யாழ்ப்பாண மாவட்ட சிறுகைத்தொழில் முயற்சியாளரை ஊக்குவிக்கும் செயலமர்வு 19.11.2021 காலை 8.30 மணியளவில் யாழ்.பொதுநூலகத்தில் நடைபெற்றது.
புற்றுநோய் இறப்புக்களை பதிவு செய்வது தொடர்பான பதிவாளர்களுக்கான செயலமர்வு யாழ்.மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் இன்று (12.11.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
தேசிய மரபுரிமைகள், அருங்கலைகள் மற்றும் கிராமிய சிற்பக்கலைகள் மேம்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சினால், மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்.மாவட்ட கலைஞர்களுடன் கலந்துரையாடல் இன்றையதினம் (06.11.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாவட்டத்தில் தொடரும் கனமழையின் காரணமாக இன்று 09.11.2021 யாழ் மாவட்ட பாடசாலைகள் நிறுத்தப்படுவதாக வடக்கு மாகாண ஆளுநர் அறிவுறுத்தியுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அறிவித்துள்ளார்.
33வது தேசிய இளைஞர் விளையாட்டு விழா தொடர்பான கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் நேற்று (05.11.2021) மாவட்டச் செயலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றது.





