இலங்கை நிர்வாக சேவைக்கு திறந்த போட்டிப் பரீட்சை மூலம் தெரிவு செய்யப்பட்டு யாழ்.மாவட்ட செயலகத்தில் பயிற்சிகளுக்காக இணைக்கப்பட்டுள்ள நிர்வாகசேவை அதிகாரிகளை அறிமுகம் செய்யும் ஆரம்ப நிகழ்வு இன்று (04.10.2021) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலாளர் திரு. க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய ஆரம்பிக்கப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு "அனைத்திற்கும் முன்னுரிமை சிறார்கள்" என்ற தொனிப்பொருளில் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் பலாமரக்கன்றுகளை நாட்டும் தேசிய நிகழ்ச்சித்திட்டமும், மாவட்ட சிறுவர் சஞ்சிகை வெளியீடு மற்றும் சிறுவர் கழக மாணவர்களுக்கான உபகரணங்களை வழங்கும் நிகழ்வும் இன்றைய தினம் (2021.10.01) காலை பத்துமணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யாழ் மாநகரத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான கலந்துரையாடல் இன்றைய தினம் (15.09.2021) மதியம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. நகர அபிவிருத்தி அதிகார சபையினால் யாழ் மாநகர எல்லைக்குட்பட்ட பிரதேசத்தில் திட்டமிடப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் யாழ் நகர பிரதேசத்தில் அபிவிருத்தி குழுவால் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள் அவற்றிற்கான நிதியீட்டங்கள் மற்றும் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட வரைபுகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுவரும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பான மீளாய்வுக் கலந்துரையாடல் இன்று (22.09.2021) காலை மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண மாவட்ட பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபையின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (2021.09.13) காலை பத்துமணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.இக் கலந்துரையாடலில் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கலந்து கொண்டு, கடந்த வருடத்திலிருந்து கொரோனாத் தொற்றுப் பரவலினால் பல தாக்கங்கள் ஏற்பட்டுள்ளது.





