இயற்கை முறையிலான சேதனப் பசளை உற்பத்தி தொடர்பான தற்போதைய நிலவரங்களை ஆராயும் கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (09.12.2021) பிற்பகல் ஐந்து மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.
தீவக அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் நேற்றையதினம் (2021.12.09) காலை 11 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.கௌரவ வட மாகாண ஆளுநர் அவர்களின் தீவக களவிஜயத்தின் போது அவதானிக்கப்பட்ட குறைபாடுகள் மற்றும் மக்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் ஒழுங்கு செய்யப்பட்ட குறித்த கலந்துரையாடலில் , தீவக வீதி உட்கட்டமைப்பு நடவடிக்கைகள், கல்வித் துறைசார் ஆளணிப்பற்றாக்குறை படகுச்சேவை, மற்றும் பயணிகள் வீதிப் போக்குவரத்து பிரச்சனைகள்,மற்றும் சுகாதாரம், விவசாயம், சந்தைப்படுத்தல், , கழிவகற்றல் , மின்சாரம் உள்ளிட்ட விடயங்கள் விரிவாக ஆராயப்பட்டன.
மதுசாரம் மற்றும் போதைபொருள் நிலையத்தின் ஏற்பாட்டில் உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் அவர்களின் தலைமையில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான போதைப்பொருள் தடுப்பு தொடர்பான செயலமர்வு இன்றைய தினம் (07.12.2021) காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக முகாமைத்துவ திறன் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் நடைபெற்றது.
நிதியாண்டு 2021 இற்குரிய நான்காம் காலாண்டு இற்றை வரையான நிதி செயற்பாட்டு முன்னேற்ற மீளாய்வு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு. கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (2021.12.09) வியாழக்கிழமை மு.ப 9.30 மணிக்கு மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.மாவட்ட செயலக கணக்குக் கிளையினரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களுடன் இணைந்த திணைக்களங்களினது நிதி செலவீன தலைப்புக்களின் கீழ் கிடைக்கப்பெற்ற ஒதுக்கீடுகள் அவற்றின் நிதி செயற்பாட்டு தற்போதைய நிலைகள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சிறுவர், பெண்கள் தொடர்பான அபிவிருத்திக் குழுக் கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) மதியம் 11.30 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.





