் நிகழ்ச்சிநிரல்.

(A sky-wide teaching agenda for schoolchildren during the holiday season)

கொறோனா வைரஸ் தொற்று தாக்கத்திலிருந்து பாதுகாப்பதற்கான முன்னேற்பாட்டு நடவடிக்கை தொடர்பான கலந்துரையாடல் 17.03.2020 காலை 8.30மணிக்கு யாழ்மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் தலைமையில் நடைபெற்றது.

குறித்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்கள்

  • உத்தியோகத்தர்கள் தங்களை தாமே பாதுகாத்து கொள்வதுடன், அவசர தேவைகளின் போது சுழற்சி முறையில் சமூகம் தருதல் வேண்டும் எனவும் பொதுமக்களுக்கான சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டது.