25UN1ஐக்கிய நாடுகள் உலக உணவுத்திட்டத்திற்கான இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி அப்தூர் ராகிம் சிட்டுஹி அவர்களும் அவரின் அதிகாரிகளும் யாழ்மாவட்ட செயலகத்திற்கு 23.11.2021 அன்று விஜயம் செய்து மாவட்ட அரசாங்க அதிபர் திரு கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களுடன் மரியாதை நிமித்தமான சந்திப்பை மேற்கொண்டனர்.

24seed1நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு தேசிய கொள்கைத் திட்டமிடலுக்கு அமைய பின்தங்கிய கிராம பிரதேச அபிவிருத்தி , வீட்டு விலங்கின வளர்ப்பு மற்றும் சிறு பொருளாதார பயிர்ச் செய்கை மேம்பாட்டு இராஜாங்க அமைச்சர் கௌரவ சதாசிவம் வியாழேந்திரன் அவர்களின் வழிகாட்டலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உழுந்து மற்றும் பயறு பயிர்ச்செய்கை திட்டத்தின் கீழ் விதை பொதிகள் வழங்கும் நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.11.24) காலை 9.30 மணியளவில் மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
 
 
 

பாரி அறக்கட்டளை கல்விக்கான சமூகப்பணி அமையத்தினால் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் ஊடாக பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட பொருளாதார ரீதியில் நலிவுற்ற மாணவியின் கற்றல் மேம்பாட்டிற்காக 22.11.2021 ன்று  மாவட்டச் செயலகத்தில் மடிக் கணனி வழங்கிவைக்கப்பட்டது.

23disas5யாழ்ப்பாண மாவட்டத்தில் கொரோனா தொற்று, டெங்கு ஒழிப்பு மற்றும் வடகீழ் பருவப் பெயர்ச்சிக் காற்றால் ஏற்பட கூடிய அனர்த்த முகாமைத்துவ விடயங்கள் தொடர்பாக ஆராய்வதற்காக மாவட்ட மட்ட செயலணியின் கூட்டம் 23.11.2031 ன்று காலை 10 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

21centralbankgov1சிறிய மற்றும் நடுத்தர முதலீட்டாளர்களுக்கு உள்ள பிரச்சினைகள் தொடர்பில் அறிந்து தீர்வு காணும் விசேட கலந்துரையாடல் ஒன்று மத்திய வங்கி ஆளுநரின் பங்கேற்புடன் இலங்கை மத்திய வங்கியின் கிளிநொச்சி பிராந்தியக் கிளையின் ஏற்பாட்டில் 21.11.2021 அன்று காலை 8.30 மணியளவில் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.