உணவு ஆணையாளர் திணைக்களத்தினூடாக அதேநேரம் அத்தியாவசிய சேவைகள் ஆணையாளர் நாயகம் அவர்கள் இணைந்த வகையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் பொதுமக்களுக்கு தடையின்றி நியாயமான விலையில் விற்பனை செய்வதற்குரிய ஏற்பாடுகள் மாவட்ட ரீதியாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.

13Covidprevention

யாழ்ப்பாண மாவட்ட மட்ட COVID-19 தடுப்பு தொடர்பான கலந்துரையாடல் இன்று (13.08.2021 ) பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் அவர்களின் தலைமையில் யாழ்மாவட்ட செயலகத்தில் இணையவழி நிகழ்நிலையில் நடைபெற்றது.

03Jsac1

உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் மற்றும் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேசிய பணிப்பாளர் ஆகியோரின் வழிகாட்டலிற்கு அமைவாக சர்வதேச மற்றும் தேசியரீதியான அரசசார்பற்ற அமைப்புக்கள் ஊடாக நாட்டினுள் வேகமாக பரவும் கொவிட் -19 தொற்றுநோய் சூழலிற்கு மத்தியில் பணியாற்றும் கிராம சேவகர்கள், சமுர்த்தி உத்தியோகத்தர்கள்,

04Maruladyhouse2

மருதங்கேணி பெண்கள் பாதுகாப்பு இல்லம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் இன்று (04) காலை 10.00 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் கடந்த கலந்துரையாடலில் எடுக்கப்பட்ட தீர்மானங்களின் முன்னேற்றம், 2021இற்கு தேவையான மேலதிக நிதி தேவைப்பாடுகள், 2022 இற்கான நிதி ஏற்பாடுகள், கொள்கை ரீதியாக மேற்கொள்ளப்படவேண்டிய சில ஏற்பாடுகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

30Sports1

இலங்கையின் தேசியவிளையாட்டு தினத்தினை முன்னிட்டு இன்றைய தினம்(30.07.2021) காலை 8.30 மணிக்கு யாழ்மாவட்ட செயலக முன்றலில் யாழ். மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ம.பிரதீபன் அவர்களின் தலைமையில் Covid-19 சுகாதார விதிமுறைகளுக்கு அமைவாக தேசியவிளையாட்டு தின நிகழ்வுகள் இடம்பெற்றன.குறித்த நிகழ்வில் தேசியக் கொடியினை மேலதிக அரசாங்க அதிபர் அவர்கள் ஏற்றி வைத்ததை தொடர்ந்து நிகழ்வுகள் ஆரம்பமானது.