18jobfair1யாழ்மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தினால் ILO நிறுவனத்தின் நிதி உதவியுடன் மாற்றுத் திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நேற்றைய தினம் (2021.12.18) காலை 9 மணிக்கு மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் உரையாற்றும் போது மாற்றுத் திறனாளிகள் தமக்கான பொருத்தமான தொழில் வாய்ப்பினை தெரிவு செய்து சமூகத்தில் முன்மாதிரியாக திகழ வேண்டும். மாற்றுத் திறனாளிகளுக்கான தொழில் வாய்ப்புக்களை வழங்கும் தொழில் நிறுவனங்களிற்கு நன்றிகளை தெரிவித்ததோடு, சமூக அபிவிருத்தியில் மாற்றுத் திறனாளிகளின் வகிபங்கு அதிகமாகவுள்ளது. எனவே நீங்கள் ஏனையவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும்" எனவும் தெரிவித்தார்.

15losspay1இழப்பீடுகளுக்கான அலுவலகத்தினால் இழப்பீட்டுக் கொடுப்பனவு வழங்கல் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையிலும், பாராளுமன்றக் குழுக்களின் பிரதித் தவிசாளரும், யாழ். மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத்தலைவருமான கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் திரு.அங்கஜன் இராமநாதன் அவர்களின் இணைப்புச் செயலாளர் திரு.சதாசிவம் இராமநாதன் அவர்களின் பங்குபற்றுதலுடனும் 2021.12.15 அன்று காலை 9 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

13gstraining4கிராம உத்தியோகத்தர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற அரச கடமைகள் மிகவும் வினைத்திறன் மற்றும் உற்பத்தித் திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்காக ஒழுங்கு முறையிலான பயிற்சிகளை வழங்கும் நோக்கமாக உள்நாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சின் ஏற்பாட்டில் கிராம அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்றைய தினம்(13.12.2021) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் காலை 9 மணிக்கு ஆரம்பமானது.

productivityl அரச துறை நிறுவனங்களுக்கான வினைத்திறனான சேவையை மதிப்பிடும் பொருட்டு தேசிய உற்பத்தித் திறன் செயலகத்தால் 2018/2019ம் ஆண்டினை தழுவி  நடாத்தப்பட்ட 2020ம் ஆண்டுக்கான  தேசிய உற்பத்தித் திறன் விருதுகள் போட்டித் தொடரில் தேசிய ரீதியில் யாழ் மாவட்ட செயலகம் முதலாம் இடத்தைப் பெற்றிருப்பதுடன் , அரச துறையில் பிரதேச செயலகங்களுக்கு இடையிலான போட்டித் தொடரில் பங்குகொண்ட 14 பிரதேச செயலகங்களும் வெற்றி பெற்றுள்ளது .

11jobfair1யாழ்ப்பாண மாவட்ட மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மாபெரும் தொழிற் சந்தை நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்களின் தலைமையில் நேற்றைய தினம் (11.12.2021) மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. 
இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்கள் கலந்துகொண்டதுடன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி. எஸ்.சி.என்.கமலராஜன் மற்றும் திரு.எஸ்.சுசிகரன் ( IOM ) மற்றும் மனித வலு வேலைவாய்ப்புத் திணைக்கள உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

மேலும், தொழில் தேடுபவர்களையும் தொழில் வழங்கும் நிறுவனங்களையும் இணைக்கும் இத்தொழிற்சந்தையில் 23 தொழில் வழங்கும் நிறுவனங்கள் பங்குபற்றியதோடு,400 வரையான தொழில் வெற்றிடங்களுக்காக 300 க்கு மேற்பட்ட தொழில் தேடுபவர்கள் கலந்து கொண்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது