யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுக்கும் யாழ் மாவட்ட 51வது பிரிவின் இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்ரமசிங்க அவர்களுக்கும் இடையிலான மரியாதை நிமித்தமான சந்திப்பு இன்று(05.11.2021) மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
உள்ளூரில் இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் வசிக்கும் காணிகளற்ற குடும்பங்களுக்கு அரச நிதியில் கொள்வனவு செய்யப்பட்ட காணிகளுக்கான உறுதிகளை வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் கடந்த புதன்கிழமை (03.11.2021) யாழ்.மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இலங்கை மக்கள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் ஏற்பாடு செய்யப்படும் மின்சார பாவனையாளர்களின் பிரச்சினைகளை தீர்ப்பது தொடர்பான முன்னேற்பாட்டு கலந்துரையாடல் 01.11.2021 அன்று காலை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது .
இலங்கை மக்கள் பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவினால் வழியனுமதி, மரங்களை வெட்டுதல் அல்லது வெட்டியகற்றுதல், நஷ்டயீட்டு கொடுப்பனவு மற்றும் நஷ்டயீட்டு நிர்ணயம் ஆகியன தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (02.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
முதியோர் தேசிய செயலகத்தால் 2021ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற மீளாய்வுக் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் 28.10.2021 அன்று மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.





