யாழ். மாவட்டத்தில் நகர அபிவிருத்தி அதிகார சபையால் முன்னெடுக்கப்படுகின்ற செயற்றிட்டங்களின் தற்போதையநிலை தொடர்பாக ஆராயும் கலந்துரையாடல் யாழ்ப்பாணம் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.இக்கலந்துரையாடலில் 100 நகர அபிவிருத்தி திட்டம், வல்லைவெளி அழகுபடுத்தும் செயற்றிட்டம், பருத்தித்துறை முனை அழகுபடுத்தும் செயற்றிட்டம், திருவிழா முனையம் ஊறணி வல்வெட்டித்துறை,யாழ்ப்பாண நகர வாகன தரிப்பிட நிர்மாணம், நகர மண்டப நிர்மாணம் உள்ளிட்ட செயற்றிட்டங்களின் தற்போதைய நிலை தொடர்பில் ஆராயப்பட்டது.
எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய உயர் திருவிழா முன்னேற்பாட்டுக் கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் உற்சவத்தில் அனுமதிக்கப்படும் பக்தர்களின் எண்ணிக்கை, நீர் வழங்கல் , சுகாதார ஏற்பாடுகள், தங்குமிட வசதிகள் , உணவு ஏற்பாடுகள், உள்ளக பாதுகாப்பு ஏற்பாடு ,ஒளி ஒலி வழங்கல் ஏற்பாடுகள், போக்குவரத்து வசதி ஏற்பாடுகள்,படகு வசதிகள், தனியார் விற்பனை நிலையங்களின் அனுமதி உள்ளிட்ட பல விடயங்கள் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
யாழ்ப்பாண மாவட்ட சுகாதார மேம்பாட்டுக் குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 21.01.2022 அன்று பிற்பகல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல்,டெங்கு நோய் தடுப்பு மற்றும் மலேரியா தடுப்பு ஆகிய மூன்றுவிடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது.வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் ,2022 ஆம் ஆண்டு யாழ்.மாவட்டத்தில் 122 டெங்கு தொற்று நோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் டெங்கு கட்டுப்பாட்டுக் குழுவானது எதிர்வரும் திங்கட்கிழமை நேரடியா களங்களுக்கு செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆரம்ப நிகழ்வு
நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொருளில் நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள யாழ் மக்களுக்கான நடமாடும் சேவை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்றைய தினம் (29.01.2022) காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் நீதி அமைச்சரும் அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சட்டத்தரணியுமான கௌரவ M.U.M.அலி சப்ரி அவர்கள் தலைமையில் நடைபெற்றதோடு, இதில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் கடற்தொழில் அமைச்சருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா, கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் தோட்ட வீடமைப்பு சமுதாய உட்கட்டமைப்பு அமைச்சின் இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான், கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தவிசாளரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்பு குழு இணைத்தலைவருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் கௌரவ ஜீவன் தியாகராஜா மற்றும் நீதியமைச்சின் செயலாளர், வட மாகாண பிரதம செயலாளர், அரசாங்க அதிபர், வடமாகாண சிரேஷ்ர பொலிஸ் அத்தியட்சகர் திணைக்கள தலைவர்கள், மாகாண அமைச்சின் செயலாளர்கள், மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு அங்குரார்ப்பணம் செய்து வைத்தனர்.
யாழ்ப்பாண மாவட்ட விலை நிர்ணய குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.01.20 அன்று காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில்நடைபெற்றது.இக் கூட்டத்தில் கட்டட நிர்மாணப் பொருட்கள், போக்குவரத்து, ஏற்றுமதி மற்றும் இறக்குமதி மற்றும் ஏனைய பொருட்கள், சேவைகளின் விலை தொடர்பாகவும் ஆராயப்பட்டது.





