7மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம்  ILO நிறுவனத்துடன் இணைந்து வடமாகாணத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளை வேலைவாய்ப்பினை நோக்கி ஊக்குவிப்பதற்கான செயலமர்வு மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம. பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (17.02.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக தொழிற் பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.

1

ஐனாதிபதியின் சௌபாக்கிய கொள்கையின் அடிப்படையில் “குழந்தைகளுக்கான மரத்தோட்டம்” என்ற தொனிப்பொருளில் தேசிய மரநடுகை வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்டத்திற்கான ஆரம்ப நிகழ்வு நேற்று (15.02.2021) யாழ். நல்லூர் புனித பெனடிக்ற் கத்தோலிக்க பாடசாலையில் நடைபெற்றது. 

15

நிதியமைச்சு மற்றும் இராஜாங்க அமைச்சின் கீழ் தொழிற்படுகின்ற இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் குழந்தைகளுக்கான ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்கப்பட்ட மாணவர்களில் கடந்த ஆண்டு க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த 40 மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கும் கௌரவிப்பு நிகழ்வு இன்று( 04.02.2021 )காலை 9மணிக்கு யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு. ம.பிரதீபன் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

amcFirst Quarter Meeting of the Audit & Management Committee for the year 2021 was held on 11.02.2021 at 10.30 p.m under the chairmanship of the Government Agent, Jaffna District at District Secretariat’s Auditorium. The Government Agent welcomed Director of Audit Management Department, Internal Auditor, Ministry of Home Affairs, Assistant Auditor General, Northern Province and all other participants of this meeting. 

 

1

இலங்கை சனநாயக சோசஷிச குடியரசின் 73 ஆவது சுதந்திர தின விழா மாவட்ட அரசாங்க அதிபர் க. மகேசன் அவர்கள் தலைமையில் இன்று (2021.02.04) காலை எட்டு மணிக்கு தேசிய கொடி ஏற்றலுடன் மாவட்ட செயலக வளாகத்தில் ஆரம்பமாகியது.சுதந்திர தின நிகழ்வில் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன், சர்வ மதத் தலைவர்கள், மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்( காணி), பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து கொண்டிருந்தனர்.