தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி தொழில் பயிற்சி திறன்கள் மற்றும் இளைஞர் அலுவல்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் யாழ் மாவட்ட பாடசாலைகளில் அமைக்கப்பட்ட " திறன் வகுப்பறைகள்" 06.11.2019 ( புதன்கிழமை ) அன்று யா.நெடுந்தீவு மகா வித்தியாலயம், யா.நெடுந்தீவு றோமன் கத்தோலிக்க மகளிர் பாடசாலை, நெடுந்தீவு மங்கயகரசி வித்தியாலயம் மற்றும் யா. நெடுந்தீவு சிவப்பிரகாச வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் தேசிய கொள்கைகள் பொருளாதார அலுவல்கள் மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வீ.சிவஞான சோதி அவர்களினால் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.
|
தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள்குடியேற்றம் மற்றும் புனர்வாழ்வளிப்பு, வட மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகாரங்கள் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் யாழ் மாவட்ட செயலகத்தினால் யாழ் மாவட்டத்தில் நூறு பாடசாலைகளில் திறன் வகுப்பறைகள் பொருத்துதல் நிகழ்ச்சித் திட்டத்தின் முதற்கட்டமாக பாடசாலை அதிபர், ஆசிரியர்களிற்கு திறன் வகுப்பறைகளை பயன்படுத்தல் பயிற்சி நெறி 09-10-2019 தொடக்கம் 11-10-2019 வரை மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது . யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் ஏற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தினால் " சமுர்த்தி சௌபாக்கியா வர்த்தகக் கண்காட்சி" இன்று 17-09-2019 (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு யாழ் மாவட்ட அரசாங்க அதிபரால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் யாழ். மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள்
மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் உலர்வலய அபிவிருத்தி அமைச்சும், jica நிறுவனமும் இணைந்து "நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு பயிற்சி நெறி" யாழ் மாவட்ட செயலக மேலதிக அரச அதிபர் தலைமையில் 05.09.2019 ஆம் திகதி காலை 8.30 மணிக்கு யாழ் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இப் பயிற்சி நெறி மாவட்ட மற்றும் பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உளவளத்துணை உத்தியோகத்தர்கள் மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவி உத்தியோகத்தர்களிற்காக 12 நாட்கள் வழங்கப்படுகிறது. |





