7sk5இலங்கை சாரணர் சங்கத்தின் யாழ்ப்பாண மாவட்டக் கிளையின் வருடாந்த பொதுச்சபைக் கூட்டம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரும், யாழ்.மாவட்ட சாரணர் சங்கத்தின் மரபுவழி கிளைச்சபை தலைவருமான கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.07 பிற்பகல் 2.30 மணிக்கு மாவட்டச்செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில், சாரணர் சங்கத்தின் பிரதம ஆணையாளர் கௌரவ ஜெனபிரித் பெர்னான்டோ அவர்களும், வடக்கு கிழக்கு விஷேட ஆணையாளர் கௌரவ எஸ்.எப்.எம்.முகீட் அவர்களும் கலந்துகொண்டதோடு, வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர், கௌரவ மாவட்ட ஆணையாளர் இ.தவகோபால், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி.எஸ்.சி.என். கமலராஜன் மற்றும் பாடசாலை அதிபர்கள், சாரணர் இயக்கத்தின் உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

4inde4"சவால்களினை முறியடிக்கும் வளமான நாளை" எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியாக கொண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 74வது தேசிய சுதந்திர தின கொண்டாட்ட நிகழ்வுகளினை முன்னிட்டு, யாழ்ப்பாண மாவட்டச் செயலக சுதந்திர தின நிகழ்வு 04.02.2022 அன்று யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் காலை 8.19 மணிக்கு தேசிய கீதத்தோடு தேசியக் கொடி ஏற்றப்பட்டு, சர்வமதத்தலைவர்களின் ஆசிகளுடன் சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக ஆரம்பிக்கப்பட்டது.
 

1IOM1IOM அரசசார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையில் OFERR(CEYLON) நிறுவனமும் இணைந்து இந்தியாவிலிருந்து 2017ம் ஆண்டுக்குப் பின் மீளக்குடியமர்ந்த மக்களிற்கான வாழ்வாதார உதவிகள் நேற்றைய தினம் (2022.02.01) மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் மூலம் கையளிக்கப்பட்டது.

இந்தியாவிலிருந்து 2017ம் ஆண்டுக்குப் பின் மீளக்குடியமர்ந்த மக்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளுக்கு அமைவாக ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் ரூபா பெறுமதியான தொழில் உபகரணங்கள் தெரிவு செய்யப்பட்ட ஒன்பது பயனாளிகளுக்கு முதற்கட்டமாக வழங்கிவைக்கப்பட்டுள்ளது.

presmetI. Hana Singer, Resident Representative of Navin Sri Lanka, met and discussed with Jaffna District Government agent Ganapatipillai Mahesan yesterday (2022.02.01).

 

1agrimeet4மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் 2022.02.01 காலை 9.30 மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில், மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் "மக்கள் விவசாய நிலங்களினை முழுமையாக பயன்படுத்த வேண்டுமெனவும், விவசாய நிலங்களில் கட்டிடங்கள் அமைப்பதற்கான அனுமதி கோரும் பட்சத்தில் அதற்கான அனுமதியை வழங்கும் திணைக்களங்கள் உரியவகையில் ஆராய்ந்து தோட்டக் காணிகளினை பாதுகாத்தலிற்கு முன்னுரிமை வழங்கி தீர்மானங்களை மேற்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்தார்.
மேலும், விவசாயிகளுக்கான காப்புறுதித் திட்டங்கள் முறையாக செயற்படுத்தப்படுவதோடு, வங்கிகள் விவசாயிகளிற்கு கடன் வழங்கும் போது அதுபற்றிய பொதுவான விழிப்புணர்வுகளை அவர்களுக்கு வழங்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.