
சூழலுக்கு நட்புறவான முறையில் தென்னம் உற்பத்திசார் பயன்பாட்டுப் பொருட்களை மனைப் பொருளாதார விருத்தி பங்களிப்பது ஊடாக நாட்டின் தேசிய உற்பத்திக்கு பங்களிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தலைமையில் மாவட்ட செயலகத்தில் 13.07.2021காலை 11 மணிக்கு இடம்பெற்றது.

வீட்டுக்கு வீடு தென்னை மரம் "கப்ருக" 40 இலட்சம் தென்னங்கன்றுகளை நடும் தேசிய வேலைத்திட்டத்தின் யாழ்ப்பாண மாவட்ட அங்குரார்ப்பண நிகழ்வு பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்களினால் கரவெட்டியில் வழங்கி ஆரம்பித்து வைக்கப்பட்டது.

யாழ். மாவட்டத்தின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி தொடர்பான சிறப்பு கலந்துரையாடல் 02.07.2021 அன்று மாலை 4 மணிக்கு யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் யாழ்ப்பாணத்தில் சுற்றுலாத் தொழில்துறையை ஆரம்பிக்க விரும்பும் முதலீட்டாளர்களுக்கான பொறிமுறை , நெடுந்தீவு மண்கும்பான் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலாத்துறை அபிவிருத்திகளை ஏற்படுத்துவதற்கான நிதிஒதுக்கீட்டு வரைபுகளை தயார் செய்வது , மற்றும் காங்கேசன்துறையில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் முதலீடு செய்வதற்கு எமது முதலீட்டாளர்கள் தயாராக உள்ளநிலையில், அதற்குரிய நிறுவன மயப்படுத்தப்பட்ட பொறிமுறை தொடர்பிலும் இக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது.

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சௌபாக்கியா நிகழ்வு யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (07) காலை பத்து மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கிராமிய நீர்ப்பாசன அபிவிருத்திகள் தொடர்பில் ஆராயும் நீர்ப்பாசன செழுமை திட்ட முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் நேற்றைய தினம் (01.07.2021) காலை 11மணிக்கு யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.குறித்த கலந்துரையாடலில் கிராமிய வயல் நிலங்கள் மற்றும் அண்டியுள்ள குளங்கள், நீர்த்தேக்கங்கள் மற்றும் நீர்ப்பாசன அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கௌரவ அநுராத ஜயரத்ன அவர்கள் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர்,





